Just In
- 4 hrs ago
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- 6 hrs ago
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- 10 hrs ago
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- 18 hrs ago
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
Don't Miss
- Movies
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. காந்தாரா ஹீரோயினுக்கு கிடைத்த பாலிவுட் வாய்ப்பு!
- News
"எனக்கு ஆதரவு கொடுங்கள்".. அண்ணாமலையிடம் பேசி வைத்த ஓபிஎஸ்? "அவர்" சொல்வது உண்மையா? என்ன நடந்தது?
- Finance
மாதம் 8000 சம்பளம் வாங்கியவர், தினமும் 6 கோடி சம்பாதிக்கிறார்.. யார் இந்த நிதின்..!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கே.ஜி.எஃப் நடிகர் யாஷின் டயட் மற்றும் ஃபிட்னஸ் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க..
இந்தியாவில் கன்னட திரைப்படங்கள் அவ்வளவாக சூப்பர் ஹிட் ஆனதில்லை. ஆனால் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வெளிவந்த கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னடத்தில் மட்டுன்றி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்து மிகவும் சூப்பர் ஹிட்டானது. இந்த திரைப்படத்தில் நடித்த கன்னட நடிகர் யாஷின் நடிப்பை பார்த்த பின்னர் இவர் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார். கே.ஜி.எஃப்-ன் முதல் பாகத்தைக் கண்ட பின்னர், இரண்டாம் பாகத்திற்காக பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து, அது பிளாக் பஸ்டர் ஆனது.
கே.ஜி.எஃப் படத்தில் நடித்த கன்னட நடிகர் யாஷ்ஷின் ஃபிட்டான உடலைப் பார்த்த பலரும், அவரது டயட் மற்றும் ஃபிட்னஸ் ரகசியத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். நீங்களும் நடிகர் யாஷின் ஃபிட்னஸ் ரகசியத்தை தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்.

நடிகர் யாஷ்
36 வயதான நடிகர் யாஷ் அவர்களின் இயற்பெயர் நவீர் குமார் கௌடா. இவர் 1986 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் தேதி பிறந்தார். நடிகர் யாஷ் கன்னட திரையுலகில் பிரபலமானவர். இவர் தனது பள்ளிப்படிப்பை மைசூரில் உள்ள மகாஜன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் அவர் முறையான நடிப்புத் திறமையைப் பயின்றார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி என்ற கன்னடத் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இவர் 2016 ஆம் ஆண்டு ராதிகா பண்டிட்டை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நடிகர் யாஷ் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதற்காக இவர் டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் தவறாமல் பின்பற்றி வருவாராம். இப்போது கச்சிதமான உடலைப் பெற நடிகர் யாஷ் மேற்கொள்ளும் டயட் மற்றும் ஃபிட்னஸ் ரகசியத்தைத் தெரிந்து கொள்வோம் வாருங்க.

காலை உணவு
யாஷ் நல்ல ஃபிட்டான உடலமைப்பைப் பெறுவதற்காக காலை வேளையில் உடற்பயிற்சியை செய்த பின்னர், காலை உணவாக கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பாராம். அதில் ஒரு கப் நட்ஸில் ஜாதிக்காய் பொடி தூவி உண்பதோடு, 5 ப்ரௌன் பிரட், 8 முட்டையின் வெள்ளைக்கருவுடன் காய்கறிகள் மற்றும் சிறிது தர்பூசணி அல்லது பப்பாளியை சாப்பிடுவாராம்.

காலை உணவிற்கு பின்...
காலை உணவிற்கு பின்னர் 11 மணியளவில் ஸ்நாக்ஸாக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்கை உட்கொள்வாராம்.

மதிய உணவு
நடிகர் யாஷ் மதிய உணவின் போது புரோட்டீன் உணவுகளை அதிகம் உண்பாராம். அதுவும் சிக்கனை விட மீனை தான் யாஷ் விரும்பி உண்பாராம். இதனாலேயே தினமும் மதிய உணவில் மீனை சேர்த்துக் கொள்வாராம். அதுவும் அந்த மீனை எண்ணெயில் பொரிக்காமல் வேக வைத்து தான் சாப்பிடுவாராம்.

மாலை நேர ஸ்நாக்ஸ்
யாஷ் தினமும் மாலை வேளையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவாராம். ஏனெனில் மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதற்கு உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் என்பதால், மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக 4 ப்ரௌன் பிரட் துண்டுகளுடன் 4 வாழைப்பழங்களையும் சாப்பிடுவாராம்.

இரவு உணவு
நடிகர் யாஷ் இரவு நேரத்தில் வீட்டில் சமைத்த உணவுகளையே உண்பாராம். அதுவும் புரோட்டீன் நிறைந்த உணவுகளையே உண்பாராம். ஆனால் இரவு உணவை அளவாகவே சாப்பிடுவாராம்.

சீட்டிங் மீல்
என்ன தான் யாஷ் ஃபிட்டான உடலமைப்பைப் பராமரிக்க கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டாலும், அது வாரத்திற்கு 6 நாட்கள் மட்டுமே. மீதமுள்ள ஒரு நாளில் யாஷ் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தனக்கு பிடித்த உணவை உண்பாராம்.

நடிகர் யாஷின் உடற்பயிற்சி திட்டம்
யாஷ் தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வாராம். அதுவும் காலையில் 6 மணிக்கு எழுந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவார். குறிப்பாக வெறும் வயிற்றில் முதல் 30 நிமிடங்கள் புஷ்-அப், புல்-அப் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வாராம். அதேப் போல் மாலை வேளையில் கடுமையான எடைகளைத் தூக்குவாராம்.

திங்கட்கிழமை - மார்பு பயிற்சிகள்
* பென்ச் பிரஸ் (Bench press)
* டம்பெல் பிரஸ் (Dumbbell press)
* டிக்லைன் பிரஸ் (Decline press)
* டம்பெல் ப்ளை (Dumbbell fly)
* டம்பெல் புல்ஓவர் (Dumbbell pullover)

செவ்வாய் கிழமை - தோள்பட்டைக்கான பயிற்சி
* மிலிட்டரி பிரஸ் (Military Press)
* முன்பக்க ஷோல்டர் பிரஸ் (Front Shoulder Press)
* சீட்டட் டம்பெல் பிரஸ் (Seated Dumbell Press)
* ஷோல்டர் பிரஸ் (Shoulder Press)
* பென்ட்-ஓவர் லேட்ரல் ரைஸ் (Bent-over Lateral Raise)
* அப்ரைட் ரோ (Upright Row)

புதன்கிழமை - முதுகு
* T-பார் ரோ (T-bar row)
* சீட்டட் கேபிள் ரோ (Seated cable row)
* லேட் புல் டவுன் தி ஃப்ரன்ட் (Lat pull down the front)
* பிரென்டட் சின் அப் (Fronted Chin up)
* ஒன்-ஆர்ம் டம்பெல் ரோ (One-arm dumbbell row)
* டெட்லிப்ட் (Deadlift)

வியாழக்கிழமை - பைசெப்ஸ்
* பார்பெல் கர்ல்ஸ் (Barbell curls)
* டம்பெல் கர்ல்ஸ் (Dumbbell curls)
* ப்ரீச்சர் கர்ல்ஸ் (Preacher curls)
* கான்சென்ட்ரேசன் கர்ல்ஸ் (Concentration curls)
* விரிஸ்ட் கர்ல் (Wrist curl)
* ரிவர்ஸ் கர்ல் (Reverse curl)

வெள்ளிக்கிழமை - ட்ரைசெப்ஸ்
* ஷார்ட் க்ரிப் ட்ரைசெப்ஸ் பிரஸ் (Short grip triceps press)
* ரோப் புல்டவுன் (Rope pulldown)
* கேபிள் லையிங் ட்ரைசெப்ஸ் எக்ஸ்டன்சன் (Cable Lying Triceps Extension)
* டம்பெல் கிக்பேக்ஸ் (Dumbbell kickbacks)
* டிப்ஸ் பிகைன்ட் தி பேக் (Dips behind the back)

சனிக்கிழமை - கால்
* ஸ்குவாட் (Squat)
* லஞ்சஸ் (Lunges)
* லெக் பிரஸ் (Leg press)
* லெக் கர்ல் (Leg curl)
* லெக் எக்ஸ்டன்சன் (Leg extension)
* உட்கார்ந்த நிலையில் பாதங்களை மேலே தூக்குவது ( Seated toe raise for calves)