For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒடிசலான உடலை எப்படி புஷ்டியாக்கலாம் தெரியுமா?

ஒல்லியான உருவம் எல்லாரும் விரும்பக் கூடியது. ஆனால் சதைப்பற்றே இல்லாமல் இருப்பது மோசமான தோற்றத்தையே தரும். உனங்கல் உடலை புஷ்டியாக்கும் உணவு பட்டியல் இங்கே! முயற்சித்துப் பாருங்கள்.

|

உடல் எடை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இரண்டுமே உடல் நலத்தை பாதிக்கக் கூடியவைதான். ஒல்லியாக இருப்பது ஒருவிதத்தில் நன்மையே ஆனால் சதைப் பற்றே இல்லாமல் இருப்பதும் அழகாய் இருக்காது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கலாம்.

Foods that help to increase your body weight

உடலில் புரதச் சத்து மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதன் அறிகுறியே உடல் எடை குறைவாக இருப்பது. நான் நன்றாகத்தான் சாப்பிடுகிறேன். இருந்தாலும் உடல் போஷாக்கே இல்லாமல் இருக்கிறதே என நீங்கள் நினைத்தால் கவலை வேண்டாம்... மரபியல் ரீதியாக உங்கள் உடலமைப்பு அமையப் பெற்றிருக்கலாம். உடல் சதைப் பற்றை அதிகரிக்கச் செய்யும் இந்த உணவுகளை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் பிரச்சனைக்கு விடை கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு இறைச்சி :

சிவப்பு இறைச்சி :

நீங்கள் அசைவமாக இருந்தால் சிவப்பு இறைச்சியை சாப்பிட்டு பாருங்கள். இதில் அதிக கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது. இவற்றை வாரம் ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் உடல் குண்டாகும்.

பீ நட் பட்டர் :

பீ நட் பட்டர் :

ஊட்டசத்து மிக்கது. புரதம் அதிகளவில் இருக்கிறது. நல்ல கொழுப்பு அமிலங்களும் உள்ளன. ஆகவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்தால் உடல் ஊட்டம் பெறும்.

அடர்த்தியான பால் :

அடர்த்தியான பால் :

பசும்பாலை தவிருங்கள். எருமை பால் கிடைத்தால் குடியுங்கள். இவை எளிதாக விரைவில் உடல் புஷ்டியை உண்டாக்கு. அப்படி எருமை பால் கிடைக்க வில்லையென்றால் அடர்த்தி அதிகமான பாலை தினமும் இருவேளை குடிக்கவும்.

 மாம்பழம், பப்பாளி :

மாம்பழம், பப்பாளி :

மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம், ஆகியவற்றில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. ஆப்பிளிலும் இருகிறது. இவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் குண்டாகும்.

 நெய் மற்றும் வெண்ணெய் :

நெய் மற்றும் வெண்ணெய் :

தினமும் பருப்பு சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டு வந்தால் உடல் குண்டாகும். அல்லது அடிக்கடி நெய் மற்றும் வெண்ணெயை சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிரட்டில் தோய்த்து சாப்பிடுவது நல்லது.

 சீஸ் :

சீஸ் :

சீஸில் அதிக புரதமும் குறைவான கொழுப்பும் இருக்கிறது. இதனை அடிக்கடி சாப்பிடலாம். உடல் போஷாக்கு பெறும்.

உருளைக் கிழங்கு :

உருளைக் கிழங்கு :

அதிக ஸ்டார்ச் இருக்கிறது. இதனால் விரைவில் உடல் எடை கூடும். அவித்து சாப்பிடுவதால் அதன் பரிபூரண சக்தி கிடைக்கும். பொடிமாஸ் மசாலா ஆகியவ்ற்றில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods that help to increase your body weight

Foods that help to increase your body weight
Story first published: Tuesday, December 6, 2016, 12:24 [IST]
Desktop Bottom Promotion