ஆர்த்ரைடிஸ் உருவாக காரணமான உணவுகளைப் பற்றி தெரியுமா? எச்சரிக்கையாக இருங்கள்!!

Written By:
Subscribe to Boldsky

சில வகை காய்களுக்கு உடல் உறுப்புகளுக்கு தகுந்தாற்போல் எதிர்விளைவையும் தரும். உதாரணத்திற்கு பாலிலுள்ள லாக்டோஸ், வேர்க்கடலை, கோதுமையிலுள்ள குளுடன் ஆகியவைகள் அலர்ஜியை உண்டாக்கும் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அது போல் நமது மூட்டுகளுக்கு பாதிப்பை உண்டாக்கும் உணவுகள் உள்ளன என்பது தெரியுமா? அவைகள் மூட்டில் வலியை உண்டாக்குபவை. அலர்ஜியை தோற்றுவிப்பவை.

Foods that harm to your knee

இதனால் மூட்டு இணைப்புகள் வீக்கம் வலி உண்டாக்கி, நோய்களை தருகின்றன. அவை எவையென பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி :

தக்காளி :

சமீபத்திய ஆராய்ச்சியில் சிவப்பு நிற உணவுகள் குறிப்பாக தக்காளி மூட்டுகளில் உண்டாகும் பாதிப்பான கௌட்( Gout ) உருவாகக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

காரணம் இவை அதிக யூரிக் அமிலத்தை உண்டு பண்ணுகின்றன. அவை மூட்டை பாதிக்கின்றன.

சோயா எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் :

சோயா எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் :

உங்களுக்கு ஒமேகா3 கொழுப்பு அமிலம் தெரிந்திருக்கும். அது போல் ஓமேகா- 6 கொழுப்பு அமிலங்கள் பற்றி தெரியுமா?

இவை அதிகம் சோயா சோயா எண்ணெய் , பருத்தி எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் ஆகிய்வற்றில் இருக்கிறது.

அமெரிக்காவில் ஒமேகா- 3 உணவுகளை விட ஒமேகா-6 உணவுகளை 25 மடங்கு அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.

இதனால் 10ல் ஒருவருக்கு ஆஸ்துமா, மூட்டு வாதம் வருவதாக சொல்கிறார்கள்.

முட்டை மற்றும் இறைச்சி :

முட்டை மற்றும் இறைச்சி :

முட்டையின் மஞ்சள் கரு மற்றும் இறைச்சியிலும் இந்த ஒமேகா-6 கொழுப்பு அமிலம் உள்ளது. இவைகளும் மூட்டு பாதிப்பு இருப்பவர்கள் எடுத்துக் கொண்டால் பாதிப்பு உண்டாகும் எனக் கூறுகின்றனர்.

குளிர்பானங்கள் :

குளிர்பானங்கள் :

சோடா கலந்த இனிப்பு குளிர்பானங்கள் சர்க்கரை வியாதி மட்டும் தரவில்லை. ஆர்த்ரைடிஸ் பாதிப்பையும் தருகிறது.

இவற்றிலுள்ள இனிப்பினால் "சைட்டோகைன் " என்ற அலர்ஜியை உண்டாக்கும் செல்கள் அதிகரிக்கின்றன. இவை மூட்டுகளை தாக்கி , கௌட் போன்ற பாதிப்பை உண்டாக்குகின்றன.

பதப்படுத்தப்பட்ட மீன் :

பதப்படுத்தப்பட்ட மீன் :

மீன்கள் கெட்டுப்போகாமலிருக்க அதன் மீது பூசப்படும் ரசாயனங்களும் கோழி இறைச்சிகளும் யூரிக் அமிலத்தை அதிகரிக்கின்றன.

இவை மூட்டு இணைப்புகளில் தங்கி ஆர்த்ரைடிஸை உண்டாக்குகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods that harm to your knee

Foods that could be damaging your knees.
Story first published: Monday, November 14, 2016, 15:40 [IST]
Subscribe Newsletter