ஏன் கிராமங்களில் கம்பங் கஞ்சி குடிக்கிறார்கள் என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

வறட்சி காலத்திலும் விளையக் கூடியது கம்பு. எந்த மண்ணிலும் விளையும் தன்மை பெற்றது. பொதுவாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இது முக்கிய உணவாக இருக்கிறது. இது ஆப்பிரிக்காவில்தான் தோன்றியதாகவும் அறியப்படுகிறது.

health-benefits-pearl-millet

சத்துக்கள் :

அது பல அருமையான சத்துக்களை கொண்டது கம்பிலுள்ள சத்துக்கள். தானியய்ங்களிலேயே அதிக அளவு புரத்ம் உள்ளது கம்பில் தான். பீட்டா கரோடினும் அதிக அளவு கம்பில் இருக்கிறது. 70 % நிறைவுறா கொழுப்பு அமிலம் கொண்டது. இவை உடலுக்கு மிகவும் முக்கிய சத்தாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கம்பங்கஞ்சி :

கம்பங்கஞ்சி :

கிராமங்களில் கம்பங்கஞ்சி மிகவும் பிரபலம். இது அவர்களுக்கு பசியை ஏற்படுத்துவதில்லை. நாள் முழுவதும் வெயிலில் இருப்பதால் சோர்வு அவர்களை அண்டாமல் இருக்க அவர்கள் விரும்பி உண்கிறார்கள்.

ஆம் அவர்களுக்கு தேவையான கலோரியை கொடுத்து உடல் புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. அதனால்தான் அவர்கள் இரும்பை போல் பலத்துடன் இருக்கிறார்கள். இதன் நன்மைகளை காணலாம்.

 அஜீரணம் :

அஜீரணம் :

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

உடல் வலுவிற்கு :

உடல் வலுவிற்கு :

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்

குடல் புண்கள் :

குடல் புண்கள் :

கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

கண்களுக்கு :

கண்களுக்கு :

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of pearl millet

here some of health benefits of peral millet.
Story first published: Saturday, December 3, 2016, 13:45 [IST]