விட்டமின் சியின் 6 நன்மைகள் என்னென்ன?

Posted By: Hemalatha V
Subscribe to Boldsky

விட்டமின் சி நீரில் கரையும் விட்டமின் . இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அஸ்கார்பிக் அமிலம். இதில் நிறைய ஆன்டியாக்ஸிடென்ட் உள்ளது. வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இவற்றை உடலில் சேமித்து வைக்க முடியாது. உடனடியாக சத்தாக உறிஞ்சப்படும். அதிகமான சத்து சிறு நீரகம் மூலமாக வெளியேறிவிடும்.

6 health benefits of vitamin C intake

விட்டமின் சி உள்ள உணவுகள் :

வெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற எல்லா சிட்ரஸ் வகை பழங்களிலும், தக்காளி, கீரை வகைகள், புரோக்கோலி ஆகியவற்றிலும் காணப்படுகிறது.

விட்டமின் சி குறைவதால் உண்டாகும் பாதிப்புகள் :

விட்டமின் சி குறைப்பாட்டினால், தோல் வறண்டு போகும். பற்கள், ஈறுகள் பாதிக்கும். கொலாஜன் உற்பத்தியாகாது. இதனால் தசைகளின் வலிமை குறைந்துவிடும். தீவிரமான விட்டமின் சி குறைபாட்டினால், ஸ்கர்வி நோய் உண்டாகும்.

விட்டமின் சி யின் நன்மைகள் :

ஜலதோஷம் :

விட்டமின் சி உள்ள உணவுகளை குளிர்காலத்த்ல் உண்ணும்போது, ஜலதோஷம், வைரஸ் காய்ச்சல் ஆகியவற்றை தடுக்கலாம், இவை நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்யும்.

6 health benefits of vitamin C intake

உயர் ரத்த அழுத்தம் :

அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் விட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் குறையும்.

மன அழுத்தம் :

மன மற்றும் வேலை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தூண்டப்படும் ஹார்மோன்களை சமன் செய்து மனதை அமைதிப்படுத்தும். நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கும் நிவாரணியாக செயல்படுகிறது.

6 health benefits of vitamin C intake

கொழுப்பை குறைக்கும் :

கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை வேகமாக தூண்டும். இதனால் கொழுப்பு கரைந்து சக்தியாக மாற்றப்படும்.

கொலாஜன் உற்பத்தியை தூண்டும் :

கொலாஜன் நம் உடலுக்கு வடிவம் தருகிறது. இளமையாகவும் , உடல் நெகிழ்வுத்தன்மையுடனும்ம் இருப்பதற்கு கொலாஜன் என்ற புரதமே காரணம். கொலாஜன் உற்பத்திக்கு விட்டமின் சி அத்தியாச தேவையாகும்.

6 health benefits of vitamin C intake

ஆரோக்கியமான சருமம் :

அன்றாட வாழ்வில் விட்டமின் சி யை எடுத்துக் கொண்டால், இளமையான ஆரோக்கியமான தேகத்தை பெறலாம். மேலும் காயங்களை விரைவில் ஆற்றும் குணம் கொண்டது. உடலில் இரும்பு சத்தை உட்கிரகிக்க விட்டமின் சி இன்றியமையாததாகும்.

English summary

6 health benefits of vitamin C intake

6 health benefits of vitamin C intake
Please Wait while comments are loading...
Subscribe Newsletter