உடல் பருமனை குறைக்க உதவும் காலை உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் பருமன் அதிகமாக இருப்பதால் ஆண்களின் விந்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மரபணுக்களில் பலவன திறன் குறைந்து போகிறது. மேலும், இதனால் பிறக்கப் போகும் குழந்தையின் வளர்ச்சியிலும் கூட குறைபாடுகள் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உடல் எடை குறைக்க முனைவோர் காலை உணவை தவிர்ப்பது தவறு. ஏனெனில், இதனால் பசி மற்றும் இடைவேளைகளில் உணவு உட்கொள்ளும் பழக்கமும் அதிகரிக்கும். இந்த இடைவேளை உணவுப் பழக்கம் தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாகும்.

எனவே, காலை உணவில் எந்தெந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் உடல் பருமன் அதிகரிக்காமல் தடுக்க முடியும் என இனி காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இலவங்கப் பட்டை

இலவங்கப் பட்டை

கலோரிகள் இல்லமால் உணவில் இனிப்பு சுவையை சேர்க்கும் தன்மைக் கொண்டது இலவங்கப் பட்டை. தானிய உணவுகள், ஓட்ஸ் மீல்ஸ், ஏன் காபியில் கூட கொஞ்சம் இலவங்கப் பட்டை தூவி உட்கொள்வது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலில் சர்க்கரை மூலம் சேரும் கலோரிகளை குறைக்கவும் பயனளிக்கிறது. இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை குறைக்க முடியும்.

முட்டை

முட்டை

முட்டையில் புரதம், வைட்டமின் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இவை காலையில் உங்கள் உடற்சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும், முட்டை குறைந்த கலோரியில் பசியை நிறைவு செய்யவதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

பழங்கள்

பழங்கள்

பழங்களில் இருப்பது இயற்கை இனிப்பு. மேலும், இவை இரத்தத்தில் உடனடியாக கலக்காது என்பதால், இரத்த சர்க்கரை அதிகரிப்பு, நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் தடுக்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீ

கிரீன் டீ வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் திறன் கொண்டது. மேலும், மன அழுத்தத்தை குறைக்கவும் கிரீன் டீ பயனளிக்கிறது. பல ஆய்வுகளின் மூலம் கிரீன் டீ கார்டிசோல் எனும் மன அழுத்த ஹார்மோனை குறைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. கார்டிசோல் அதிகமாக இருப்பது உடல் எடை குறைக்க இடையூறாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தயிர்

தயிர்

மோர் அல்லது தயிர் காலையில் உட்கொள்வது பசியை குறைக்க உதவுகிறது. இதனால் இடைவேளையில் நீங்கள் நொறுக்குத்தீனி உண்ணும் பழக்கம் குறையும்.

நட்ஸ் பால்

நட்ஸ் பால்

நட்ஸ் கலந்த பால் பருகுங்கள். இதில் இருப்பது இயற்கை சர்க்கரை. மற்றும் கலோரிகள் குறைவு, உடற்சக்தியை ஊக்குவித்து, உடல் எடையை குறைக்கவும் இது உதவும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து அதிகம். இதில் சர்க்கரை அளவு அறவே இல்லை. மற்றும் பசியை குறைத்து, உடல் எடையை குறைக்க இதுவொரு சிறந்த உணவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Breakfast Foods That Will Boost Your Weight Loss Plan

Breakfast Foods That Will Boost Your Weight Loss Plan, take a look.
Story first published: Wednesday, March 9, 2016, 10:28 [IST]
Subscribe Newsletter