For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அன்றாட சாப்பிட வேண்டிய பழங்களும்! அதன் நன்மைகளும்!

|

நாம் சாப்பிடும் உணவே நம் எண்ணங்கள் மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. நம்முள் எத்தனை பேர் தினமும் பழத்தை சாப்பிடுகிறார்கள்?

தினமும் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிடுவதால் புற்று நோய், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், இதய நோய்கள் உங்களை நெருங்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் ஏற்கவே அறிந்த பழங்கள்தான். ஆனால் பலன்கள் நீங்கள் அறியாமலிருந்திருக்கலாம். இதனை தொடர்ந்து படியுங்கள்.

Health benefits of fruits

நெல்லிக்காய் :

ஒரு நெல்லிக்காயிலுள்ள சத்துக்கள் இரண்டு ஆரஞ்சுப் பழங்களில் உள்ள சத்துக்குகளுக்கு நிகர் என்பர். வைட்டமின் சி வெப்பத்தில் எளிதில் அழிந்துவிடக் கூடியவை. ஆகவே சீக்கிரத்தில் உபயோகப்படுத்துவது நல்லது. பச்சையாக நெல்லிக்காயை சாப்பிடுவது அதன் சத்துக்களை அப்படியே நமக்கு தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

மாதுளம்பழம் :

மாதுளம்பழம் இதயத்திற்கும், மூளைக்கும் சக்தியைக் கொடுக்கும். நினைவாற்றலை வளர்க்கும். அறிவுத் திறனை அதிகரிக்கும்.
மாரடைப்பு, நெஞ்சு எரிச்சல், இரத்தக் கொதிப்பு, அல்சர், முடக்குவாதம், அஜீரணம், இவைகளைக் குணப்படுத்தும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு.

திராட்சைப் பழம் :

திராட்சைப் பழம் உட்கொண்டு வந்தால் உடல் வறட்சி நீங்கி தோல் மென்மையாகி, உடல் அழகாகும்! குரல் இனிமையாகும். மலச்சிக்கலை நீக்கி, வீரியத்தை விருத்தி செய்யும்; நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படும் உடல் நடுக்கத்தைச் சீர் செய்யும்.

மெலிந்த உடல் கொண்டவர்கள் தினமும் திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடம்பு பருமனாகும். திராட்சைப் பழம் இருதய நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உடையது. குடல் கோளாறுகளையும், வாய்ப்புண், தொண்டைப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

கொய்யாப்பழம் :

கொய்யாப்பழத்தில் வேறு எந்தப் பழத்திலுமில்லாத அளவு வைட்டமின் சி சத்துகள் நிறைந்து இருக்கிறது! கொய்யாப்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு, இரத்த உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. இரத்தச் சோகை நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால் நல்ல குணம் தெரியும்.

சப்போட்டா பழம் :

நல்ல சுவை மிகுந்த பழங்களில் ஒன்று சப்போட்டாப் பழம். இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரம் இரும்பு போன்ற கனிமச் சத்து அதிக அளவு உண்டு. வைட்டமின் சி யும் உள்ளது. தொண்டையில் உண்டாகும் புண்களை ஆற்றும், இருமலைத் தடுக்கும், குடல் புண்ணை ஆற்றும், பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும். ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

நீரிழிவு வியாதிக்காரர்கள் உண்ணலாம். சிறு நீரக கோளாறை நீக்க வல்லது. மூல நோயைத் தணிக்கும் தண்மையுடையது சப்போட்டாப் பழம்.

நோயைத் தரும் எண்ணெய் நொறுக்குத் தீனிகளை விட பழங்கள் மென்மையானது. உடலுக்கு திடம் தருபவை. தினம் ஒரு பழம். உங்கள் ஆரோக்கியத்தின் வளம் !

English summary

Health benefits of fruits

Health benefits of fruits
Story first published: Saturday, August 6, 2016, 14:46 [IST]
Desktop Bottom Promotion