Just In
- 4 min ago
இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் போல ரொமான்டிக்காக காதலிக்க யாராலும் முடியாதாம்... உங்க காதலி ராசி என்ன?
- 1 hr ago
இந்த 5 ராசிக்காரங்க நாடி நரம்பு ரத்தத்துல தேசபக்தி ஊறிப்போயி இருக்குமாம்... உங்க ராசி என்ன?
- 1 hr ago
மலச்சிக்கலைப் போக்கி குடல்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் ஜூஸ்கள்!
- 1 hr ago
18 வயதிலேயே ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்ட இந்தியாவின் இளம் புரட்சியாளர் யார் தெரியுமா?
Don't Miss
- Sports
மீண்டும் கேப்டனாகும் கங்குலி.. லேஜண்ட்ஸ் கிரிக்கெட் இந்திய அணி அறிவிப்பு.. யார் பங்கேற்கிறார்கள் ?
- Movies
தூங்காதீங்க தில்ராஜு.. முழிச்சுட்டு வந்து படத்தோட அப்டேட் கொடுங்க.. ட்ரெண்டான வாசகம்!
- News
இருட்டுக் கடை அல்வா முதல் பார்டர் பரோட்டா வரை.. சென்னையில் உணவுத் திருவிழா! பீஃப் பிரியாணி நஹி!
- Automobiles
இனி மானியம் கிடையாது... பேக் அடித்த மாநில அரசு... "போட்ட பிளான் எல்லாம் போச்சே" புலம்பும் மக்கள்!..
- Finance
ஒரே ஒரு செங்கல்... துபாய் இளவரசரிடம் இருந்து பாராட்டு.. ஆச்சரியத்தில் டெலிவரி ஏஜெண்ட்
- Technology
செம ஸ்டைலான Redmi கே50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
- Education
இரண்டாவது பெரிய துறைமுகத்தில் பணி வாய்ப்பு?
- Travel
தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் இருக்கிறீர்களா? இந்த நீண்ட வார இறுதியை சரியாக திட்டமிடுங்கள்!
தினமும் காலையில் இந்த பொடியை நீரில் கலந்து குடிச்சா தொப்பை காணாமல் போயிடுமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையால் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல் அதிக எடையுடன் இருந்தால், சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன், உடற்பயிற்சியும் அவசியம் என்பதை அனைவருமே அறிவோம்.
உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் பல்வேறு டயட் மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை பயன்படுத்துகின்றனர். நீங்களும் உடல் எடையைக் குறைக்க உங்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்புபவராயின், உங்களுக்காக ஒரு அற்புதமான மற்றும் பாதுகாப்பான ஒரு ஆயுர்வேத பானம் குறித்து கீழே கொடுத்துள்ளோம்.

எடை இழப்பு பானம்
சோம்பு, சீரகம், ஓமம் மற்றும் பெருங்காயம் போன்றவை நம் வீட்டு சமையலறையில் பொதுவாக காணப்படும் மசாலா பொருட்களாகும். இந்த பொருட்கள் அனைத்திலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான மருத்துவ பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளன. இந்த நான்கு பொருட்களும் ஆயுர்வேதத்தில் மருந்துகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த நான்கு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத பொடி உடல் எடையை வேகமாக குறைக்க பெரிதும் உதவி புரியும்.

ஆயுர்வேத பொடியைத் தயாரிப்பது எப்படி?
சீரகம், சோம்பு, ஓமம் மற்றும் பெருங்காயத்தை சரிசம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை லேசாக வறுத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்க வேண்டும்.

உட்கொள்ளும் முறை
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் அரைத்த ஆயுர்வேத பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். இது தவிர இந்த பொடியை, தினமும் சாப்பிடும் சாலட்டின் மீதும் தூவி சாப்பிடலாம்.

இந்த ஆயுர்வேத பொடி எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?
செரிமானம்
ஆயுர்வேத பொடியில் உள்ள பொருட்கள் அனைத்துமே செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், செரிமான பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது. ஒருவரது செரிமானம் சிறப்பாக இருந்தால், அவர் உடல் பருமனாகாமல் இருப்பார். எனவே இந்த ஆயுர்வேத பொடி செரிமானத்தை மேம்படுத்தும்.

மெட்டபாலிசம் மேம்படும்
ஒருவரது உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருக்க வேண்டும். இந்த ஆயுர்வேத பொடியை உட்கொள்வதன் மூலம், உடலின் மெட்டபாலிசம் சீராக இருக்கும்.

பசியைக் கட்டுப்படுத்தும்
ஆயுர்வேத பொடியில் உள்ள பொருட்கள் அனைத்துமே அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுவதால், கண்ட நேரத்தில் கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, அதிக கலோரிகளை உட்கொள்வதைத் தடுக்கிறது.

கொழுப்புக்களைக் குறைக்கும்
ஆயுர்வேத பொடியில் உள்ள உட்பொருட்கள், உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க உதவுகிறது. எனவே இந்த பொடியை தினமும் உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு வேகமாக குறைந்து, விரைவில் சிக்கென்ற உடலைப் பெற முடியும்.

இரத்த சர்க்கரை அளவு குறையும்
முக்கியமாக இந்த ஆயுர்வேத பொடி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவி புரிகிறது. எனவே நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்து, உடல் எடையைக் குறைக்க விரும்பினால், இந்த ஆயுர்வேத பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.