For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அல்சர் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

|

நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மெல்லிய படலத்தை( Mucus Membrane) அரிக்கிறது. இதன் விளைவாக குடல் புண் ஏற்படுகிறது..

பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாடு சாப்பிடாத போது வெறும் காற்று அடைத்துக் கொள்ளும். இந்த சமயத்தில் உணவு என கருதி அமிலம் சுரக்கப்படும்போது குடல் புண் வருகிறது. இதுதான் அல்சர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 குடல் புண் வருவதற்கான காரணம் :

குடல் புண் வருவதற்கான காரணம் :

குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம். புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன. வலி மாத்திரைகள், மற்றும் வீரியமிக்க மாத்திரைகள் சாப்பிடும்போது அமிலம் அதிகமாக சுரக்கப்படுகின்றன

 குடல் புண் வருவதற்கான காரணம் :

குடல் புண் வருவதற்கான காரணம் :

கலப்பட உணவு, கெமிக்கல் நிறைந்த உணவு , அசுத்த குடிநீர்,மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா உற்பத்தி ஆகிறது. இதனாலும் அல்சர் ஏற்படுகிறது. அதிக காரம் அல்லது எண்ணையில் பொரித்த உணவு உண்பதால் வரலாம்.

கவலை மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம். இதனை கட்டுப்படுத்த அல்லது வராமல் தவிர்க்க ஒரே ஒரு வழி உணவு முறையை மாற்றிக் கொள்வதுதான். உணவுகளால் அல்சரை குணப்படுத்த முடியும். அதே போல் வாழ்க்கை முறையையும் மாற்ற வேண்டும்.

 அல்சரின் வகைகள் :

அல்சரின் வகைகள் :

வயிற்றில் வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண்ணிற்கு கேஸ்ட்ரிக் அல்சர் என்று பெயர் . சிறு குடலில் ஏற்படும் குடல் புண்ணிற்கு டியோடினல் அல்சர் எனப் பெயர்

இந்த இரண்டு வகை சேர்ந்து பெப்டிக் அல்சர் என்று கூறுவார்கள்.

 அல்சரின் அறிகுறிகள் :

அல்சரின் அறிகுறிகள் :

வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும் வலியிருந்து கொண்டிருக்கும். உணவு சாப்பிட்ட பின் இந்த வலி குறைந்தால் அது டியோடினல் அல்சர். இதே சாப்பிட்ட பின்பு சிறிது நேரம் கழித்து மீண்டும் வலி ஏற்பட்டால் அது கேஸ்ட்ரிக் அல்சர். வாந்தி, குமட்டல், எடை குறைதல், பசியின்மை, ஆகியவை அல்சரின் அறிகுறிகள் ஆகும்.

செய்ய வேண்டியவை :

செய்ய வேண்டியவை :

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

மோர், தயிர், இள நீர் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வது அவசியம். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். மாம்பழம், ஆப்பிள் போன்றவை வயிற்றுப் புண்ணை ஆற்றும். இரவு உணவை விரைவில் சாப்பிட வேண்டும். பசும்பால் நல்லது. சொம்பு நிறைய குடியுங்கள்.

செய்ய வேண்டியவை :

செய்ய வேண்டியவை :

தூங்கும்போது தலையை சற்று மேலே தூக்கி இருக்கும்படி உயரமான தலையணை வைத்து படுங்கள். பக்க வாட்டில் படுப்பது நல்லது. யோகாசனம், தியானம் முதலியவற்றை செய்யும்போது அமிலம் சுரப்பது கட்டுப்படும்.

மன இறுக்கத்தோடு இருக்கக் கூடாது. மகிழ்ச்சியோடு இருங்கள்.

செய்யக் கூடாதவை :

செய்யக் கூடாதவை :

மது, காபி, டீ ஆகியவை குடிக்கக் கூடாது. புகைப் பிடித்தல் அறவே தவிர்க்க வேண்டும். இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது. அதிக கோபப்படக் கூடாது. டென்ஷன். மன அழுத்தம் அல்சரை அதிகப்படுத்தும். மசாலா உணவு, கார உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது. சூடான உணவுகலையும் சாப்பிடக் கூடாது.

செய்யக் கூடாதவை :

செய்யக் கூடாதவை :

அதிக புரதம் நிறைந்த உணவுகள் அமிலத்தன்மையை அதிகப்படுத்தும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது நல்லது. அகால நேரங்கள் சாப்பிடக் கூடாது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to cure Ulcer

What must do to Cure Ulcer
Desktop Bottom Promotion