இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உலகில் மில்லியன் கணக்கில் பெண்கள் இரும்புச்சத்து குறைபாடு என்னும் இரத்த சோகையினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகினற்னர். இந்த இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அதிக அளவில் சோர்வு ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல் வேறு சில அறிகுறிகளையும் சந்திக்கக்கூடும். அதில் வெளிர் சருமம், மூச்சு விடுவதில் சிரமம், மயக்கம், கால்களில் பிடிப்பு அல்லது குடைச்சல், நாக்கில் புண் அல்லது வீக்கம் ஏற்படுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இப்படி உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், அதன் உற்பத்தியை அதிகரிக்க உணவுகள் தான் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இங்கு இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இரத்த சோகை உள்ளவர்கள், வெள்ளை சாதத்தை தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாதத்தை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸில் எண்ணற்ற சத்துக்களுடன், இரும்புச்சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே காலை வேளையில் ஓட்ஸை உணவாக எடுத்து வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் கலோரிகள் அதிகம் இருந்தாலும், இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இரத்த சோகை இருந்தால், தினமும் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து வாருங்கள்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

காலிஃப்ளவர் போன்று இருக்கும் ப்ராக்கோலியை இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், உடலானது எளிதில் இரும்புச்சத்தை உறிஞ்சும்.

பட்டாணி

பட்டாணி

ஊட்டச்சத்துக்களின் கிடங்காக விளங்கும் பட்டாணியும், இரத்த சோகையைப் போக்க உதவும். எனவே பச்சை பட்டாணி வாங்கி, அதனை சமைத்து சாப்பிட்டு வாருங்கள்.

பசலைக் கீரை

பசலைக் கீரை

பசலைக்கீரையில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி இருப்பதால், இந்த கீரையை உட்கொண்டால், இரும்புச்சத்தை உடலானது விரைவில் உறிஞ்சும்.

பரங்கிக்காய் விதை

பரங்கிக்காய் விதை

பரங்கிக்காய் விதையை வறுத்து, அதனை உண்ணும் உணவில் தூவி, சாப்பிட்டு வந்தால் இரத்த சோகையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Overcome Your Iron Deficiency With These Foods

Experts say that millions of women around the world suffer from iron deficiency, more popularly known as anaemia. This nutritional insufficiency is known to cause fatigue, lethargy and even low work performance. Include these iron-rich foods in your diet to address this problem...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter