For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ராக்கோலி சாப்பிட்டால் புற்று நோயை தடுக்கலாமா?

|

சமீபத்திய ஆய்வு ஒன்று ப்ராக்கோலி வாரம் 3 தினம் சாப்பிட்டால் பல்வேறு புற்று நோய்களை தடுக்கலாம் என கூறுகின்றது. முட்டை கோஸ் மற்றும் காலிஃபளவர் சாப்பிட்டாலும் அதே பலனை தருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.

Broccoli prevent cancer

ப்ராக்கோலியிலுள்ள ஒரு குறிப்பிட்ட பொருள், புற்று நோயை உருவாக்கக் கூடிய ஆபத்தை விளைவிக்கும் மூலக்கூறுகளை வரவிடாமல் தடுக்கிறது . புற்று நோய் என்றில்லாமல், டைப் 2 சர்க்கரை வியாதி, இதய நோய்களையும் வரவிடாமல் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்திகளை ஊக்குவிக்கும் காய்கறிகளை நாம் தொடர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

ப்ராக்கோலியை அரை வேக்காடு வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டால் அதன் முழு சத்துக்களும் கிடைக்கும். இவற்றிலுள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலில் உண்டாகும் பிரச்சனைகளை துரிதமாய் ரிப்பேர் செய்கிறது.

ஆனால் ஒரு நாளில் சாப்பிடுவதோடு உங்கள் டயட் முடிந்துவிட்டது என நினைத்துக் கொள்ளாதீர்கள். எந்த காய்கறிகளையுமே தொடர்ந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் நம் ஆரோக்கியம் நிலைத்திருக்கும்.

ப்ராக்கோலியில் உள்ள சத்துக்கள் :

ப்ராக்கோலியில் மற்ற எல்லா காய்களைலும் இருப்பதை விட அதிக அளவு விட்டமின் சி உள்ளது. இவை முழுவது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். எந்த வித ஆபத்தான் புற்று நோயும் தடுக்கும் மகத்துவத்தை கொண்டுள்ளது.

ப்ராக்கோலியில் விட்டமின் ஏ, விட்டமின் பி1,பி6, விட்டமின் ஈ, மற்றும் மிக முக்கிய தாது சத்துக்களான மெக்னீசியம், பாஸ்பரஸ், ஒமேகா 3 ஆகையவற்றை கொண்டுள்ளது.

ப்ராக்கோலி எளிதில் ஜீரணமாகிவிடும் காய். இதனை சாப்பிட்டால் கண்பார்வை அதிகரிக்கும். கொழுப்பினை கட்டுப்படுத்தும்.

ப்ராக்கோலியில் அதிக அளவு கால்சியம் கொண்டுள்ளது. இவை எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. அதிக நார்சத்து கொண்டுள்ளது. இதயத்தையும் பாதுகாக்கின்றது

English summary

Broccoli prevent cancer

Broccoli prevent cancer
Story first published: Saturday, June 25, 2016, 11:43 [IST]
Desktop Bottom Promotion