சோர்வாக இருக்கிறதா? உடலுக்கு அதிக ஆற்றலைத் தரும் ஆறு அற்புத உணவுகள்

By: Batri Krishnan
Subscribe to Boldsky

நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. முன்னோர்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையாக இருந்தது. நம்முடைய வாழ்க்கைமுறை மிக குறுகியதாகவும் அவசரமாகவும் மாறி விட்டது. இதனால் உணவுகளையும் சுருக்கி விட்டோம்.

அவசரமான வாழ்க்கைமுறையின் காரணமாக இன்றைய இளம் தலைமுறையினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அவசரமான வாழ்க்கைமுறை நமக்கு மனதளவிலும், உடல் நலத்திலும் பல்வேறு பாதிப்புக்ளை உருவாக்குகின்றது.

6 superfoods to stay energetic

ஆரோக்கியமான உணவுகள் உங்களின் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் நம்முடைய உடலுக்கு புத்துணர்ச்சியையும் வழங்குகின்றது. அவ்வாறு உங்களுக்கு சோர்வை போக்கு உடலுக்கு சக்தி தரும் உணவுகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தயிர்:

1. தயிர்:

தயிரில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் உள்ளன. இவை உங்களின் உடலுக்கு புத்துயிர் தந்து சோர்வை விரட்ட உதவுகின்றது.

நாம் உட்கொள்ளும் பல்வேறு திட உணவுகளைத் தவிர திரவ உணவான தயில் வேகமாக நம் உடலில் கலந்து, உடனடி சக்தியை தருகின்றது. தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் உங்கள் செரிமான அமைப்பை சீர் செய்கின்றது.

எனவே தினந்தோறும் ஒரு கப் தயிர் உட்கொள்வது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

2. வாழைப்பழம்:

2. வாழைப்பழம்:

சோர்வை விரட்டக் கூடிய மிகவும் சிறந்த பழம் இதுவாகும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சக்கரையை ஆற்றலாக மாற்றுகின்றது.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் B மற்றும் C, நார்ப்பொருட்கள், கார்போஹைட்ரேட், ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உங்களின் மனச் சோர்வு மற்றும் நீர் வறட்சியை சமாளிக்க உதவுகின்றது.

இதைத் தவிர வாழைப்பழத்தில் உள்ள சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகின்றது.

தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் உட்கொள்வது மிகவும் நல்லது. வாழைப்பழத்தை இரவு உட்கொள்வது கூட ஆரோக்கியமானதே.

 3. ஓட்ஸ்:

3. ஓட்ஸ்:

ஓட்ஸில் உள்ள கார்போஹைட்ரேட் நம்முடைய உடல் மற்றும் மூளைக்கு ஒரு நாளைக்குத் தேவையான முழு ஆற்றலையும் வழங்குகின்றது.

எனவே இது ஒரு மிகச் சரியான காலை உணவாகும் இதைத் தவிர ஒட்ஸில் உள்ள புரோட்டீன், மக்னீசியம், மற்றும் பாஸ்பரஸ் போன்ற பொருட்கள் நம்முடைய உடல் ஆற்றலை அதிகரிக்கின்றது.

மேழும் ஓட்ஸில் உள்ள நார்ப்பொருட்கள் நம்முடைய செரிமான உறுப்புகளுக்கு உதவுகின்றது.

4. பீன்ஸ்:

4. பீன்ஸ்:

உடல் சோர்வை எதிர்த்து போராட உதவும் மற்றொரு சிறந்த உணவு பீன்ஸ் ஆகும். இதிலுள்ள சிக்கலான கார்போஹைரேட், புரதங்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, போன்ற கனிமங்கள் நமது உடலுக்குத்தேவையான ஆற்றலை நாள் முழுவதும் வழங்குகின்றன.

அதன் காரணமாக நம்முடைய உடல் சோர்வு நீங்கி விடுகின்றது. மதிய உணவு அல்லது இரவு நேர உணவின் போது வேகவைத்த வடிவில் அல்லது சமைத்த வடிவத்தில் அல்லது சாலட் வடிவில் பீன்ஸ் சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

5. பூசணி விதைகள்:

5. பூசணி விதைகள்:

இதில் புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, போன்ற பிற கனிமங்கள் அதிக அளவில் உள்ளன.

எனவே பூசணி விதைகள் சோர்வை எதிர்த்து போராட உதவும் ஒரு சிறந்த உணவாக விளங்குகின்றது. மேழும் இதிலுள்ள டிரிப்டோபன், மற்றும் அமினோ அமிலம், போன்றவை மனச் சோர்வை நீக்கி உறக்கத்தை ஊக்குவிக்கிறது.

வறுத்த பூசணி விதைகள் அல்லது சமைத்த பூசணி விதைகளை உட்கொள்வது நம் உடலுக்கு மிகவும் உகந்தது.

 6. க்ரீன் டீ :

6. க்ரீன் டீ :

ஒரு பரபரப்பான நாளின் இறுதியில் ஒரு கோப்பை க்ரீன் தேநீர் அருந்திடுங்கள். உங்களின் சோர்வு கண்டிப்பாக ஓடி விடும்.

இதில் உள்ள பாலிஃபினால் மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகின்றது. க்ரீன் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. க்ரீன் டீயில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினவும் அருந்துவது உங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 superfoods to stay energetic

Eat these 6 super foods often to stay energized and be healthy.
Story first published: Tuesday, November 29, 2016, 18:00 [IST]
Subscribe Newsletter