For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் 10 சைவ உணவுகள்!!!

By Ashok CR
|

காய்கறிகள் என்பது மிகவும் சத்தானது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றே. நம் உடலில் உள்ள கூடுதலான கலோரிகளை அது எரிக்கும். அதனால் நாம் உண்ணும் உணவுகள் எல்லாம் ஆற்றல் திறன்களாக மாறும். நாம் உண்ணும் உணவு ஆற்றல் திறனாக மாறுவதே மெட்டபாலிசம். மெட்டபாலிசத்தை அதிகரிக்க வைக்க பல சைவ உணவுகள் உள்ளது. மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் உடல் எடையை குறைக்கவும் உதவும். எவ்வளவுக்கு எவ்வளவு காய்கறிக் உண்ணுவதை அதிகரிக்கிறீர்களோ அந்தளவுக்கு ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடலாம்.

பானை போன்ற தொப்பையைக் குறைக்க விலை குறைவில் கிடைக்கும் இந்திய உணவுகள்!!!

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சைவ உணவுகளை சாலட் அல்லது சூப்புகளாக பயன்படுத்தலாம். உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் முதன்மையான அந்த 10 உணவுகள் எவை என உங்களுக்கு தெரியுமா? - அஸ்பாரகஸ், பீன்ஸ், ப்ராக்கோலி, செலரி, வெள்ளரிக்காய், பூண்டு, காரமான மிளகு, கீரை மற்றும் தக்காளி.

மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் இந்த சைவ உணவுகள் அதிகமான கால்சியத்தையும் குறைவான கொலஸ்ட்ரால் அளவையும் கொண்டுள்ளது. மேலும் இரத்த கொதிப்பு மற்றும் இதய நோய்களுக்கு எதிராக போராடி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, சரும பாதிப்புக்களை சீர் செய்யவும் உதவுகிறது. இதுப்போக கிரீன் டீ மற்றும் ஆளி விதைகளும் கூட மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் முக்கியமான உணவுகளாகும்.

கொழுப்பை விரைவில் குறைக்க உதவும் 10 நிமிட உடற்பயிற்சிகள்!!!

சாதாரண டீ குடிப்பதை காட்டிலும், கிரீன் டீ குடிப்பது நாளுக்கு நாளுக்கு பிரபலமாகி கொண்டே போகிறது. அதற்கு காரணம் அதனால் கிடைக்கும் எண்ணிலடங்கா உடல்நல பயன்கள். ஆப்பிள், பேரிக்காய், சிட்ரஸ் பழங்கள் போன்ற மற்ற சில சைவ உணவுகளாலும் கூட உங்கள் மெட்டபாலிசம் அதிகரிக்கும். சரி, மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் அந்த முதன்மையான 10 உணவுகள் பற்றி விரிவாக பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் முதன்மையான ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாக விளங்கும் அஸ்பாரகஸ் மருத்துவ குணமுள்ள செடியாகும். அனைத்து விதமான உடல்நல பயன்களையும் கொண்டுள்ள ஆரோக்கியமான உணவாக அது கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து வளமையாக உள்ளது. மேலும் உடலில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். வயதாகும் செயல்முறையும் கூட இதனால் தாமதாகும்.

பீன்ஸ்

பீன்ஸ்

நார்ச்சத்து நிறைந்த பயறு வகைகளில் ஒன்றான பீன்ஸில் புரதம், இரும்பு, கார்போஹைட்ரேட்ஸ், கால்சியம் மற்றும் ஃபோலேட் உள்ளது, இது புற்றுநோயை எதிர்த்தும் போராடும்.

செலரி

செலரி

செலரி என்பது நார்ச்சத்து வளமையாக உள்ள ஆல்கலைன் காய்கறியாகும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வைட்டமின் பி வளமையாக உள்ள வெள்ளரிக்காய் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

பூண்டு

பூண்டு

பூண்டு என்ற மிகச்சிறந்த மூலிகை சமையலுக்கு மட்டுமல்லாது பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அலர்ஜிகளிடம் இருந்து உடலை வலுவாக்கவும் உதவும்.

மிளகு

மிளகு

காரமான மிளகுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவும்.

கீரை

கீரை

பச்சை இலை காய்கறியான கீரையில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் இரும்புச் சத்தும் வளமையாக உள்ளது. மற்ற இயல்பான உடல்நல பயன்களை தவிர, கண் நோய்களை எதிர்த்தும் இது போராடும்.

தக்காளி

தக்காளி

சிறுநீரக பாதை தொற்றுக்கள் மற்றும் கண் தொற்றுக்களை குறைக்க, சாறு நிறைந்த காயான தக்காளி உதவும்.

 ப்ராக்கோலி

ப்ராக்கோலி

கால்சியம் வளமையாக நிறைந்துள்ள ப்ராக்கோலி, எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கவும் செய்யும்.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

ஒமேகா-3 வளமையாக உள்ள ஆளி விதைகள் லெப்டின் என்ற ஹார்மோன் சுரப்பதை குறைக்கும். இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது, மெட்டபாலிச அளவு குறையத் தொடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Vegetarian Foods That Increase Metabolism

There are many vegetarian foods that increase metabolism. Take a look.
Desktop Bottom Promotion