For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் இதயத்தை பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான இரண்டு விஷயம்

|

அந்த காலத்தில் குழந்தைகள் ஓடியாடி விளையாடினார்கள். இதனால்தான் மூளையும் இதயமும் ஒரு சேர செயல்பட்டு ஆரோக்கியமான தேகம் பெற்று வளர்ந்தார்கள். ஆனால் இன்று குழந்தைகள் கம்ப்யூட்டர், டிவிக்குள்ளே மூழ்கி கிடக்கிறார்கள். போதிய உடற்பயிற்சியும் இல்லை. அதிகமான கலோரி உணவுகளை சாப்பிடுகிறார்கள்.

Improper Diet may cause for poor heart health to children

அதிக கலோரியுடன், குறைந்த உடற்பயிற்சி இல்லாத குழந்தைகளுக்கு இதய நோய்களும் சீக்கிரத்தில் தாக்கிவிடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மினேசோட்டா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளின் இதய நலன் பற்றிய ஆய்வை சமர்பித்துள்ளனர். இந்த ஆய்வு அமெரிக்கன் ஹார்ட் அஸோசியேஷன் ஜர்னல் என்ற இதழில் வெளிவந்துள்ளது.

இதில் 90 சதவீத 2-19 வயதுள்ள பிள்ளைகளுக்கு அதிக அளவு கலோரி உடலில் இருக்கிறது. அவர்கள் அதிக கார்போஹைட்ரேட் உணவுகளையே சாப்பிடுகிறார்கள்.

ஆனால் உடற்பயிற்சிகள் சிறிதுமில்லை. அவர்களின் உடல் எடை கூடுதலாக இருக்கிறது. பெரும்பாலான பிள்ளைகள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பங்குபெற்ற எல்லா குழந்தைகளுக்குமே ஒரே மாதிரியான ரத்த அழுத்தம் , கொழுப்பு மற்றும் குளுகோஸின் அளவு உள்ளது.

குழந்தைகளுக்கான சரியான ஊட்டசத்தை பெற்றோர்கள்தான் அறிமுகம் செய்ய வேண்டும். பிறப்பிலிருந்தே கொண்டு வர வேண்டும்.

பார்க்கும் மோசமான உணவுவகைகளை கொடுத்துவிட்டு, நோய்கள் தாக்கும்போது கவலைப்படுவது எதற்கும் பிரயோசனமில்லை.

எந்த அளவு ஆரோக்கியமான உணவுகளை தருகிறீர்களோ அதே கவனம் அவர்கள் விளையாடுவதற்கும் தர வேண்டும். தினமும் குறைந்தது1 மணி நேரம் அவர்களின் உடலுக்கு பயிற்சி தர வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆரோக்கியமான உணவு அதே நேரம் உடற்பயிற்சி இந்த இரண்டும் அவர்களிடம் இருந்தால், உங்கள் குழந்தைகளின் உடலும் அறிவும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

English summary

Improper Diet may cause for poor heart health to children

Improper Diet may cause for poor heart health to children
Story first published: Tuesday, August 16, 2016, 17:03 [IST]
Desktop Bottom Promotion