ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண் மற்றும் பெண்களின் உடல் நன்கு செயல்படுவதற்கு தேவையான ஊட்டச்சத்து தொகுப்பு வேறுபடும். அதேப் போல் ஆண் மற்றும் பெண்களைத் தாக்கும் நோய்களின் அபாயமும் வேறுபடும். எனவே ஆண்கள் மற்றும் பெண்கள், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்களை விட ஆண்களின் தசை அடர்த்தி அதிகம். எனவே பெண்களை விட ஆண்கள் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதேப் போல் உடல் செயல்பாட்டைப் பொறுத்து உட்கொள்ளும் கலோரியின் தேவையும் அதிகரிக்கும்.

Best Foods That All Men Should Eat

இக்கட்டுரையில் ஆண்கள் ஆரோக்கியமாகவும் வலிமையுடனும் இருப்பதற்கு உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள உணவுப் பொருட்கள் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஆண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள அல்லிசின், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் ஆகும். இது ஆண்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மற்றும் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

பசலைக் கீரை

பசலைக் கீரை

பசலைக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து முழுமையாக நிறைந்துள்ளது. அதோடு, இதில் பீட்டா-கரோட்டீனும் நிறைந்துள்ளதால், பார்வை பிரச்சனை வருவதைத் தடுக்கும்.

பூசணிக்காய்

பூசணிக்காய்

பூசணிக்காயில் இருக்கும் அதிகளவிலான ஜிங்க் சத்து, எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை மேம்படுத்த உதவும்.

பாதாம்

பாதாம்

ஆண்களுக்கு மிகச்சிறந்த ஸ்நாக்ஸாக பாதாம் உள்ளது. இதற்கு அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் சத்து தான் காரணம். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 பாதாமை தவறாமல் சாப்பிடுங்கள்.

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ்

ஆண்கள் சோயா பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், அதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியம் எலும்புகளின் வலிமையை மேம்படுத்தும்.

தக்காளி

தக்காளி

தக்காளி ஆண்களுக்கு மிகச்சிறப்பான உணவுப் பொருள். பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கு தான் இதய சம்பந்தமான பிரச்சனைகள் அதிகம் வரும். ஆனால் தக்காளியை ஆண்கள் அன்றாட உணவில் சேர்ப்பதால், அதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

பிஸ்தா

பிஸ்தா

பாதாமிற்கு அடுத்தப்படியாக ஆண்களுக்கான சிறந்த ஸ்நாக்ஸாக இருப்பது பாதாம். இதில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. மேலும் பிஸ்தா கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி, இதயத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

ஆண்கள் முட்டைக்கோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், அத்தியாவசிய வைட்டமின் கே நிறைந்ததோடு, கொலஸ்ட்ரால் சிறிதும் இல்லை. ஆகவே இதை அடிக்கடி சாப்பிட்டால், ஆண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, வைட்டமின் பி9 சத்தும் ஏராளமாக நிறைந்துள்ளது. இத்தகைய ஆரஞ்சு பழத்தின் ஜூஸை தினமும் குடித்தால், உடலில் இரத்த ஓட்டம் மேம்படும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும் அதிகளவிலான வைட்டமின் ஏ, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்த உதவும். ஆகவே இதை வேக வைத்து ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சாப்பிடுவது நல்லது.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் டயட்டரி நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், இதை ஆண்கள் உட்கொள்ள செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் ஊக்குவிக்கப்படும். மேலும் இதில் வைட்டமின் பி6 சத்தும் அதிகம் நிறைந்துள்ளது.

கிவி

கிவி

கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதோடு, மனக்கவலையால் போராடுவதைத் தடுக்கும். ஆகவே அடிக்கடி கவலைக் கொள்பவர்கள், இப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படும் மற்றும் ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தால் வரும் நோய்களை எதிர்த்துப் போராடும்.

கடுகு

கடுகு

கடுகில் உள்ள அதிகளவிலான ஃபோலேட், எடையைக் குறைக்க உதவும். எனவே அன்றாட சமையலில் கடுகு எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியில் பொட்டாசியம் உள்ளது. இது உடலின் ஆற்றலை அதிகரிக்கும். அதோடு இதில் உள்ள லைகோபைன், ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.

முந்திரி

முந்திரி

முந்திரியில் உள்ள அதிகளவிலான மக்னீசியம், கட்டுமஸ்தான தசைகளைப் பராமரிக்க உதவும். ஆகவே ஜிம் சென்று உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நினைக்கும் ஆண்கள் முந்திரியை சாப்பிடுவது நல்லது.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்புக்களில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் நிறைந்திருப்பதால், இது அன்றாட செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலை அளித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

காட்டேஜ் சீஸ்

காட்டேஜ் சீஸ்

காட்டேஜ் சீஸில் உள்ள கேசின் மற்றும் வே புரோட்டீன், தசைகளின் வளர்ச்சி மற்றும் வலிமையை மேம்படுத்த உதவும். ஆகவே கட்டுமஸ்தான உடலைப் பெற நினைக்கும் ஆண்கள், இதை சாப்பிடுவது நல்லது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

வைட்டமின் சி அதிக நிறைந்த ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

தேங்காய்

தேங்காய்

லாரிக் அமிலம் நிறைந்த தேங்காய், உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை மேம்படுத்த உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Foods That All Men Should Eat

Men and women require a different set of nutrients for their bodies to function well. Here we listed some of the best foods that all men should eat. Read on...