For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைக்காலத்தில் சீக்கிரம் கெட்டுப் போகும் உணவுப் பொருட்கள்!!!

By Maha
|

கோடைக்காலத்தில் வெளியே செல்ல வேண்டுமென்றாலே வெறுப்பாக இருக்கும். ஆனால் அதே சமயம் இக்காலத்தில் தான் குடும்பத்துடன் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல முடியும். அப்படி சுற்றுலா செல்லும் போது, பலரும் அதிகம் செலவாகும் என்று ஒருசில உணவுப் பொருட்களை உடன் எடுத்துக் கொண்டு செல்வார்கள்.

ஆனால் அப்படி செல்லும் போது கோடையில் சீக்கிரம் கெட்டுப் போகும் உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை தவிர்த்திடுங்கள். ஏனெனில் அந்த உணவுப் பொருட்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிக அளவில் வெப்பமடைந்தால், அவை உணவை கெட்டுப் போகச் செய்துவிடும்.

மேலும் கோடையில் எந்த ஒரு உணவுப் பொருளையும் தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டாம். இல்லாவிட்டால், அவை அடிக்கும் வெயிலில் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை கோடைக்காலத்தில் சீக்கிரம் கெட்டுப் போகும் உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை சரியாக ஃப்ரிட்ஜில் வைத்து பராமரித்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பாலில் லாக்டோபேசில்லஸ் என்னும் பாக்டீரியா உள்ளது. இவை கோடையில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, விரைவில் பாலை கெட்டுப் போகச் செய்யும். ஆகவே இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

வெண்ணெய்

வெண்ணெய்

கோடையில் சீக்கிரம் கெட்டுப் போகும் உணவுப் பொருட்களில் ஒன்று வெண்ணெய். இதனை குளிர்ச்சியான இடத்தில் வைத்து பராமரிக்காவிட்டால், வெண்ணெயின் மேல் ஒருவித வெள்ளையான மேலோடு உருவாகி, வெண்ணெயை கெட்டுப் போகச் செய்யும்.

தால்/பருப்பு

தால்/பருப்பு

கொளுத்தும் கோடையில் மதியம் சமைக்கும் தால்/பருப்புக்களும் சீக்கிரம் கெட்டுப் போகும். ஆகவே தால் சமைக்கும் போது, அதில் பூண்டு கொஞ்சம் அதிகம் சேர்த்தால் நீண்ட நேரம் நன்றாக இருக்கும்.

தர்பூசணி

தர்பூசணி

என்ன தான் தர்பூசணி கோடைக்கால பழமாக இருந்தாலும், அதிக நேரம் வெப்பமான சூழ்நிலையில் இருந்தால், அவை சீக்கிரம் கெட்டுப் போய்விடும். ஆகவே இது நீண்ட நேரம் நன்றாக இருக்க, ஃப்ரிட்ஜில் வைத்து பராமரிக்க வேண்டும்.

தேங்காய் சேர்த்த பொரியல்

தேங்காய் சேர்த்த பொரியல்

பெரும்பாலான சமையலில் தேங்காய் சுவைக்காக சேர்க்கப்படும். அப்படி தேங்காய் சேர்த்த உணவுப் பொருட்கள் கோடையில் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

சட்னி

சட்னி

இட்லி, தோசைக்கு சைடு டிஷ்ஷாக செய்யப்படும் சட்னியும் கோடையில் சீக்கிரம் கெட்டுப் போகும். அதிலும் அதில் தேங்காய் சேர்த்திருந்தால், இன்னும் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்

கோடையில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அவை விரைவில் கெட்டுப் போய்விடும். அதிலும் தக்காளி, பூசணிக்காய் போன்றவைகள் கோடையில் சீக்கிரம் கெட்டுப் போகும்.

தயிர்

தயிர்

கோடையில் தயிர் சாப்பிடுவது, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். ஆனால் அதனை குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்காவிட்டால், அவை சீக்கிரம் கெட்டுவிடும்.

சிக்கன்

சிக்கன்

சமைக்காத சிக்கன் அதிக வெப்பமான சூழ்நிலையில் இருந்தால், சீக்கிரம் கெட்டுப் போய்விடும். ஆகவே அதனை சற்று குளிர்ச்சியான இடத்தில் வைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழம் என்ன தான் அசிடிக் தன்மை நிறைந்ததாக இருந்தாலும், இதிலும் நீர்ச்சத்து உள்ளதால், இது வெப்பமான சூழ்நிலையில் இருந்தால், விரைவில் கெட்டுப் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Spoil Easily In Summer

In summer season, there are certain types of foods to avoid as it can rot easily when not refrigerated. Take a look at some of the foods that spoil easily in summer.
Desktop Bottom Promotion