Latest Updates
-
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
இந்த உணவுகள் தொப்பைக் கொழுப்புக்களை ஆப்ஸ் ஆக மாற்ற உதவும் என தெரியுமா?
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடையைக் குறைப்பதற்கு, சில வகையான உணவுகளும் முக்கியம். உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை நீக்குவதற்கு, ஆரோக்கியமான உணவுகளை உண்பது மிகவும் அவசியம்.
ஒருவரது உடல் எடை மைல் கணக்கில் ஓடுவதால் மற்றும் பளுவைத் தூக்குவதால் மட்டும் குறையாது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடையைக் குறைப்பதற்கு, சில வகையான உணவுகளும் முக்கியம். உடலில் தேங்கியிருக்கும் அதிகளவு கொழுப்புக்களை நீக்குவதற்கு, ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உணவுகளை உண்பது மிகவும் அவசியம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆரோக்கியத்திற்கு தேவையான மற்றும் எடையைக் குறைக்கும் செயல்பாட்டை வேகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நிறைந்துள்ளன. ஆகவே எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்போர் எந்த வகையான உணவைத் தேர்ந்தெடுத்து உண்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இக்கட்டுரையில் தொப்பைக் கொழுப்புக்களை ஆப்ஸ் ஆக மாற்ற உதவும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், தொப்பையை ஆரோக்கியமான வழியில் குறைத்துவிடலாம்.

மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு
டயட்டில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களை சேர்ப்பதன் மூலம், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் எளிதில் நீங்கி, தொப்பை ஆப்ஸ் ஆக மாறும். மேலும் இது இதய பிரச்சனைகளின் அபாயம் மற்றும் உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும். பல ஆய்வுகளில், டயட்டில் உள்ள அதிகளவு மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உடல் எடையைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்த உணவுகள்
* அவகேடோ
* நட்ஸ்
* பாதாம்
* ஆலிவ் ஆயில்

நார்ச்சத்து
கரையக்கூடிய நார்ச்சத்துக்களான பீட்டா-க்ளுட்டன் மற்றும் க்ளுக்கோமானன்களை அதிகளவு எடுப்பதன் மூலம், தொப்பைக் கொழுப்புக்கள் குறையும் மற்றும் கொழுப்புக்கள் உடலில் சேராமலும் தடுக்கும். பல்வேறு ஆய்வுகளில் கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு தொப்பை வருவதன் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது. மேலும் இது செரிமானத்தை தாமதமாக்கி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்
* ஆப்பிள்
* ப்ளம்ஸ்
* சிட்ரஸ் பழங்கள்
* ஓட்ஸ்
* பேரிக்காய்

புரோட்டீன்
எடையைக் குறைக்க நினைப்போர் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதனால் இந்த சத்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் பசியுணர்வைக் குறைக்கும். புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகள், தூக்க நேரத்தில் அதிகளவு கலோரிகளை கரைக்க உதவி புரியும்.

புரோட்டீன் உணவுகள்
* சிக்கன்
* மீன்
* பால் பொருட்கள்

ராஸ்ப்பெர்ரி கீட்டோன்
ராஸ்ப்பெர்ரி கீட்டோன்கள் என்னும் இயற்கை பொருளானது, சிவப்பு நிற ராஸ்ப்பெர்ரி பழத்திற்கு மணத்தைக் கொடுக்கிறது. இத்தகைய பொருள் நிறைந்த உணவுப் பொருட்கள் குறைவான அளவில் தான் இருக்கும். இருப்பினும், இந்த உட்பொருளானது தசைகளின் செயல்பாட்டிற்கும், கொழுப்பைக் கரைக்கும் ஹார்மோனான அடிகோநெக்டின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.

ராஸ்ப்பெர்ரி கீட்டோன் நிறைந்த உணவுகள்
* ராஸ்ப்பெர்ரி
* ப்ளாக்பெர்ரி
* கிரான்பெர்ரி

எபிகல்லோகாடெசின் காலேட் (EGCG)
EGCG என்னும் உட்பொருட்ளானது க்ரீன் டீயில் உள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. அதில்,
* உட்காயங்களைக் குறைப்பது
* எடையைக் குறைப்பது
* இதயம் மற்றும் மூளை நோய்களைத் தடுப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மேலும் இந்த உட்பொருள் அதிகப்படியான கலோரிகளை எரிப்பதன் மூலம் தெர்மோஜெனீசிஸை அதிகரிக்கும்.

எபிகல்லோகாடெசின் காலேட் நிறைந்த உணவுகள்
* க்ரீன் டீ
* கிரான்பெர்ரி
* பேரிக்காய்
* ஹாசில்நட்ஸ்



Click it and Unblock the Notifications