ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவையா? சாப்பிட்டால் உயிரே கூட போகலாம் தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

ஆப்பிள் மிகவும் சத்தான ஒரு பழம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் ஆப்பிள் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவை. இதில் சையனைடு உள்ளது. இந்த ஆப்பிள் விதைகளை சாப்பிட்டால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமிக்டாலின்

அமிக்டாலின்

ஆப்பிள் விதைகளில் அமிக்டாலின் உள்ளது. இது மனிதனின் செரிமான மண்டலத்துடன் தொடர்பு கொள்ளும் போது சர்க்கரை மற்றும் சயனைடை வெளிப்படுத்துகிறது. இது உடலின் உட்பகுதியில் ஹைட்ரஜன் சயனைடாக மாற்றப்படுகிறது. இது கடுமையான நச்சுத்தன்மையை கொண்டுள்ளது.

சயனைடு எப்படி செயல்படுகிறது?

சயனைடு எப்படி செயல்படுகிறது?

சயனைடு பழங்காலமாக பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப்பொருளாகும். சயனைடு ஆக்ஸிஜன் சப்ளையை தடைசெய்து விடுகிறது. இந்த சயனைடு ஆப்ரிகட்ஸ், செர்ரி, பிளம்ஸ் ஆகியவற்றிலும் இருக்கிறது. இந்த விதைகளில் கடுமையான பாதுகாப்பு படலம் உள்ளது.

விஷத்தன்மை!

விஷத்தன்மை!

இந்த விதைகளை எவ்வளவு சாப்பிட்டால் விஷத்தன்மை உண்டாகும் என்றால், 200 அதாவது ஒரு கப் அளவு எடுத்துக்கொண்டால், இது உடலை கடுமையாக பாதிக்கும்.

பாதிப்புகள்

பாதிப்புகள்

இந்த விதைகளை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால், இது இருதயம், மூளை ஆகியவற்றை பாதித்துவிடும். கோமா நிலை மற்றும் இறப்புகள் கூட அரிதாக நடைபெறலாம். இதனை மிகவும் அதிகமான அளவு எடுத்துக்கொண்டால், சுவாசக்கோளாறு, மூச்சுச்திணறல், இதயத்துடிப்பு அதிகமாவது, இரத்த அழுத்த குறைவு போன்றவை உண்டாகும்.

மிக குறைந்த அளவு உண்டால்?

மிக குறைந்த அளவு உண்டால்?

குறைந்த அளவு ஆப்பிள் விதைகளை உட்கொண்டால், வாந்தி, தலைவலி, வயிற்று வலி, மயக்கம், சோர்வு ஆகியவை உண்டாகும். எனவே இதில் கவனம் தேவை.

 உடல் எடை பொருத்து மாறுபடும்

உடல் எடை பொருத்து மாறுபடும்

இந்த சயனைடின் அளவு ஒவ்வொருவரின் உடல் எடைக்கு தகுந்தது போல வேறுபடும். ஒரு மனிதனுக்கு 0.3 முதல் 0.35 மில்லி கிராம் வரையிலான சயனைடு ஆபத்தை விளைவிக்கும். ஒரு கிராம் ஆப்பிள் விதையில், 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு உள்ளது.

எச்சரிக்கை!

எச்சரிக்கை!

ஆப்பிள் சாப்பிடும் முன்னர் அதன் விதைகளை முற்றிலும் அகற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது. அப்படியே அதன் விதைகளை சாப்பிட்டுவிட்டால் அதை வெளியில் உமிழ்ந்துவிடுங்கள். இது செரிமான மண்டலத்தை சென்றடைந்தால் தான் சயனைடாக மாறும் என்பதால், உமிழ்ந்துவிடுவதால் எதுவும் ஆகாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Apple seeds are poisonous

Apple seeds are poisonous
Story first published: Friday, August 18, 2017, 15:27 [IST]