Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஆர்கானிக் உணவுகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் !!
ஆர்கானிக் உணவுகள் பற்றி இப்போது மக்களிடையே மிகப்பெரிய தாக்கம் உள்ளது. உண்மையில் கடைகளில் நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் ஆர்கானிக் வகை சேர்ந்ததா என சோதித்து பின் வாங்குவது முக்கியம்.
உயிரினங்களுக்கு வாழ்வாதாரமே உணவுதான். அதிக லாபத்துக்கு பேராசைப்பட்டு விளைச்சல் நிலத்தை பாழ்படுத்தினோம்.
அடுத்து பெரிய அளவில் மகசூல் கிடைக்க வேண்டுமென ஆபத்தான ரசாயன உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதை, காய்கள் ஆகிய்வற்றை அறுவடை செய்தோம். விளைவு பல புது நோய்களையும் அறுவ்டை செய்து கொண்டிருக்கிறோம்.

இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு அதனால் வந்த புரட்சிதான் ஆர்கானிக் உணவுகள். அதனைப் பற்றி விரிவாக காண்போம்.

ஆர்கானிக் உணவுகள் என்றால் என்ன?
ஆர்கானிக் உணவுகள் செயற்கை சேர்க்கைகள் சேர்க்கப்படாதவை. அதுமட்டுமல்ல ஆரோக்கியமான மண் வளத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்படுபவை.

இயற்கை முறையில் :
பூச்சிக்கொல்லி மருந்து ரசாயம உரங்கள், மரபணு மாற்றிய விதைகள் , கதிர்வீச்சு ஆகிய எதுவும் இல்லாமல் இயற்கை முறையில் ப்யிரிடப்படுகின்றன.
இதனால் இவை நல்ல ஆரோக்கியமான ரசாயானம் கலக்காத காய்கறி, பழங்களை தருகின்றன.

விஷமில்லா முட்டைகள் :
அதுமட்டுமல்ல கோழி முட்டை, மாட்டுப் பால், இறைச்சி ஆகியவ்ற்றில் ஆன்டிபயாடிக்கோ , வளர்ச்சி ஹார்மோனோ ஊசி மூலம் செலுத்தப்படுவதில்லை.

ஆர்கானிக் நன்மைகள் :
இவ்வாறு கடுமையான வழிமுறைகளை பின்பற்றி, உற்பத்தி செய்யப்படும் இந்த காய்கறி மற்றும் பழங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மிக நன்மையான ஆரோக்கியமான சூழ் நிலையை ஏற்படுத்தி தருகிறது.

உணவு அலர்ஜி :
சாதரண விளைச்சலால் நமக்கு பலவித வயிற்று உபாதைகள் வரலாம். ரசாயன உரங்கள் நமது உறுப்பு, மரபணுக்களை பாதிக்கின்றன. ஆனால் இந்த ஆர்கானிக் விளைச்சலால் எந்த வித பாதிப்பும் உணவு அலர்ஜியும் உண்டாகாது.

ஆபத்தில்லா வருங்காலம் :
ஆர்கானிக் உணவுகள் சற்று விலை கூடுதல் என்றால் உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து இல்லை.
ஆகவே பணத்தை பார்க்காமல் நமது குழந்தை மற்றும் வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி கொடுப்பது நமது கடமை.



Click it and Unblock the Notifications
