இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள்!

Posted By:
Subscribe to Boldsky

போதிய உடல் உழைப்பு இல்லாமை, மோசமான உணவுகளை உண்பது, அதிகப்படியான இறைச்சிகளை சாப்பிடுவது போன்றவற்றால் உடல் மற்றும் இரத்தத்தில் டாக்ஸின்கள் அதிகமாக சேர்கின்றன.

இப்படி இரத்தத்தில் டாக்ஸின்கள் அதிகம் சேர்வதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து, பல நோய்கள் உடலில் குடியேற வழிவகுக்கும்.

எனவே அடிக்கடி இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஒருவர் இரத்தத்தை அடிக்கடி சுத்தம் செய்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் தடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

இங்கு இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் சில உணவுகளும், மூலிகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் குளுதாதயோன் என்னும் புரோட்டீன் உற்பத்தியை தூண்டி, இரத்த மண்டலத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். மேலும் எலுமிச்சை உடலில் அத்தியாவசிய நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து, டாக்ஸின்களை கரையும் பொருட்களாக மாற்றி உடலில் இருந்து சிறுநீரின் வழியே வெளியேற்றும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குர்குமின் பல்வேறு நன்மைகளை வழங்கும். அதில் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவது, டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே அடிக்கடி நீரில் மஞ்சள் தூளை கலந்து குடியுங்கள்.

கேரட்

கேரட்

கேரட்டில் குளுதாதயோன் என்னும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது கல்லீரலை சுத்தம் செய்ய உதவும் ஓன்று. அதுமட்டுமின்றி கேரட்டில் வைட்டமின் ஏ, பி, சி, கே மற்றும் பொட்டாசியம் போன்றவைகளும் உள்ளதால், இவை உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். இதனால் உடலியக்கம் சீராக இருக்கும். ஆகவே அடிக்கடி கேரட் ஜூஸ் அல்லது கேரட்டை எடுத்து வாருங்கள்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லி இரத்தத்தில் உள்ள மெர்குரியை வெளியேற்றும். இந்த மெர்குரியானது ஒருகுறிப்பிட்ட உணவுகளின் வழியேயும், மாசடைந்த காற்றின் மூலமும் உடலினுள்ளே நுழைகிறது.

பாகற்காய்

பாகற்காய்

பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பல்வேறு பிரச்சனைகளையும், இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களையும் நீக்க உதவும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, செரிமான பிரச்சனை, குடலியக்க பிரச்சனை, உடல் பருமன் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். ஆகவே அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து வாருங்கள்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடனட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள், கிருமிகள் மற்றும் ப்ரீ ராடிக்கல்களை உடலில் இருந்து வெளியேற்றும்.

வேப்பிலை

வேப்பிலை

பல நூற்றாண்டுகளாக இரத்தத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மூலிகைப் பொருள் தான் வேப்பிலை. இந்த வேப்பிலையின் கொழுந்தை உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கும். குறிப்பாக உடல் மற்றும் இரத்தம் சுத்தமாகும்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நல்ல பாதுகாப்பை வழங்கும். முக்கியமாக பீட்ரூட் கல்லீரலைத் தூண்டி இரத்த ஓட்டத்தில் இருந்து டாக்ஸின்களைப் பிரித்தெடுத்து வெளியேற்றும். அதற்கு பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் கூட இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும். அதிலும் ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இரத்தம் மற்றும் குடலை சுத்தம் செய்ய உதவும். ஆகவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவில் இருக்கும் குளுதாதயோன், இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும். எனவே இப்பழம் கிடைத்தால், தவறாமல் வாங்கி மில்க் ஷேக் போட்டு குடியுங்கள்.

துளசி

துளசி

துளசி கூட இரத்தத்தை சுத்தம் செய்யும். மேலும் இது சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். ஆகவே பெருமாள், அனுமன் கோவிலில் துளசி கொடுத்தால் தவறாமல் சாப்பிடுங்கள்.

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள சல்பர் சிறந்த சுத்தம் செய்யும் பண்பைக் கொண்டது. இது கல்லீரலில் அத்தியாவசிய நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை முறையாக வெளியேற்றும். எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது பூண்டை பச்சையாக சாப்பிடுங்கள். முக்கியமாக பூண்டு உடல் எடையையும் குறைக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Magical Blood Purifying Herbs And Foods

Apart from medical treatments, certain herbs and foods help to purify the blood naturally. 15 such natural blood purifying agents are...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter