For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!

By Maha
|

உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. ஏனெனில் கல்லீரல் தான் உடலுக்கு தேவையான நொதியான பைல் என்பதை உற்பத்தி செய்கிறது. இந்த நொதி இல்லாவிட்டால், உடல் இயங்காது. கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், அவற்றை பிலிரூபின் என்னும் இரத்தக்கூறு கொண்டு கண்டறியலாம்.

அதிலும் மஞ்சள் காமாலையா அல்லது ஏதேனும் கொழுப்புகள் சேமிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியலாம். இத்தகைய பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் ஜங்க் உணவுகள், அதிகமான கொழுப்புள்ள உணவுகள் மற்றும் ஆல்கஹால் பருகுவது தான்.

சுவாரஸ்யமான வேறு: கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!!!

எனவே கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு, சிலவற்றை தினமும் மேற்கொண்டு வந்தால், எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் தடுக்கலாம். குறிப்பாக கல்லீரலை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அத்தகைய சுத்தத்தை உணவுகள் மூலமாகவே சரிசெய்யலாம்.

கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த 15 அருமையான வழிகள்!!!

மேலும் இந்த உணவுகள் கல்லீரலை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். இப்போது அந்த கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தானியங்கள்

தானியங்கள்

கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் போது, அந்த கொபப்புகள் கல்லீரலில் தங்கிவிட்டால், பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே தானியங்களை அதிகம் சாப்பிடும் போது அதில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், அந்த கொழுப்புகளை கரைத்துவிடும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டில் உள்ள கொலஸ்ட்ராலானது உடலுக்கு மிகவும் சிறந்தது. மேலும் அந்த கொழுப்பானது வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுவதோடு, கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே ஆலிவ் ஆயிலை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

பூண்டு

பூண்டு

பூண்டில் சுத்தப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. குறிப்பாக அல்லிசின் மற்றும் செலினியம் போன்றவை இருப்பதால், அவை கல்லீரலில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றிவிடும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் கல்லீரலை சுத்தப்படுத்தும் பொருள் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த பழத்தில் உள்ள பெக்டின் என்னும் பொருள் வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலில் டாக்ஸின்கள் தங்காமல் தடுக்கும்.

இலைக் காய்கறிகள்

இலைக் காய்கறிகள்

இலைவகைக் காய்கறிகளான காலிப்ளவர், முட்டைகோஸ், ப்ராக்கோலி போன்றவற்றில் குளுக்கோஸினோலேட் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரலின் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் அதிகமாக நிறைந்திருக்கும் ப்ளேவோனாய்டுகள், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

அவோகேடோ

அவோகேடோ

அவோகேடோவை சாப்பிட்டால், அவை உடலில் குளுதாதையோனை உற்பத்தி செய்து, கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.

பச்சைக் காய்கறிகள்

பச்சைக் காய்கறிகள்

காய்கறிகள் பச்சை நிறங்களை பெறுவதற்கு, அவற்றில் குளோரோபில் இருக்கிறது. எனவே இத்தகைய பச்சை காய்கறிகளை சாப்பிட்டால், அவற்றில் உள்ள குளோரோபில் கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி, வெளியேற்றும்.

பம்பளிமாஸ்

பம்பளிமாஸ்

கல்லீரலில் உள்ள அழுக்குகளை நீக்க வைட்டமின் சி என்னும் சத்து பெரிதும் உதவும். இத்தகைய சத்து கிரேப் ப்ரூட் என்னும் பம்பளிமாஸ் பழத்தில் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி கிடைத்து, கல்லீரலில் அழுக்குளை நீக்கும் நொதிகளை உற்பத்தி செய்து, கல்லீரலை சுத்தம் செய்யும்.

மல்லி

மல்லி

மல்லியை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலானது குளிர்ச்சி அடைவதோடு, கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும்.

மஞ்சள்

மஞ்சள்

மசாலாப் பொருட்களில் ஒன்றான மஞ்சள் கிருமிகளை அழிக்க சிறந்தது. ஆகவே வயிற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால், அப்போது மஞ்சளை உணவிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடலாம். இதனால் அனைத்தும் சரியாகும்.

வால்நட்

வால்நட்

பொதுவாக கல்லீரலில் மாசுக்கள் தங்குவதற்கு அம்மோனியா அதிகம் இருப்பதே ஆகும். வால்நட்டில் அர்ஜினைன் என்னும் அமினோ ஆசிட் இருப்பதால், அவை அந்த அம்மோனியாவை கல்லீரலில் இருந்து வெளியேற்றி, கல்லீரலை சுத்தமாக வைக்கும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் அதிகமான அளவில் நன்மைகள் அடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய எண்ணற்ற நன்மைகளில், கல்லீரலில் உள்ள அழுக்குளை வெளியேற்றும் கேட்டச்சின்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிடும் போது, அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சுத்தப்படுத்தும் குளுதாதையோனை உடலில் உற்பத்தி செய்கிறது. ஆகவே தினமும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சையை பிழிந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சீமைக் காட்டுமுள்ளங்கி

சீமைக் காட்டுமுள்ளங்கி

கல்லீரலில் உள்ள பழுதடைந்த செல்களை சரிசெய்து, அவற்றை சீராக இயங்க வைப்பதற்கு, சீமைக் காட்டுமுள்ளங்கி மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Foods That Cleanse The Liver

Moderate lifestyle along with a diet that contains liver cleansing foods can help you oversome serious health damage too. Here are 15 foods that have liver cleansing qualities. Pick and choose your favourite ones.
Desktop Bottom Promotion