Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
5 நாட்களில் 5 கிலோ எடையைக் குறைக்க உதவும் அன்னாசி டயட் பற்றி தெரியுமா?
உங்களுக்கு அன்னாசிப்பழம் ரொம்ப பிடிக்குமா? அதே சமயம் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியானால் அன்னாசி டயட்டை மேற்கொள்ளுங்கள். இது ஒருவரின் எடை இழப்பு நோக்கத்தை நிச்சயம் அடைய உதவுமாம்.
Pineapple Diet For Weight Loss In Tamil: உலகெங்கிலும் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அவற்றைக் குறைக்க பல வழிகளை முயற்சித்து வருகிறார்கள். சிலர் உடல் எடையை வேகமாக குறைப்பதற்கான டயட்டுகளை தேடி அவற்றை பின்பற்றி வருகிறார்கள். உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான டயட்டுகள் உள்ளன. அதில் ஒன்று தான் அன்னாசி டயட். இது அன்னாசிப்பழம் சார்ந்த டயட் ஆகும். இந்த டயட் 5 நாட்களில் குறிப்பிட்ட எடையைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

அன்னாசிப்பழம் மிகவும் சுவையான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழம். இந்த பழத்தை விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள். உங்களுக்கு அன்னாசிப்பழம் ரொம்ப பிடிக்குமா? அதே சமயம் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியானால் அன்னாசி டயட்டை மேற்கொள்ளுங்கள். இது ஒருவரின் எடை இழப்பு நோக்கத்தை நிச்சயம் அடைய உதவுமாம். இக்கட்டுரையில் அன்னாசி டயட் என்றால் என்ன? அன்னாசி டயட் எப்படி வேலை செய்கிறது மற்றும் அன்னாசி டயட் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அன்னாசி டயட் என்றால் என்ன?
அன்னாசி டயட் என்பது வேகமாக உடல் எடையைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட டயட்டுகளில் ஒன்றாகும். இது ஒரு மோனோ டயட் ஆகும். இந்த டயட்டில் 5 நாட்கள் அன்னாசி பழத்தை சாப்பிட வேண்டும். அத்துடன் ஒருசில உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த டயட் மேற்கொள்ளும் போது, வேறு எந்த வகையான உணவுகளையும் உண்ணக்கூடாது. இது தற்காலிக எடை இழப்புக்காக வடிவமைக்கப்பட்ட டயட் ஆகும்.

அன்னாசி டயட் எப்படி வேலை செய்கிறது?
அன்னாசி டயட் ஒரு கடுமையான டயட் திட்டமாகும். இந்த டயட்டை மேற்கொள்பவர் அன்னாசியை அதிகம் உண்ண வேண்டும். இந்த டயட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்காததால், அச்சத்துக்கள் செய்ய வேண்டிய வேலையை, உடலானது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கொண்டு செய்ய வைக்கிறது. இதனால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய தொடங்குகிறது.
ஆனால் இந்த டயட்டை 5 நாட்களுக்கு மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை தொடர்ந்து மேற்கொண்டால், அது உடலில் பல ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்பட்டு, பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இந்த டயட்டில் ஒவ்வொரு நாளும் எந்த மாதிரி சாப்பிட வேண்டும்?
பலருக்கும் அன்னாசி டயட்டை மேற்கொள்ளும் போது எந்த மாதிரி சாப்பிட வேண்டும் என்ற கேள்வி எழலாம். எனவே கீழே உதாரணமாக 5 நாட்கள் எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நாள் 1
* அதிகாலை - 1 கப் க்ரீன் டீ
* காலை உணவு - 2-3 துண்டு அன்னாசி, 1 கப் ஓட்ஸ்
* ஸ்நாக்ஸ் - 1 டம்ளர் அன்னாசி ஜூஸ்
* மதிய உணவு - 1 க்ரில்டு மீன், 3 அன்னாசி துண்டுகள்
* மாலை நேர ஸ்நாக்ஸ் - 1 டம்ளர் அன்னாசி ஜூஸ், 1 கப் தயிர்
* இரவு உணவு - 1 க்ரில் சிக்கன் மற்றும் 4 அன்னாசி துண்டுகள்

நாள் 2
* அதிகாலை - 1 டம்ளர் வெந்தய டீ
* காலை உணவு - 1 கப் அன்னாசி துண்டுகள் , 1 வேக வைத்த முட்டை
* ஸ்நாக்ஸ் - 1 டம்ளர் அன்னாசி ஜூஸ்
* மதிய உணவு - 1 கப் அன்னாசி துண்டுகள், 1 பௌல் காய்கறி சாலட்
* மாலை நேர ஸ்நாக்ஸ் - 1 டம்ளர் அன்னாசி ஜூஸ்
* இரவு உணவு - 1 பௌல் வேக வைத்த காய்கறிகள், 1 கப் அன்னாசி

நாள் 3
* அதிகாலை - 1 டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ்
* காலை உணவு - 1 கப் அன்னாசி, 1 மசாலா ஆம்லெட்
* ஸ்நாக்ஸ் - 1 டம்ளர் அன்னாசி ஜூஸ்
* மதிய உணவு - 1 கப் அன்னாசி, 1/2 க்ரில் சிக்கன்
* மாலை நேர ஸ்நாக்ஸ் - 1 டம்ளர் அன்னாசி ஜூஸ்
* இரவு உணவு - 1 பௌல் மசாலா சேர்த்து வதக்கிய காளான் மற்றும் 1 கப் அன்னாசி

நாள் 4
* அதிகாலை - 1 டம்ளர் க்ரீன் டீ
* காலை உணவு - 1 கப் அன்னாசி, 1 கப் திணை உப்புமா
* ஸ்நாக்ஸ் - 1 டம்ளர் அன்னாசி ஜூஸ்
* மதிய உணவு - 1 கப் அன்னாசி, 1 வெஜிடேபிள் சாண்விட்ச்
* மாலை நேர ஸ்நாக்ஸ் - 1 டம்ளர் அன்னாசி ஜூஸ், 1 கப் தயிர்
* இரவு உணவு - 1 பௌல் டூனா சாலட், 1 கப் அன்னாசி

நாள் 5
* அதிகாலை - 1 கப் பட்டை இஞ்சி டீ
* காலை உணவு - 1 கப் அன்னாசி, 1 வேக வைத்த முட்டை, 2 பாதாம்
* ஸ்நாக்ஸ் - 1 டம்ளர் அன்னாசி ஜூஸ்
* மதிய உணவு - 1 கப் அன்னாசி, 1 கப் தயிர்
* மாலை நேர ஸ்நாக்ஸ் - 1 கப் மசாலா பொரி
* இரவு உணவு - 1 சிக்கன் நெஞ்சுக்கறி , 1 கப் அன்னாசி

அன்னாசி டயட்டின் நன்மைகள்
அன்னாசி டயட் உங்களுக்கு ஏற்றதா இல்லையா என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளை அறிந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
* இது மிகவும் சிம்ளான டயட்.
* அன்னாசியில் உள்ள புரோமிலைன் பசியை அடக்கி, குடலியக்கத்தை மென்மையாக்கி, ஊட்டச்சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதை அதிகரிக்கும்.
* இது குறுகிய காலத்தில் வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
* இந்த டயட் உடலினுள் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உள்ளுறுப்புக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
* நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை கொண்டவர்கள் இந்த டயட்டினால் நற்பலனைப் பெறலாம்.
* இந்த டயட் நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவும்.

அன்னாசி டயட்டின் பக்கவிளைவுகள்
எந்த ஒரு டயட்டும் நன்மைகளை மட்டுமன்றி, பக்கவிளைவுகளையும் கொண்டிருக்கும். இப்போது அன்னாசி டயட்டின் சில பக்கவிளைவுகளைக் காண்போம்.
* அன்னாசியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், அது கடுமையான அசிடிட்டியை உண்டாக்கும்.
* அன்னாசியில் நாச்சத்து அதிகம் இருப்பதால், அது வயிற்றுப்போக்கை உண்டாக்கலாம்.
* அன்னாசி அழற்சியைக் கொண்டவர்கள், இந்த டயட்டை மேற்கொண்டால், அது வாய் மற்றும் கன்னங்களில் வீக்கத்தை உண்டாக்கும்.
* சிலர் வயிற்றுப்புண் மற்றும் நெஞ்செரிச்சலை அனுபவிக்கலாம்.
* இது தவிர கடுமையான உடல் சோர்வு, பலவீனம், தலைவலி மற்றும் குமட்டல் போன்ற பக்கவிளைவுகளையும் சந்திக்கலாம்.
எனவே நீங்கள் விரைவில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால் அன்னாசி டயட்டை மேற்கொள்ளுங்கள். ஆனால் 5 நாட்களுக்கு மேல் இந்த டயட்டை மேற்கொள்ளக்கூடாது. இல்லாவிட்டால் கடுமையான ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
குறிப்பு: எந்த ஒரு டயட்டை மேற்கொள்வதாக இருந்தாலும், முதலில் உங்கள் மருத்துவரின் அனுமதியைப் பெற்ற பின்னரே மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications