For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பையை குறைக்க உதவும் இந்த கார்ப்ஸ் உணவுகள் உள்ளுறுப்புகளில் இருக்கும் கொழுப்பையும் குறைக்குமாம்...!

எல்லா கார்ப்ஸ்களும் மோசமானவை அல்ல, ஆச்சரியப்படும் விதமாக சில கார்ப்ஸ் எடை குறைக்கும் செயல்முறைக்கு உதவுகின்றன.

|

உடல் எடையை குறைக்கும்போது, சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். தினமும் ஒருவேளை சாப்பிடாமல் இருப்பது மற்றும் குறைந்த கார்ப் உணவுகள் உடல் எடையைக் குறைப்பதில் அதிக புகழ் பெற்றவையாக இருக்கிறது.

How Eating The Right Carbs Can Reduce Your Belly Fat

கார்போஹைட்ரேட்ஸ் தங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள கூடுதல் அங்குலங்களை அகற்ற விரும்பும் மக்களிடையே கெட்ட பெயரைப் பெற்றுள்ளது. இருப்பினும், எல்லா கார்ப்ஸ்களும் மோசமானவை அல்ல, ஆச்சரியப்படும் விதமாக சில கார்ப்ஸ் எடை குறைக்கும் செயல்முறைக்கு உதவுகின்றன. இவை அனைத்தும் நீங்கள் சாப்பிட விரும்பும் கார்ப் வகைகளைப் பொறுத்தது. இந்த பதிவில் எடையை குறைக்க உதவும் கார்போஹைட்ரேட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காம்ப்ளக்ஸ் கார்ப்ஸ் மற்றும் எளிய கார்ப்ஸ்: எது சிறந்தது?

காம்ப்ளக்ஸ் கார்ப்ஸ் மற்றும் எளிய கார்ப்ஸ்: எது சிறந்தது?

காம்ப்ளக்ஸ் அல்லது நல்ல கார்ப்ஸ் என்பது அதிக நார்ச்சத்து கொண்டிருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அவை உடலுக்கு ஆற்றலை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஊட்டச்சத்துக்கள் நிரப்பப் பட்டிருப்பதால், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கிறது மற்றும் பல்வேறு வகையான உடல்நல அபாயங்களைத் தவிர்க்கிறது.

மோசமான கார்ப்ஸ்

மோசமான கார்ப்ஸ்

மோசமான கார்ப்ஸ் குறைந்த ஃபைபர் அளவைக் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ஆகும், அவை பெரும்பாலும் செரிமான பிரச்சினைகள் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது, இதன் விளைவாக அதிக கலோரி கொண்ட உணவுகள் மீது ஆசை மற்றும் பசி ஏற்படுகிறது.

MOST READ: பெண்களை பாலியல்ரீதியாக கவர இதை சரியாக பண்ணாலே போதும்... இது அவ்வளவு ஈஸியானதில்ல...!

சரியான கார்ப்ஸ் சாப்பிடுவது எடை குறைக்க உதவும்

சரியான கார்ப்ஸ் சாப்பிடுவது எடை குறைக்க உதவும்

குறைந்த கார்ப் உணவு சாப்பிடுவது சில கிலோ எடையைக் குறைக்க உதவும், ஆனால் இது உங்கள் உடலுக்கு மற்ற செயல்பாடுகளைச் செய்யத் தேவையான ஊட்டச்சத்துக்களை இழக்க வைக்கக்கூடும். எனவே, கார்ப் உட்கொள்ளலைத் துண்டிப்பதற்குப் பதிலாக, நார்ச்சத்து நிறைந்த காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை நாடவும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுங்கள். இது எடையைக் குறைக்க உதவுவதோடு, அதிக கலோரி கொண்ட உணவுகளையும் நீங்கள் விலக்கி வைக்க உதவும்.

நார்ச்சத்து நிறைந்த கார்ப்ஸ் வீக்கத்தைக் குறைக்கும்

நார்ச்சத்து நிறைந்த கார்ப்ஸ் வீக்கத்தைக் குறைக்கும்

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நார்ச்சத்து நிறைந்த கார்ப்ஸை உட்கொண்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள உணவை சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடும்போது வயிற்றுப் பகுதியைச் சுற்றி குறைந்த அளவு வீக்கத்தை அனுபவித்திருப்பது கண்டறியப்பட்டது. எனவே நார்ச்சத்து நிறைந்த கார்ப்ஸை சாப்பிடுவது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு வீக்கத்தை கணிசமாகக் குறைக்கும், இது தட்டையான வயிற்றுக்கு வழிவகுக்கும்.

நல்ல கார்ப்ஸ் உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க உதவுகிறது

நல்ல கார்ப்ஸ் உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க உதவுகிறது

தொப்பை கொழுப்பு முக்கியமாக உள்ளுறுப்பு கொழுப்புகளைக் கொண்டுள்ளது, அவற்றை கரைப்பது கடினம் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. இந்த கொழுப்புகள் உடலில் உள்ள உறுப்புகளைச் சுற்றியுள்ளதால், இது நாள்பட்ட இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இது நல்ல கார்ப்ஸை உட்கொள்வதன் மூலமும், மற்ற உயர் கலோரி உணவுகளை வழக்கமான உடற்பயிற்சிகளுடன் குறைப்பதன் மூலமும், உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பில் கணிசமான குறைவைக் காணலாம்.

MOST READ: சிறந்த கணவராக இருக்கும் ராசிகளின் பட்டியல்... உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?

காம்ப்ளக்ஸ் கார்ப்ஸ் உணவுகள்

காம்ப்ளக்ஸ் கார்ப்ஸ் உணவுகள்

எடையை குறைக்க காம்ப்ளஸ் கார்ப்ஸ் நிறைந்த சரியான உணவுகளை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். அவற்றில் சில முழு தானிய ரொட்டி, முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பருப்புகள், ஓட்ஸ், காய்கறிகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெள்ளரிக்காய், அஸ்பாரகஸ், பச்சைப்பட்டாணி, ப்ரோக்கோலி, முள்ளங்கி போன்றவற்றில் காம்ப்ளக்ஸ் கார்ப்ஸ் போதுமான அளவில் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Eating The Right Carbs Can Reduce Your Belly Fat

Read to know how eating the right carbs can reduce your belly fat.
Story first published: Monday, March 22, 2021, 11:47 [IST]
Desktop Bottom Promotion