இரத்த சோகை போக்கி, சிறுநீரக பாதிப்புகளை சரிசெய்யும் சுரைக்காய்!!

Posted By: Gnaana
Subscribe to Boldsky

நமது கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் காணப்படும் ஒரு தொன்மையான காய் வகை, சுரைக்காய். கொடிகளில் படரும் தன்மையுள்ள சுரைக்காயின் இலை, பிஞ்சு, காய் மற்றும் பழங்கள் மனிதர்க்கு நன்மையளிப்பவை. வீடுகளின் கூரைகளில், வேலிகளின் மேல், அல்லது தரையில் எங்கும் பரவி வளர்பவை, சுரைக்காய்.

சுரைக்காய் பெரிய நீர்க்குடுவை போன்ற வடிவத்தில் இருப்பதால், நன்கு முற்றிய சுரைக்காயின் உள்ளே உள்ள சதைப்பகுதிகளை நீக்கி, அவற்றை வெயிலில் காய வைத்து, அக்காலங்களில் நீரை சேமிக்க, மற்றும் வைத்தியர்களின் மருந்துகளை சேகரித்து வைக்க, வெளியூருக்கு எடுத்துச்செல்ல, பயன்படுத்தி வந்தனர். இந்த சுரைக்காய் குடுவை பொருளை சேமிக்க மட்டுமல்லாமல், பொருள்களை நீண்ட காலம் கெடாமல், பாதுகாக்கும் தன்மையும் மிக்கது.

Bottle gourd benefits for treating anemia and kidney disorders

கிராமங்களில் நாட்டுக்காய்கள் என்று சில காய்கறிகளை, குறிப்பிடுவார்கள், அதில் சற்று விலையில் குறைந்தது இந்த சுரைக்காய், ஆயினும் உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது. கிராமங்களில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, சிறுவர்கள் அல்லது அந்த பேச்சுக்கு தொடர்பு இல்லாதவர்கள் அவர்களிடம் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்கும்போது, "சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்று சொன்னேன்" என்று குறும்பாக, பதில் சொல்வார்கள்.

எங்கள் பேச்சில் நீங்கள் குறுக்கிடவேண்டாம், மேலும், எங்களுக்கு, உங்களை பேச்சில் சேர்த்துக் கொள்ள விருப்பம் இல்லை என்பது, இதற்கு பொருள். அதை உணர்ந்து அவர்களும், விலகிச் சென்று விடுவர்.

புரோட்டின், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் தாதுக்கள் அதிகம் உள்ள சுரைக்காய்களில், மிக அதிக அளவில் நீர்ச்சத்தும் உள்ளதால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகிறது. உடல் சூட்டை தடுத்து, உடலை கோடைக்கால வெப்ப வியாதிகளில் இருந்து காக்கிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பை குறைக்கும் :

கொழுப்பை குறைக்கும் :

சுரைக்காய் உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து, செரிமான பாதிப்புகளை நீக்கி, எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியை அளிக்கிறது.

சிலருக்கு, முகத்தில் எண்ணை வழியும் சருமமாக இருக்கும், இதனால் அவர்களின் முகம் எப்போதும், ஒரு வாடிய தன்மையில் காணப்படும், இந்த நிலையை மாற்றி, அவர்களின் முகத்தை பொலிவுடன் திகழ வைக்க, சுரைக்காய் சாறெடுத்து சிறிது இந்துப்பு கலந்து அதை பருகிவர, முகத்தில் எண்ணை வடிவது நிற்கும்.

பொதுவாக அதிக குளிர்ச்சித் தன்மை மிக்க சுரைக்காய் போன்ற காய்கறிகளை குளிர் காலத்தில் சாப்பிடும்போது, அதில் இந்துப்பு, சுக்கு, மிளகு, மல்லித்தூள் இவற்றை கலந்து, காய்கறி கலவை போல, சாப்பிடுவதன் மூலம், குளிர்ச்சியான பொருளை உட்கொண்டதால் ஏற்படும் சளி பிடிப்பதைத் தவிர்க்கலாம். மேலும், நன்கு பசியெடுக்கும்.

இந்த சுரைக்காய் சாறே, அதிக உடல் எடையை குறைக்கும், தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி, முடி கருமையாக வளர்வதை, ஊக்கப்படுத்தும்.

சுரைக்காய் சாற்றில் சிறிது நல்லெண்ணை கலந்து பருகி வர, இரவில் உறக்கமின்மை வியாதி நீங்கி, நல்ல ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.

சுரைக்காய் இனிப்பு பச்சடி

சுரைக்காய் இனிப்பு பச்சடி

சுரைக்காயை வேக வைத்து, வெல்லத்தை இட்டு நன்கு குழைத்து, அதில் கடுகு, பருப்புகள் தாளித்து, கறி வேப்பிலை சேர்த்து இறக்க, குழந்தைகள் விரும்பும் இனிப்பான சுரைக்காய் பச்சடி தயார். இதை, மதிய உணவில் சாதங்களுடன் தொட்டுச் சாப்பிட, சுவையாக இருக்கும். இதனால், குழந்தைகளின் பசி உணர்வு அதிகரித்து நன்கு சாப்பிடுவர், பெண்களின் உடல் உபாதைகள் சரியாகும்.

சுரைக்காய் கூட்டு

சுரைக்காய் கூட்டு

சுரைக்காயை வேக வைத்து, மேற்சொன்ன முறையில் வெல்லம் சேர்க்காமல் சமைக்க, சுரைக்காய் கூட்டு தயார், இதுவும், பெரியவர்களுக்கு ஏற்ற, எளிதில் செரிமானமாகும் தன்மைமிக்க ஒரு உணவாகும். நோயால் பாதித்து உடல் தேறியவர்களுக்கு பித்தத்தை சரிசெய்து , உடலை வலுவாக்கும் தன்மை, சுரைக்காய்க்கு உண்டு.

சுரைக்காய் ஜுஸ்

சுரைக்காய் ஜுஸ்

சுரைக்காயின் சதைப் பாகங்களை எடுத்து தண்ணீர் விட்டு, ஜாரில் இட்டு, மிக்சியில் அரைத்து எடுக்க, சுரைக்காய் ஜுஸ் தயாராகும், இதில் சுவைக்கேற்ப தேன் அல்லது பனை வெல்லம் கலந்து பருகி வர, உண்ட உணவுகள் செரிக்காமல், வயிற்றில் தங்கி தொல்லைகள் கொடுத்த நிலை மாறி, அவை யாயும் செரிமானமாகி, வயிறு அமைதியாகும்.

சுரைக்காய் ஜூஸில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சத்தும் இருப்பதால், கருவுற்ற தாய்மார்கள் இந்த ஜூசை பருகி வர, கருவில் உள்ள மகவின் வளர்ச்சி, சீராக விளங்கும்.

நீர்ச்சத்து மிக்க சுரைக்காய் ஜுசை பருகும் உடல் எடை மிகுந்தவர்களுக்கு, அவர்களின் கொழுப்புகளை கரைத்து, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடலின் எடையை குறைப்பதில், பெரும் பங்கு வகிக்கிறது.

இதர நன்மைகள் :

இதர நன்மைகள் :

பெண்களின், இரத்த சோகை வியாதியை போக்கி, இரத்தத்தை சுத்திகரிக்கும் அருமருந்தாக, சுரைக்காய் ஜூஸ் விளங்குகிறது.

சுரைக்காய் தேன் கலந்த ஜுஸ், உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்த ஓட்டத்தை சமமாக்கி, உடலின் சீரான இயக்கத்திற்கு, வழி செய்கிறது.

உடலில் வெளியேறாமல் தேங்கும் சிறுநீரை வெளியேற்றி, சிறுநீரக நச்சுத் தொற்றுகள், கற்கள் மற்றும் சிறுநீரகத்தை தூய்மை செய்து, சிறுநீரகத்தை காக்கிறது.

சுரைக்காய் ஜூஸ் கல்லீரல் நோயை சரியாக்கும் ஆற்றல்மிக்கது, வயிற்றில் புண்களை ஏற்படாமல் காக்கும் தன்மை மிக்கது, மேலும், மன அழுத்தத்தை குறைத்து, மன இறுக்கத்தை சரியாக்குகிறது.

நலன்கள் பல நமக்கு தந்தாலும், சுரைக்காயை ஒருபோதும், பச்சையாக சாப்பிடக்கூடாது, பெரிய வயிறு உள்ளவர்கள், குரலை காக்க வேண்டிய பாடகர்கள் யாவரும், சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டும், அது போல, பெண்களின் மாத விலக்கின் போது சுரைக்காயை உணவில் தவிர்க்க வேண்டுமென, வைத்திய சாத்திரங்கள் சொல்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bottle gourd benefits for treating anemia and kidney disorders

Bottle gourd benefits for treating anemia and kidney disorders
Story first published: Saturday, September 30, 2017, 14:35 [IST]