உங்களுக்கு எத்தனை வகை வாழைப்பழம் தெரியும்? எந்த பழம் எந்த நோயை குணமாக்கும் என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் யாருக்கு தெரியுமா? இந்தியர்களுக்குத்தான். உலகின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதம். இந்தியாவில் முன்னிலை வகிப்பது நம் தமிழகம்தான். இதில் மற்றொரு ஆரோக்கியமான விஷயம் நம் சுயதேவைக்காகவும், உள்ளூர் சந்தை விற்பனைக்காகவும் மட்டுமே பெரும்பாலான உற்பத்தி பயன்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.

உலகில் மொத்தம் 3000 வாழை வகைகள் இருக்கின்றன. இந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படுவது 30! அளவிலும், ருசியிலும், ஊட்டச்சத்திலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பூவன் பழம்:

பூவன் பழம்:

அளவில் சிறியவை. ஒரு வாழைக்குலையில் 100 முதல் 150 பழங்கள் உண்டு. மூலநோய்களுக்கு உகந்தது.

ரஸ்தாளி:

ரஸ்தாளி:

மருத்துவ குணங்கள் குறைவெனினும், ருசியில் உயர்ந்தது. பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள், சாலட்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

மொந்தம் பழம்

மொந்தம் பழம்

உடல் வறட்சியைப் போக்கும்; காமாலையைத் தடுக்கும்.

மலை வாழைப்பழம் (பச்சைப் பழம்):

மலை வாழைப்பழம் (பச்சைப் பழம்):

குழந்தைகளுக்கு மிகப்படித்தமான பழம். . இரத்த விருத்தி செய்யும்.

நேந்திரம்பழம்:

நேந்திரம்பழம்:

பச்சையாகவோ, அவித்தோ, சிப்ஸ் வடிவிலோ உண்ணப்படுகிறது. குடற்புழுக்கள் நீக்குகிறது. புரதம் அதிகம் உண்டு.

கற்பூரவள்ளி பழம்:

கற்பூரவள்ளி பழம்:

வாழை ரகங்களிலிலேயே மிக இனிப்பானது. நீண்ட நாட்களுக்கு வைத்து உண்பது கடினம்; கனிந்து முற்றிவிடும்.

செவ்வாழை:

செவ்வாழை:

நோய் எதிர்ப்பு சக்தி; உடலில் தாது பலமும் அதிகரிக்கும்.

கதளி மற்றும் எலச்சி

கதளி மற்றும் எலச்சி

கதளி ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால் செல்களின் செயல்பாட்டை சீர்செய்கிறது.

எலைச்சி: சிறியவையாயினும் மிகச் சுவையானவை; மலச்சிக்கலுக்கு சிறந்தது.

பேயன் பழம்:

பேயன் பழம்:

வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறும். உடல்சூடு தணியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Different types of Banana and their benefits

Different types of Banana and their benefits
Subscribe Newsletter