தினமும் காலை வெறும் வயிற்றில் சுடுநீரில் இஞ்சி கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னென்ன?

Posted By:
Subscribe to Boldsky

இஞ்சி ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டுள்ள உணவுப் பொருள். நாம் அன்றாடம் சேர்த்துக் கொள்ள உணவுப் பொருட்களில் இஞ்சி முதன்மையானது. காரணம், இது உடலில் கொழுப்பு சேராமல் இருக்கவும், செரிமானம் சிறக்கவும், இரத்தம் ஆரோக்கியமாக இருக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது.

பெரும்பாலும் உணவில் சேர்த்து சமைத்தாலும், தட்டில் நாம் ஒதுக்கி வைக்கும் உணவு பொருள் தான் இந்த இஞ்சி. இஞ்சியை இப்படி ஒதுக்காமல், தினமும் காலையில் சூடான தண்ணியில் சேர்த்து சற்று நேரம் வேக வைத்து வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென என்று இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானம் சிறக்கும்!

செரிமானம் சிறக்கும்!

வாயுத்தொல்லையில் இருந்து தீர்வுப்பெற ஒரு சிறந்த உணவுப் பொருள் இஞ்சி. இது செரிமானத்தை சீராக்கி, இரைப்பை வலுப்படுத்தி, வாயுத்தொல்லை உண்டாகாமல் தடுக்கிறது. மேலும், இது நச்சுக்களை நீக்கவும் பெருமளவு உதவுகிறது.

பசியை அடக்கும்!

பசியை அடக்கும்!

செரிமானத்தை சீராக்குவது மட்டுமின்றி, அதிகப்படியான பசியை குறைக்கவும் உதவுகிறது. இதனால், நீங்கள் அதிகமாக உணவு உட்கொள்வதை தடுக்க முடியும்.

மேலும், இஞ்சி கலோரிகள் இல்லாத உணவு என்பதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாது.

கார்டிசோல் அளவை குறைக்கும்!

கார்டிசோல் அளவை குறைக்கும்!

கார்டிசோல் என்பது ஸ்ட்ரஸ் ஹார்மோன் ஆகும். இஞ்சியை சேர்த்துக் கொள்வதால் இந்த ஹார்மோனை கட்டுப்படுத்த முடியும். நீங்கள் கொழுப்பு அதிகமான உணவு உட்கொள்வதன் மூலமாக அதிக ஸ்ட்ரஸ் அடைகிறீர்கள்.

எனவே, உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

இரத்த சர்க்கரை அளவு!

இரத்த சர்க்கரை அளவு!

உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறையவில்லை என்றால், என்ன முயற்சி செய்தாலும் உடல் பருமனை குறைக்க முடியாது. தினமும் கால் டீஸ்பூன் இஞ்சி எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

இஞ்சி நீர் எப்படி தயாரிப்பது?

இஞ்சி நீர் எப்படி தயாரிப்பது?

இது மிக எளிமையான ஒன்று தான்...

தேவையான பொருட்கள்:

இஞ்சி : துண்டுகளாக வெட்டியவை சிறிதளவு.

நீர் : ஒன்றரை கப்.

செய்முறை:

* நீரை காய்ச்சுங்கள்

* சூடான பின்னர், சிறிதாக வெட்டிவைத்த இஞ்சி துண்டுகளை சேர்க்கவும்.

* மிதமான சூட்டில் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

தினமும் காலை சுடுதண்ணியில் இஞ்சி சேர்த்து கொதிக்க வாய்த்த நீரை, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மற்றும் நீங்கள் நாள் முழுதும் கூட சீரான இடைவேளையில் சிப், சிப்பாக சிறிதளவு குடித்து வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Drinking Ginger Water In Empty Stomach Every Morning

Health Benefits of Drinking Ginger Water In Empty Stomach Every Morning
Please Wait while comments are loading...
Subscribe Newsletter