நீங்கள் என்றும் இளமையுடன் இருக்க தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய 5 விட்டமின்கள்!!

Written By:
Subscribe to Boldsky

இளமையான தோற்றம் கிடைக்க நீங்கள் வெளியில் பூசும் மேக்கப் சாதனங்களில் 1 சத்வீதம் கூட இல்லை. உள்ளிருந்து பெறப்பெறும் போஷாக்கு முக்கியமாய் விட்டமின்கள் உங்கள் இளமையான தோற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.

Vitamins that you should take everyday

உங்களின் நீளமான கூந்தலும், இளமையான சருமமும் உங்கள் ஆரோக்கியத்தை சொல்லும். அவ்வாறு இள்மையான தோற்றம் பெற நீங்கள் என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டுமென தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பயோடின் :

பயோடின் :

பயோடின் நீரில் கரையும் விட்டமின். செல்களை புதுப்பிக்கும் வேலையை செய்கிறது. அதோடு கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

இது உடலில் சேமிக்கப்படாது. ஆகவே தினமும் எடுத்துக் கொண்டால் இள்மை எப்போதும் உங்கள் வசம் இருக்கும்.

உணவுகள் - மஷ்ரூம், சாலமன் மீன், பீ நட் பட்டர், முட்டை, அவகாடோ.

விட்டமின் ஏ :

விட்டமின் ஏ :

விட்டமின் ஏ செல் வளர்ச்சியை தூண்டும். சுருக்கங்களை போக்கும். கண் பார்வையை அதிகரிக்கும். ஃப்ரீ ரேடிகல்ஸை எதிர்க்கும். நச்சுக்களை அகற்றும்.

ஆனால் அளவுக்கு மிக அதிகமாக விட்டமின் ஏ எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அவை நச்சுக்களை உண்டாக்கும்.

உணவுகள் : கேரட், பசலை, காட் லிவர் எண்ணெய், முட்டை,

விட்டமின் ஈ :

விட்டமின் ஈ :

இது மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். சுருக்கங்களை நெருங்க விடாது. உடல் எடையை குறைக்கும்.

தேவையற்ற கழிவு, நச்சு, தீய விளைவை தரும் ஃப்ரீ ரேடிகல்ஸ் ஆகியவ்ற்றை அழிக்கும். இளமையான தோற்றத்தை தருவதில் முதன்மையான விட்டமின் இது.

உணவுகள் : பாதாம் , அவகாடோ, ப்ருகோலி.

விட்டமின் சி :

விட்டமின் சி :

விட்டமின் சி சிட்ரஸ் உணவுகளில் அதிகம் உள்ளது. இதுவும் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

இளமையாக இருக்க கோலாஜன் அதிகமாக இருக்க வேண்டும். விட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

உணவுகள் :

ஆரஞ்சு, புருக்கோலி, கிவி, எலுமிச்சை, ஸ்ட்ரா பெர்ரி, காலே ஆகியவ்ற்றில் அதிகம் உள்ளன.

விட்டமின் டி :

விட்டமின் டி :

நீங்கள் இளமையுடன் இருக்க மிக முக்கிய தேவை சூரிய ஒளி. காலை 6 மணி இளம் வெயில் குறைந்தது 10 நிமிடமாவது நின்றால் உங்கள் செல்களை ரிப்பேர் செய்யும்.

உடல் பாதிப்புகளை சரிப்படுத்தும். இள்மையான சருமம், உறுதியான எலும்புகளை தருவது நிச்சயம். குறிப்பாக குளிர்காலத்தில் தேவையான சத்திற்கு சூடு பொறுக்கும் சூரிய ஒளியில் உலாவுங்கள்.

உணவுகள் : சாலமன் மீன், மஷ்ரூம், முக்கியமாய் சூரிய ஒளியில் நிறக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vitamins that you should take everyday

5 Important vitamins to consume everyday to fight against ageing .
Story first published: Thursday, November 3, 2016, 11:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter