For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தத்தை சுத்திகரிப்பு செய்து, இதய நலனை மேம்படுத்த இந்த ஜூஸை குடிங்க!

|

நமது சுற்றுசூழல் ஆரோக்கியமாக இருக்க எப்படி வீடு சுத்தமாக இருக்க வேண்டுமோ. அப்படி தான், நமது உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க இரத்தம் சுத்தமாக இருக்க வேண்டும்.

இரத்தம் அசுத்தமாக இருப்பது, பாக்டீரியா அல்லது நச்சுகளின் தாக்கம் அதிகரிப்பது போன்ற ஏனைய உடல் உறுப்புகளின் செயற்திறன் மற்றும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

இரத்தம் அசுத்தமாவதற்கு காரணம் நமது ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் புகை போன்ற தீயப் பழக்கங்கள் தான். நல்ல ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிப்பதால் இதை சரி செய்ய முடியும்.

இதையும் படிங்க:7 நாட்கள் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

இரத்தத்தை சுத்திகரிப்பு செய்து, இதய நலன் மற்றும் உடல் செயற்திறன் சிறக்க பயனளிக்கும் ஆப்பிள், தேங்காய் மற்றும் இஞ்சி ஜூஸ் எப்படி தயாரிப்பது மற்றும் இதன் மற்ற ஆரோக்கிய நன்மைகள் குறித்து இனிக் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1

தேங்காய் - 2 துண்டுகள் (மீடியமான அளவில்)

இஞ்சி பவுடர் - ருசிக்காக சிறிதளவு

ஐஸ் கியூப் - 3

வைட்டமின் சத்துக்கள்:

வைட்டமின் சத்துக்கள்:

ஆப்பிள், தேங்காய் மற்றும் இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடிப்பதால் பெறும் வைட்டமின் சத்துக்கள்..,

வைட்டமின் A, B, B1, B2, B6, C, E மற்றும் K.

செய்முறை:

செய்முறை:

இனி, இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்...

* ஆப்பிளின் நடுப்பகுதியை நீக்கிவிடுங்கள்.

* ஆப்பிளை தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

* பிறகு அரைத்த ஆப்பிள் உடன் தேங்காய் மற்றும் இஞ்சி பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.

* இப்போது மீண்டும் இந்த மூன்றையும் நன்கு ஸ்மூத்தாக அரைக்க வேண்டும்.

* இதில், ஐஸ் கியூப் சேர்த்து குடியுங்கள்.

நன்மைகள்:

நன்மைகள்:

ஆப்பிள், தேங்காய் மற்றும் இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள்..,

1) ஆப்பிள், தேங்காய் மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடித்து வருவதால் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும்.

2) இந்த ஜூஸை குடித்து வந்தால் உங்கள் உடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.

3) மேலும், இந்த ஜூஸ் நீரிழிவை கட்டுப்படுத்தவும் பயனளிக்கிறது.

நன்மைகள்:

நன்மைகள்:

4) இஞ்சியின் மகத்துவம் கொண்ட இந்த ஜூஸ் ஒரு கிருமி நாசினியாகவும் பயனளிக்கிறது. இதனால் செரிமான சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

5) கொலஸ்ட்ரால் அதிகரிப்பதைத் தடுத்து இதய நலன் மேலோங்கவும் இந்த ஜூஸ் சீரான முறையில் உதவுகிறது.

6) செரிமானம் சிறக்க செய்து, மலமிளக்க கோளாறுகள் உண்டாகாமல் தடுக்கிறது இந்த ஜூஸ்.

நன்மைகள்:

நன்மைகள்:

7) மேலும், குடல் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும், இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும் ஆப்பிள், தேங்காய், இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் பயன்படுகிறது.

8) உடலில் கட்டிகள் உருகாமல் இருக்க, வயிற்றுப்போக்கை தடுக்க, உடல் பருமனை குறைக்க என பல ஆரோக்கிய நன்மைகள் அளிக்கிறது இந்த ஜூஸ்.

குறிப்பு:

குறிப்பு:

ஒருவேளை ஸ்மூத்தியாக குடிக்க விருப்பம் இல்லையெனில், தண்ணீர் கலந்து குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Apple, Coconut and Ginger Juice

Health Benefits Of Apple, Coconut and Ginger Juice, read here in tamil.
Desktop Bottom Promotion