கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆரோக்கியமான மனிதனின் உடலில் கல்லீரலின் எடை 1.3 கிலோ இருக்கும். கல்லீரல் உடலின் மற்ற உறுப்புக்களுக்கு வேண்டிய பொருட்களை சுரக்கிறது. உடலிலேயே உறுப்பாகவும், சுரப்பியாகவும் இருக்கும் ஒன்று என்றால் அது கல்லீரல் தான்.

இந்த கல்லீரல் இரத்தத்தில் உள்ள நச்சுக்கமிக்க பொருட்களை வெளியேற்றி, செரிமானத்தின் போது உணவில் உள்ள சத்துக்கள் குடல் உறிஞ்ச உதவுகிறது. மொத்தத்தில் உடலின் பல முக்கிய பணிகளை கல்லீரல் தான் செய்கிறது.

ஆனால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினால், கல்லீரலுக்கு வேலைப்பளு அதிகம் இருப்பதால், அவற்றின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் நாளடைவில் குறைய ஆரம்பித்து, பின் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

இதனைத் தடுக்க வேண்டுமானால், ஒவ்வொருவரும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் கல்லீரலைச் சுத்தம் செய்யும் உணவுப் பொருட்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த உணவுப் பொருட்கள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

பூண்டு கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவைக் குறைத்து, கல்லீரலின் செயல்பாட்டைக் குறைக்க உதவும். எனவே தினமும் ஒரு பல் பச்சை பூண்டை உட்கொள்ளும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

கிரேப் ஃபுரூட்

கிரேப் ஃபுரூட்

கிரேப் ஃபுரூட்டில் வைட்டமின் சி, பெக்டின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை கல்லீரலை சுத்தம் செய்யும். மேலும் இதில் குளூததையோன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களை நீர்க்கச் செய்யும் மற்றும் கல்லீரலைச் சுத்தம் செய்யும். அதுமட்டுமின்றி இதில் உள்ள நரின்ஜெனின் என்னும் ப்ளேவோனாய்டு கொழுப்புக்களை உடைத்தெறியும்.

பீட்ரூட்

பீட்ரூட்

கல்லீரலை சுத்தமாகவும், அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் உணவுப் பொருட்களில் பீட்ரூட்டும் ஒன்று. இதில் தாவர ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளது. இது கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை தூண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் டி-லெமொனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு உள்ளது. இது கல்லீரலை சுத்தம் செய்ய அதில் உள்ள நொதிகளை ஊக்குவிக்கும். மேலும் இதில் வைட்டமின் சி வளமான அளவில் உள்ளதால், இது செரிமானத்தை மேம்படுத்தும் நொதிகளின் அளவை அதிகரிக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடிப்பதன் மூலம், உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தேங்கியுள்ள கொழுப்புக்கள் வெளியேற்றப்பட்டு, உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் கல்லீரல் நோய்களை க்ரீன் டீ தடுக்கும். 2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், க்ரீன் டீ குடிப்போருக்கு கல்லீரல் புற்றுநோய் வரும் அபாயம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தக்காளி

தக்காளி

தக்காளியில் குளூததையோன் அளவு ஏராளமான அளவில் உள்ளது. இது கல்லீரலை சுத்தப்படுத்தும். அதோடு இதில் உள்ள லைகோபைன் மார்பகம், சருமம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வராமலும் தடுக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையை பச்சையாக சாப்பிடுவதால், அதில் உள்ள குளுததையோன் கல்லீரல் நொதிகளை தூண்டி கல்லீரலை சுத்தம் செய்யும். ஆகவே கிடைக்கும் போது பசலைக்கீரையை சிறிது பச்சையாக சாப்பிடுங்கள்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் உங்களுக்கு பிடிக்குமா? அப்படியெனில் உங்களுக்கு பிடித்த அந்த முட்டைக்கோஸை வாரம் ஒருமுறையாவது தவறாமல் சாப்பிட்டு வாருங்கள். இதனால் உங்கள் கல்லீரல் சுத்தமாகும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

உணவில் ஏன் மஞ்சள் சேர்க்கிறோம் என்பதற்கான காரணங்களுக்கு ஒன்று, மஞ்சள் கல்லீரலை சுத்தம் செய்யும் என்பது தான். மேலும் மஞ்சள் கார்சினோஜென்களின் வளர்ச்சியைத் தடுத்து, அவற்றை உடலில் இருந்தே வெளியேற்றும்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸில் குளுததையோன், ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், கல்லீரலை சுத்தம் செய்யும் அமினோ அமிலமான அர்ஜினைன் உள்ளது. ஆகவே உங்களுக்கு வால்நட்ஸ் கிடைத்தால் தவறாமல் உட்கொள்ளுங்கள்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ சாப்பிடுவதால், உடலில் குளுததையோன் உற்பத்தி அதிகமாகும். குளுததையோன் கல்லீரலை சுத்தம் செய்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள பெக்டின் மற்றும் இதர அத்தியாவசிய கெமிக்கல்கள், கல்லீரலை மட்டுமின்றி, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். ஆகவே தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Foods That Are Healthy For Liver

If you want a healthy liver, there are certain foods that you need to consume. So, take a look at the best foods and drinks that can keep your liver healthy.
Story first published: Thursday, March 24, 2016, 11:43 [IST]
Subscribe Newsletter