கடுக்காய் பொடியை உபயோகப்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் என்ன?

Written By:
Subscribe to Boldsky

கடுக்காய் பொடியை அந்த காலத்தில் பெரியவர்கள் உபயோகப்படுத்தி கேள்விப்பட்டிருப்பீர்கள். முக்கியமாக மலச்சிக்கலை போக்குவதற்கு கடுக்காய் பொடியை உபயோகிப்பார்கள்.

Health benefits of Harad

இது எளிதில் கிடைக்கக் கூடியதுதான் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். கடுக்காய் பொடி இயர்கை மருத்துவத்தில் பயன்படுத்தும் மருந்துகளில் முக்கியமனவைகளில் ஒன்றாகும்.

அதனை உட்கொள்வதால் பல பிரச்சனைகள் குணமாகும். என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயதானவர்களுக்கு வரும் சுருக்கம் :

வயதானவர்களுக்கு வரும் சுருக்கம் :

கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயதாவதால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும், நரையும் நீங்கும்.

சுவையை தூண்டும் :

சுவையை தூண்டும் :

கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.

 ரத்தத்தை கட்டுப்படுத்தும் ;

ரத்தத்தை கட்டுப்படுத்தும் ;

கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்.

 பற்களுக்கு :

பற்களுக்கு :

கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்.

 சரும பாதிப்பு :

சரும பாதிப்பு :

கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.

 இருமல் :

இருமல் :

பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட்டால், இருமல், வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of Harad

Health benefits of Harad
Story first published: Saturday, December 3, 2016, 15:00 [IST]
Subscribe Newsletter