For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்றுப் போக்கை உண்டாக்கும் உணவுகள் எவை தெரியுமா?

வயிற்றுப் போக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. கிருமிகளின் தொற்று, அஜீரணக் கோளாறு, ஃபொட் பாய்ஸன் என கூறலாம். அதுபோலவே சில வகை உனவுகள் வயிற்றுப் போக்கை உண்டாக்கும்.

|

வயிற்றுப் போக்கிற்கு கிருமிகள் மட்டும் காரணம் என்று நினைக்கிறீர்கள். இல்லை. சில உணவுகளும் உங்களின் வயிற்றுப் போக்கிற்கு காரணமாகும்.

அஜீரனத்தால் உண்டாகும் வயிற்றுப் போக்கைப் பற்றி இந்த கட்டுரை அல்ல. அதைப் போலவே சில வகை உணவுகள் குடல்களில் அதிகமாக இறுக்கத்தை உண்டாக்கி, உணவை சரியாக உட்கிரகிக்காமல் மலக்குடலுக்கு தள்ளும்.

These foods may cause for your Diarrhea

அத்தகைய உணவுகள் பற்றி தெரிய ஆர்வமாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மாற்றுச் சர்க்கரை :

மாற்றுச் சர்க்கரை :

குளுகோஸிற்கு பதிலாக பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் சுக்ரோஸ், சார்பிடால் கலந்த இனிப்பு வகைகள் உங்கள் குடலில் அதிக நெகிழ்வுத்தன்மையை உண்டாக்கிவிடும். இதனால் வயிற்றுப் போக்கு உண்டாகக் கூடும்.

காஃபி :

காஃபி :

சிலர் காஃபி குடித்ததும் டாய்லெட்டிற்கு போவதை கவனித்திருக்கிறீர்களா? இதர்கு காரணம் காஃபைன் குடலில் இறுக்கத்தை அதிகம் உண்டாக்குகிறது. இதனால் வயிற்றுப் போக்கு உண்டாகும். அடிக்கடி காஃபி குடித்தால் மலச்சிக்கலை இலகுவாக்காது. மாறாக வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

மது :

மது :

மது உங்கள் குடல்களில் எரிச்சலை உண்டாக்கும். இது ஜீரண மண்டலத்தை மிகவும் துரிதப்படுத்துகிறது. இது உடலுக்கு நலதில்லை. ஆகவேதான் வயதனவர்களுக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு வருவதற்கு மதுவும் காரணமாகும்.

பால் பொருட்கள் :

பால் பொருட்கள் :

உங்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உன்ணும்போது வயிற்றுப் போக்கு உண்டாகும்.

கோதுமை மற்றும் பார்லி உணவுகள்

கோதுமை மற்றும் பார்லி உணவுகள்

கோதுமையிலுள்ள குளுடன் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். அது ஒரு வகை புரதமாகும். இது உடலில் ஒவ்வாமையை உண்டாக்கி வயிற்றுப் போக்கை உண்டு பண்ணிவிடும்.

 நார்சத்து உணவுகள் :

நார்சத்து உணவுகள் :

நார்சத்து உணவுகள் நல்லதுதான். ஆனால் அளவுக்கு மீறிய நார்சத்து கொண்ட உணவுகள் குடல்களில் அதிக நெகிழ்வுத்தன்மையை உண்டாகி வயிற்றுப் போக்கை தந்துவிடும். உங்களுக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கலாம்.

துரித உணவுகள் :

துரித உணவுகள் :

துரித உணவுகளில் இருக்கும் கொழுப்பு எளிதில் ஜீரணிக்க முடியாதுதான். அதே சமயம் அவற்றின் பசைத்தன்மை குடல்களில் ஒட்டிக் கொண்டு எதிரியாக மாறிவிடும். இதனை தொடர்ந்து ஒவ்வாமை வயிற்றுப் போக்கு உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These foods may cause for your Diarrhea

These foods may cause for your Diarrhea
Story first published: Tuesday, December 13, 2016, 16:14 [IST]
Desktop Bottom Promotion