For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெனோபாஸ் காலகட்டத்தை உணவின் மூலம் தாமதப்படுத்த முடியுமா?

|

ஒவ்வொரு மாதமும் உண்டாகும் மாதவிடாய் மொத்தமாக முடிவிற்கு வரும் காலகட்டம் தான் மெனோபாஸ் காலகட்டம். மாதவிடாய் பிரச்சனையை ஒவ்வொரு மாதமும் அனுபவிக்கும் பெண்கள் சிலர் சீக்கிரம் இந்த மெனோபாஸ் காலகட்டம் வந்துவிடாதா என்று ஏங்குவர். ஆனால் ஒரு சிலர் மெனோபாஸ் காலகட்டம் தாமதமாக வராதா என்று நினைப்பார்கள். ஆனால் இயற்கைக்கு புறம்பாக எந்த ஒரு யோசனையை நாம் நினைப்பதும் வேண்டாம் என்று சிலர் நினைப்பார்கள்.

ஆனால் மெனோபாஸ் காலகட்டத்தைப் பொறுத்தவரை தாமதமாக ஏற்படுவது என்பது ஒரு சரியான விஷயமாகவே கருதப்படுகிறது. இந்த மெனோபாஸ் காலகட்டம் உண்டாகாமல் தாமதப்படுத்துவதால் உட்புற ஆரோக்கியத்தில் எந்த ஒரு பாதிப்பும் உண்டாவதில்லை. மாறாக மெனோபாஸ் காலகட்டம் அழைத்து வரும் பாதிப்புகளை தள்ளிப் போடவே செய்கிறது.

MOST READ: ஆண்ட்ரோபாஸ் என்றால் என்ன? ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிஞ்சிருக்க வேண்டிய விஷயங்க இது...

மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களின் ஆரோக்கியம், சருமம், கூந்தல், உடல் கட்டுக்கோப்பு, உளவியல் ஆரோக்கியம் போன்றவை பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எது எப்படி இருந்தாலும் ஒரு நாள் பெண்களுக்கு மெனோபாஸ் தோன்றும். ஆனால் அதுவே தாமதமாக தோன்றுவதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ஆகவே அதற்கான வழிகளை இப்போது நாம் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெனோபாஸ் காலகட்டத்தை தாமதப்படுத்த உதவும் உணவுகள்

மெனோபாஸ் காலகட்டத்தை தாமதப்படுத்த உதவும் உணவுகள்

யூகே, லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் மெனோபாஸ் காலகட்டம் ஆகியவற்றில் புகைப்பிடிக்கும் பழக்கம், மதுப்பழக்கம், மரபணு, கீமோதெரபி, கடுமையான மருந்துகள் போன்றவற்றுடன் உணவும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி உணவு மற்றும் மெனோபாஸ் ஆகியவற்றுக்கு நேரடி தொடர்பு உள்ளது அறியப்படுகிறது.

பருப்பு, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், போன்றவற்றுடன் இணைந்த ஒரு ஆரோக்கிய உணவு இயற்கை முறையில் மெனோபாஸ் காலகட்டத்தை தாமதப்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த நிலை உண்டாக எந்த ஒரு மருந்தும் அவசியமில்லை. அதே நேரத்தில் அரிசி மற்றும் பாஸ்தா போன்ற கார்போ சத்து உள்ள உணவுகள் மெனோபாஸ் காலகட்டத்தை விரைவாக உண்டாக்குகிறது. இனி நாம் உட்கொள்ளும் உணவு நமது ஆரோக்கியத்தில் எவ்வித தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

மெனோபாஸ் காலகட்டத்தை தாமதப்படுத்த உதவும் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்

மெனோபாஸ் காலகட்டத்தை தாமதப்படுத்த உதவும் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்

மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு கோளாறுகள் உண்டாகின்றன. கீல்வாதம், அறிவாற்றல் குறைபாடு, மனஅழுத்தம் போன்றவை அவற்றுள் சில. தாவரங்களில் இருந்து கிடைக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் அதாவது பைட்டோ ஈஸ்ட்ரோஜன், உடலின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவுவதாக அமெரிக்காவின் அரிகன் பல்கலைக்கழகம் குறிப்பிடுகிறது. வயது அதிகரிக்கும் போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது. இது மெனோபாஸ் தொடங்க காரணமாக உள்ளது.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ள உணவு பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை உங்கள் தினசரி உணவில் இணைத்துக் கொள்வதால் மெனோபாஸ் காலகட்டத்தை தாமதப்படுத்த நினைப்பவர்கள் வெற்றி பெறலாம்.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ள உணவுகள்:

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ள உணவுகள்:

* முழு தானிய உணவுகள் மற்றும் கோதுமை, கேழ்வரகு போன்றவை.

* சோயா உணவுப்பொருட்களான சோயாபீன்ஸ், சோயா பால் , டோஃபு , சோயா தயிர் போன்றவை.

* ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, அப்ரிகாட், உலர் பேரிச்சை , பீச் போன்ற பழங்கள்.

* கேரட் போன்ற காய்கறிகள்

* பட்டாணி, பயறு போன்ற பருப்பு வகைகள்

* பச்சைப்பயறு போன்ற முளைவிட்ட பருப்புகள்

* கொண்டைக்கடலை

* ஆளி விதைகள் , எள்ளு

* ஆலிவ் எண்ணெய், ஆலிவ்

* பூண்டு

* மஞ்சள்

குறிப்பு

குறிப்பு

காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் மஞ்சள் சேர்த்து பருகலாம். இரவில் உணவு சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் சேர்த்து பருகலாம்.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நன்மைகள்

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நன்மைகள்

பல பெண்களும் இன்றைய நாட்களில் மெனோபாஸ் காலத்தை தாமதப்படுத்த ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் அவற்றுள் சில ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் உள்ளன. அதுவே இயற்கையான முறையில் அதனை தாமதப்படுத்த முயற்சித்தால் அது ஒரு சிறந்த முயற்சியாகும்.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் பிளேவோனாய்டு மற்றும் லீக்னன் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. இவை பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகளை குறைத்து மெனோபாஸ் காலகட்டத்தை தாமதப்படுத்துகின்றன. இந்த கூறுகள் மெனோபாஸ் காலகட்டத்தில் உண்டாகும் உடலின் மற்ற ஆரோக்கிய சிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. குறிப்பாக, கோபம், மன உளைச்சல், மனஅழுத்தம், டிமென்ஷியா , கவனக்குறைபாடு, கீல்வாதம், இதய நோய் போன்ற பாதிப்புகளை எதிர்த்து போராட உதவுகிறது.

கார்போஹைட்ரேட் உணவில் இருந்து விலகி இருங்கள்

கார்போஹைட்ரேட் உணவில் இருந்து விலகி இருங்கள்

மெனோபாஸ் காலகட்டம் தாமதமாக வர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஒரு முக்கிய விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கார்போ உணவுகள் விரைவான மெனோபாஸுடன் தொடர்புடையது என்பதால் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் புகைப்பிடிப்பதால் சினைப்பை சேதம் ஏற்பட்டு மெனோபாஸ் காலகட்டம் விரைவில் தோன்றுகிறது என்பதால் புகைப்பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் விரைவான மெனோபாஸ் காலத்தை தோற்றுவிப்பதால் அவற்றை கைவிடுவதால் மெனோபாஸ் காலக்கட்டம் தாமதமாகலாம்.

முடிவு

முடிவு

மேலே கூறப்பட்ட அனைத்தும் மெனோபாஸ் காலகட்டத்தை கட்டாயம் தாமதப்படுத்தும் என்று கூற முடியாவிட்டாலும் நிச்சயம் அந்த முயற்சியில் ஓரளவிற்கு உதவும். மருத்துவ ரீதியாக மெனோபாஸ் காலகட்டத்தை தாமதப்படுத்த மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். மருத்துவர் ஆலோசனையின்றி எந்த ஒரு மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவதால் மெனோபாஸ் காலகட்டத்தை தாமதப்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is It Possible To Delay Menopause With Your Diet?

Is it possible to delay menopause with your diet? Read on to know more...