குளிர்காலத்தில் உடலை இதமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்கள்!

By Srinivasan P M

குளிர்காலங்களில் ஏற்படும் கடும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பணியிலிருந்து காத்துக் கொள்ள கதகதப்பான உடைகளுக்குப் பிறகு உடலுக்குப் பொருந்தக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுப்பது அவசியம். நம்மில் பலருக்கு இரத்த அழுத்தம் குளிர்காலங்களில் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் குளிரினால் இரத்தத்தில் அமிலத்தன்மையும் அதிகரிக்கும். அவ்வாறு உள்ளவர்கள் மேலும் மேலும் ஸ்வெட்டர்களை இந்த பருவத்தில் அணிவர். ஆனால் அது எந்த பலனையும் அளிக்காது. அவர்கள் உடலின் உட்புறம் சூட்டை உணர வேண்டும்.

நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான இயற்கையான இரத்த தூய்மையாக்கிகள்!!!

உடல் வெப்பத்தை தக்க வைக்கும் உணவுகளை உண்பதன் மூலம் உடலை குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வைத்துக்கொள்ள இயலும். இது போன்ற உடலை வெப்பத்துடனும் கதகதப்புடனும் வைத்துக்கொள்ள உதவும் உணவுகளை இப்போது பார்ப்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

உடம்பில் கொழுப்பின் அளவு அதிகம் உள்ளவர்களை பூண்டை சாப்பிட வலியுறுத்துகின்றனர். ஏனெனில் அது கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும். ஆனால் பூண்டு குளிர்காலத்தில் உடம்பின் சூட்டை உயர்த்த உதவும் மற்றுமொரு முக்கிய குணத்தை கொண்டுள்ளது.. குளிர்காலங்களில் சளி, இருமல் மற்றும் காய்சசலால் நீங்கள் அவதிப்பட நேரிடலாம். பாக்டீரியா மற்றும் வைரஸ்களினால் பரவும் இது போன்ற நோய்களை எதிர்க்கும் சக்தி பூண்டில் உள்ளதால் அவற்றை எதிர் கொள்ள இது பெரிதும் உதவுகிறது. குளிர்காலத்தில் தொண்டைகளில் ஏற்படும் அரிப்புகளுக்கு 2-3 பூண்டுப் பற்களை மென்று விழுங்குவதன் மூலம் தீர்வு காண முடியும்.

தேன்

தேன்

குளிர்காலங்களில் நீங்கள் சளி மற்றும் இருமலால் அவதிப்படும் போதெல்லாம் பாட்டி சிறிது தேனை அருந்தச் சொல்வது வழக்கம். இது சளியை எதிர்கொண்டு உடம்பிற்குத் தேவையான எதிர்ப்புச் சக்தியை உருவாக்க உதவும், குளிர்காலத்தில் தினமும் ஒரு ஸ்பூன் தேன் அருந்துவது உங்கள் உடலை கடும் குளிரிலிருந்து பாதுகாக்கும். தேன் சாதாரணமாகவே இனிப்புச் சுவையுடையதால், சர்க்கரைக்கு பதிலாக தேனை உபயோகிப்பது சர்க்கரையினால் உடலுக்கு ஏற்படும் தீங்குகளைக் குறைக்கும். இதன் மூலம் உடலில் உண்டாகும் அதிக கலோரிகளைக் குறைத்து உடம்பை கதகதப்புடன் வைத்துக்கொள்ள இயலும்.

இஞ்சி

இஞ்சி

சுவையூட்டும் வாசனை திரவியமான இஞ்சி இந்தியாவில் அனைத்து இல்லங்களிலும் கண்டிப்பாக இருக்கும். இதுவும் உடல் சூட்டை பராமரிக்க உதவும் உணவுப்பொருட்களில் இன்றியமையாத ஒன்று. இஞ்சி உடலின் வெப்ப நிலையை பராமரிக்கும் வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளதால் உள்ளிருந்து உங்கள் உடல் சூட்டை கதகதப்புடன் வைக்க உதவும். உலற வைத்த இன்சியை உப்புடன் உண்ணும்போது அது உடல் வளர்சிதை மாற்றத்தை குளிர்காலங்களில் நன்கு பேண உதவும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தேனீருடன் இன்சியை கலந்து பருக உடல் கதகதப்புடன் இருக்கும்.

இலவங்கப் பட்டை

இலவங்கப் பட்டை

அனைத்து இந்திய சமையலறைகளிலும் எப்போதும் இருக்கும் ஒரு மசாலா பொருள் இது. இனிப்புச்சுவையும் சூடும் கொண்ட இது உடம்பினுள் சூட்டை உற்பத்தி செய்து பணிகாலத்தில் நிலவும் கடும் குளிரில் இருந்து நம்மைக் காக்கும். சமைத்த உணவுகளில் வெவ்வேறு சுவைகளையூட்டவும் இது பயன்படும். சூடாக பருகும் டீ, காபி மற்றும் இதர பானங்களில் இந்த பட்டையை சேர்த்துப் பருகலாம்.

நட்ஸ்

நட்ஸ்

பல்வேறு விதமான வித்துக்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. வால்நட்ஸ், வேர்க்கடலை மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் வைட்டமின் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்தவைகளாக இருப்பதுடன் உடம்பின் வெப்பத்தை உயர்த்தவும் பயன்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion