For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடை குறைய உணவில் இருந்து கொழுப்புக்களை எப்படி குறைக்கலாம்?

நம்மில் பெரும்பாலானோர் நேரத்திற்கு கட்டுப்பட்டு வேலை செய்கிறோம், இதற்கு ஏற்றார்போல் நாம் தேர்ந்தெடுக்கும் உணவு விருப்பங்களில் கொழுப்புகள் மற்றும் வெற்று கலோரிகள் அதிகம் உள்ளன.

|

நம்முடைய நகர்ப்புற உணவு வகைகளில் எண்ணெய், சர்க்கரை மற்றும் கொழுப்பு போன்றவை நிறைந்து உள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பாக்கெட் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை நம்பியிருப்பது முந்தைய காலத்தை விட அதிகமாக உள்ளது. நம்மில் பெரும்பாலானோர் நேரத்திற்கு கட்டுப்பட்டு வேலை செய்கிறோம், இதற்கு ஏற்றார்போல் நாம் தேர்ந்தெடுக்கும் உணவு விருப்பங்களில் கொழுப்புகள் மற்றும் வெற்று கலோரிகள் அதிகம் உள்ளன.

Weight Loss: 5 Ingenious Tips To Cut Fat and Cholesterol From Your Diet

அத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியமான உணவு என்பது பேச்சளவில் மட்டுமே உள்ளது. அதற்காக உணவில் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கிறோம் என்று முற்றிலும் சொல்லிவிட முடியாது. படிப்படியான மாற்றங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளலாம். எடை இழப்பு மற்றும் குறைந்த கொழுப்பு ஆகியவை சிறந்த இதய ஆரோக்கியத்தின் அறிகுறிகளாகும். உங்கள் எடை மற்றும் கொழுப்பைக் கட்டுக்குள் கொண்டுவர இன்று எடுக்கப்பட்ட சிறிய படிகள், நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை நீண்ட காலம் வாழ உதவலாம்.

இங்கு உங்கள் உணவில் இருந்து கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்க 5 தனித்துவமான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடை நீக்கப்பட்ட அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களைப் பயன்படுத்துங்கள்

ஆடை நீக்கப்பட்ட அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களைப் பயன்படுத்துங்கள்

பல ஆய்வுகள் முழு கிரீம் பால் அல்லது பால் பொருட்கள் எடை இழக்க விரும்புவோருக்கு சிறந்த தீர்வாக இருக்காது என்று கூறியுள்ளன. அவை புரதத்தில் அதிகமாக இருக்கலாம். ஆனால் அவை எடையைத் தூண்டும். ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு அற்புதமான எடை இழப்பு பொருளாகும். ஆடை நீக்கப்பட்ட பால் என்பது பாலில் உள்ள அனைத்து கிரீம் அகற்றப்பட்ட நிலையாகும்; அதன் கொழுப்பு உள்ளடக்கம் 0.1 சதவீதம். நீங்கள் அதனை அப்படியே பருகலாம், தானியங்களுடன் சேர்த்து உட்கொள்ளலாம் அல்லது ஸ்மூதியில் கலந்து உட்கொள்ளலாம்.

மெலிந்த இறைச்சிகளைத் தேர்ந்தெடுக்கவும்

மெலிந்த இறைச்சிகளைத் தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் பன்றி இறைச்சி சாப்பிடுகிறீர்களானால், சர்லோயின் ரோஸ்ட், டெண்டர்லோயின் அல்லது இடுப்பு சாப்ஸ் போன்ற மெலிந்த இறைச்சியைத் தேர்ந்தெடுக்கவும்; இறைச்சியின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது இந்த வெட்டுக்கள் குறைவான கொழுப்பைக். கொண்டிருக்கும். இருப்பினும், சிவப்பு இறைச்சியைக் குறைத்து கோழி அல்லது மீன் போன்ற மெலிந்த இறைச்சியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் அதன் அதிக புரத மதிப்பு மற்றும் குறைந்த கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு உள்ளடக்கம் உடலுக்கு நன்மை விளைவிக்கும். உங்கள் உணவு சீரானதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களுக்கு உங்கள் இறைச்சி சார்ந்த உணவை போதுமான தானியங்கள் மற்றும் காய்கறிகளுடன் பூர்த்தி செய்யுங்கள்.

காய்கறி அல்லது வேர்க்கடலை எண்ணெயைப் பயன்படுத்துங்கள்

காய்கறி அல்லது வேர்க்கடலை எண்ணெயைப் பயன்படுத்துங்கள்

உணவு தயாரிப்பது அதன் இறுதி கலோரி எண்ணிக்கையை தீர்மானிக்கிறது. உங்கள் உணவை நாட்டு நெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் சமைப்பது உங்கள் உணவில் தேவையற்ற நிறைவுற்ற கொழுப்புகளைத் தூண்டுகிறது. இது உங்கள் தமனிகளை அடைத்து, உங்கள் கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தும், அதே நேரத்தில் எடை அதிகரிக்கும் அபாயத்தையும் அதிகரிக்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சமைக்கவும்

முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சமைக்கவும்

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அதிக கொழுப்பு உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கரு இல்லாமல் உணவைத் தேர்வு செய்யலாம். முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பு நிறைந்திருப்பதாக பலர் நம்புகிறார்கள். இது கொழுப்பைத் தூண்டும் என்பது உண்மை அல்ல. உண்மையில், இது வைட்டமின் டி மற்றும் கோலின் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. எனவே, ஒரு சமநிலையை அடைய கற்றுக் கொள்ளுங்கள்.

உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்துகளை அதிகரிக்கவும்

உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்துகளை அதிகரிக்கவும்

உங்கள் உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கொட்டைகள், பழங்கள் போன்றவற்றை இணைக்க முயற்சிக்கவும். உங்கள் உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து இரண்டும் மனநிறைவு உணர்வைத் தூண்ட உதவுகின்றன. ஏனெனில் அவை ஜீரணிக்க சிறிது நேரம் ஆகும். மேலும் வயிறு நிரம்பிய உணர்வை மேலும் அளிக்கிறது. காய்கறிகள், தானியங்கள், பருவகால பழங்கள் மற்றும் கொட்டைகள் ஆகியவை உங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய புரதத்தின் சில சிறந்த ஆதாரங்கள்.

எனவே நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? மேலே கூறப்பட்ட குறிப்புகளை இன்றே முயற்சித்து உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு இது எவ்வாறு உதவுகிறது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight Loss: 5 Ingenious Tips To Cut Fat and Cholesterol From Your Diet

Here are some ingenious tips to cut fat and cholesterol from your diet. Read on...
Desktop Bottom Promotion