Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
நீங்க ஸ்லிம் ஆகணுமா? அப்ப தினமும் வீட்டுல இந்த வேலையை செய்யுங்க போதும்...
ஜிம்மிற்கு சென்று மணிக்கணக்கில் ஒர்க்கவுட் செய்து உடல் எடையை குறைப்பது என்பது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சாத்தியமில்லாத ஒன்று. வீட்டு வேலைகளை சரிவர செய்து வந்தாலே உடல் எடை குறையும்.
வீட்டு வேலை தினமும் செய்பவர்களா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு உடல் பருமன் ஆகிவிடுமோ என்ற கவலையே வேண்டாம். தினமும் நீங்கள் என்னென்ன வேலைகளை வீட்டில் செய்கிறீர்கள் என ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள். அந்த பட்டியல் இந்த கட்டுரையுடன் ஒத்துபோகிறதா என பாருங்கள். விடுபட்டிருந்தால் அதனை உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.

தினசரி நாம் வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரம் தேய்ப்பது, வீடு கூட்டுவது என ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்து கொண்டிருக்கிறோம். அவற்றில் சலிப்பு ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால், இந்த வேலைகள் அனைத்தும் உடற்பயிற்சி செய்வதற்கு சமம் என்றால் சலிப்பு வருமா என்ன?
அட ஆமாம், ஜிம்மிற்கு சென்று மணிக்கணக்கில் ஒர்க்கவுட் செய்து கலோரிகளை எரித்து உடல் எடையை குறைப்பது என்பது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சாத்தியமில்லாத ஒன்று. வீட்டு வேலைகளை சரிவர செய்து வந்தாலே உடல் எடை அதிகரிக்காமல் சுலபமாக தடுத்துவிடலாம். இது ஒரு உடற்பயிற்சி அல்லாத செயல்பாடு தெர்மோஜெனெஸிஸ் ஆகும்.

சுத்தம் செய்து கலோரிகளை எரித்திடலாம்
ஜிம்மிற்கு செல்வது பிடிக்காதா உங்களுக்கு? அப்படியெனில், வீட்டில் செய்யும் வேலைகளில் தூங்குவது, சாப்பிடுவது அல்லது உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து மற்ற எல்ல வேலைகளுமே உங்களது உடலை பாதுகாக்க போதுமான உடற்பயிற்சிக்கு சமம். ஆம், வீடு மற்றும் தோட்ட வேலைகளை செய்யும் போது உங்கள் உடலில் உள்ள கலோரிகள் எரிந்துவிடும். மேலும், வீட்டு வேலைகளை செய்வதால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படுவதோடு, உடல் எடையும் சீராக இருக்கும்.

வீட்டை தினமும் கூட்டுங்கள்
வீட்டின் ஒவ்வொரு அறையையும் தினமும் கூட்டி சுத்தம் செய்வதற்கு நிறைய கலோரி தேவைப்படும். அப்படி ஒரு 30 நிமிடங்களுக்கு கூட்டும் போது, நீங்கள் 120 பவுண்டுகள் என்றால் 99 கலோரிகளும், 150 பவுண்டுகள் என்றால் 124 கலோரிகளும், 200 பவுண்டுகள் என்றால் 166 கலோரிகளும் தேவைப்படும். ஒரே மாதிரியாக கூட்டும் வேலையை செய்யாமல், சற்று நடனம் ஆடியோ அல்லது வெவ்வேறு கோணங்களிலோ அதனை செய்தால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

படுக்கை விரிப்பை மாற்றுவது
உங்கள் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட படுக்கையறைகள் இருந்தால் அவற்றை ஒரே மாதிரியாக விடாதீர்கள். அடிக்கடி மெத்தை விரிப்பை மாற்றுவது, சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுங்கள். இதனை செய்வதற்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். 30 நிமிடங்களுக்கு இந்த வேலை செய்யும் போது, நீங்கள் 125 பவுண்டுகள் என்றால் 18 கலோரிகளும், 200 பவுண்டுகள் என்றால் 300 கலோரிகளும் எரிந்துவிடும்.

குழந்தைகளுடன் விளையாடுங்கள்
குடும்பத்துடன் விளையாடி மகிழ்வது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கு நல்லதொரு மருந்தாகும். நீங்கள் சிறிது நேரம் வேலை செய்பவர் என்றால், உங்கள் குழந்தைகளுடன் ஒரு அரை மணி நேரம் விளையாடினால் போதும், 125 பவுண்டு உள்ளவர்களுக்கு 120 கலோரிகளும், 200 பவுண்டு உள்ளவர்களுக்கு 178 கலோரிகளும் எரிந்துவிடும். குழந்தைகளுடன் ஓடிபிடித்து விளையாடும் போது, அதிக கலோரிகள் தேவைப்படுவது நிச்சயம். வேலை செய்வதற்கு பதில் விளையாடியே கலோரிகளை எரிப்பது கூட நன்றாகத் தான் இருக்கும்.

சாப்பிட்டவுடன் பாத்திரம் கழுவுங்கள்
வீட்டு சாப்பாடு அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால், சமைத்த பாத்திரத்தை சுத்தம் செய்வது மட்டும் பிடிக்காத ஒன்றாக இருக்கும். சாப்பிட்டவுடன் உட்கார்ந்து ஓய்வெடுப்பது மிகுந்த ஆனந்தமான செயல். ஆனால், அது உடல் எடையை அதிகரித்து விடும். எனவே, உணவு உண்டதும் பாத்திரம் தேய்த்து விட்டு பின்பு ஓய்வெடுங்கள். ஏனென்றால், 30 நிமிடங்கள் கைகளால் பாத்திரத்தை தேய்த்து கழுவி, சமையலறையை சுத்தம் செய்யும் போது, 125 பவுண்டு உள்ளவர்களுக்கு 187 கலோரிகளும், 200 பவுண்டு உள்ளவர்களுக்கு 300 கலோரிகளும் குறையுமாம்.

தோட்டத்திற்கு செல்லுங்கள்
தோட்டத்திற்கு சென்று தேவையற்ற புல்களை ஒரு அரை மணிநேரம் பறிக்கும் போது, 125 பவுண்டிற்கு 139 கலோரிகளும், 200 பவுண்டிற்கு 205 கலோரிகளும் குறையும். மேற்கொண்டு, புதிய செடிகளை நடுவது என்பது அதிகப்படியான உடற்பயிற்சியாக இருக்கும். அது 135 முதல் 200 கலோரிகளை குறைக்க உதவும். தோட்ட வேலை என்பது உடலை ஃபிட்டாக மற்றும் கட்டுக்கோப்பான உடலை பெற்றிட உதவும்.

வேகமாக வேலை செய்யுங்கள்
நீங்கள் செய்யும் வேலை எப்படி உங்களுக்கு நன்மை அளிக்கிறது என்பதை உணர்வது என்ற கேள்வி அனைவருக்குமே இருக்கும். செய்யும் வேலை கலோரிகளை எரிக்கிறது என்றால் அது நிச்சயம் இதயத் துடிப்பை அதிகரித்து, மூச்சு வாங்க வைக்கும். அப்படி இருந்தால் தான் செய்யும் பணி உடலுக்கு நன்மை அளிக்கிறது என்று அர்த்தம். ஒரு வேலையை செய்ய துவங்கினால் முடிந்தவரை துரிதமாக செய்யுங்கள். தொடர்ந்து 10 நிமிடங்களுக்காவது வேகமாக செய்ய முயற்சியுங்கள். நிச்சயம் அது பலனளிக்கும்.

முடிந்தவரை நடக்க பாருங்கள்
வீட்டில் இருக்கும் போது பெரும்பாலும் உட்கார்ந்தபடியே இல்லாமல், அவ்வபோது நிற்பது, நடப்பது என்றிருக்கப் பாருங்கள். அவ்வாறு செய்யும் போது, உடற்பயிற்சி அல்லாத செயல்பாடு தெர்மோஜெனெஸிஸ் அளவை அதிகரிக்கச் செய்யும். வீட்டிற்குள்ளேயே குறுகிய இடத்தில் நடந்து, நடக்கும் அளவை அதிகரிக்க செய்யுங்கள். இவ்வாறு செய்யும். சில கலோரிகள் குறைவது நிச்சயம். பேருந்து பயணம் மேற்கொண்டால், ஒரு நிறுத்தத்திற்கு முன்பே இறங்கி, நடந்து செல்லுங்கள். ஒரு சிறிய மாற்றம் பெரும் பலனை தரக்கூடும்.



Click it and Unblock the Notifications











