For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் வேகமாக எடையை குறைக்க இதில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட்டால் போதுமாம் தெரியுமா?

ஜர்னல் நியூட்ரியண்ட்ஸில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சில குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது பெண்களை மற்றவர்களை விட வேகமாக கிலோ எடைய உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

|

உடல் எடையை குறைக்க ஒருவர் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் நமக்கு கிடைக்கும் எண்ணற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆரோக்கியமானவற்றை எப்படி கண்டறிவது என்பதுதான் நமக்குள் இருக்கும் மிகப்பெரிய கேள்வியாகும்.

Foods That Can Help Women Lose More Weight

ஜர்னல் நியூட்ரியண்ட்ஸில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சில குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது பெண்களை மற்றவர்களை விட வேகமாக கிலோ எடைய உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உணவில் சில குறிப்பிட்ட உணவைச் சேர்ப்பது நீண்ட கால எடை இழப்பிற்கு வழிவகுக்கும். பெண்கள் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், கச்சிதமாக இருக்கவும் தொடர்ந்து சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலிஃபிளவர்

காலிஃபிளவர்

காலிஃபிளவரில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் அரிசி மற்றும் மாவு போன்ற அதிக கலோரி உணவுகளுக்கு மாற்றாக இது இருக்கலாம். ஒரு கப் காலிஃபிளவர் வெறும் 25 கலோரிகளைக் கொண்டுள்ளது, எனவே நீங்கள் எடை அதிகரிக்காமல் நிறைய சாப்பிடலாம். 46 முதல் 51 வயது வரை இருக்கும் பெண்களுக்கு இது சிறந்த காய்கறியாகும், 33 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மூன்றாவது சிறந்த காய்கறியாகும்.

பீன்ஸ்

பீன்ஸ்

ஒரு கப் பீன்ஸ் 31 கலோரிகளைக் கொண்டுள்ளது, மேலும் இதில் கொழுப்பு இல்லை மற்றும் 3.6 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. இது வைட்டமின் சி, கே, ஏ, கரோட்டினாய்டுகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபைபர் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. 46-51 வயதுடைய பெண்களுக்கு எடையை குறைப்பதற்கான மூன்றாவது சிறந்த உணவு இதுவாகும்.

குடை மிளகாய்

குடை மிளகாய்

உங்கள் சாலட் அல்லது சாண்ட்விச் அல்லது நீங்கள் சாப்பிடும் எந்த உணவுகளில் வேண்டுமென்றாலும் இதனை சேர்த்துக் கொள்ளலாம். குடை மிளகாய் எடையை குறைக்க உதவும் சிறந்த உணவாகும். இந்த வண்ணமயமான காய்கறியில் கலோரி குறைவாக உள்ளது மற்றும் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் உள்ளது. இது வைட்டமின் சி-யால் நிரப்பப்பட்டுள்ளது, இது தொப்பை கொழுப்பைக் குறைக்கவும் உங்கள் மனநிலையை உயர்த்தவும் உதவுகிறது.

MOST READ: ஆண்கள் எப்போதும் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை விரும்புவதற்கான காரணம் என்ன தெரியுமா?

கேரட்

கேரட்

கேரட் எடை இழப்பிற்கு உதவும் மற்றொரு சிறந்த உணவாகும். இந்த குறைந்த கலோரி உணவை பெண்கள் கட்டாயம் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள இந்த காய்கறியை உணவில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். நீங்கள் கேரட் ஜூஸ், சாலட் அல்லது பொரியல் என எந்த வகையில் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். இந்த காய்கறி பித்த சுரப்புக்கு உதவுகிறது, இதனால் கொழுப்பு எரிகிறது, இதனால் எடை குறைகிறது.

பச்சை கீரைகள்

பச்சை கீரைகள்

எடை குறைப்பு என்று வரும்போது கீரைகளை நிச்சயம் தவிர்க்க முடியாது. அவை ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்ததாகவும் உள்ளன. பச்சை காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து திருப்தி உணர்வை ஊக்குவிக்கவும் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேடுவதை தடுக்கவும் உதவுகிறது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

33 முதல் 40 வயது வரையிலான பெண்களுக்கு, ப்ரோக்கோலி என்பது தொடர்ச்சியான எடை இழப்புக்கு மிக முக்கியமான காய்கறியாகும். இந்த பச்சை காய்கறி நார்ச்சத்து நிறைந்ததாகவும் கார்போஹைட்ரேட்ஸின் சிறந்த மூலமாக உள்ளது. இந்த காய்கறியை தினமும் சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் அதிகப்படியான உணவைத் தடுக்க உதவும்.

ஆப்பிள் மற்றும் பேரிக்காய்

ஆப்பிள் மற்றும் பேரிக்காய்

எடை இழப்புக்கான முதல் ஐந்து சிறந்த பழங்களில் ஆப்பிள் மற்றும் பேரிக்காய் இரண்டும் உள்ளன. இரண்டுமே நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும், அவற்றின் கலோரி உள்ளடக்கம் மிகக் குறைவு, இது இந்த எடை குறைப்பிற்கு சிறந்த பழங்களாக மாற்றுகிறது.

MOST READ: உலகில் மனிதர்கள் நுழைய தடைசெய்யப்பட்ட இடங்கள்...இந்த இடங்களுக்கு போனா உயிரோட திரும்ப வரது கஷ்டம்தான்

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ஸ்ட்ராபெர்ரி மற்றொரு சிறந்த எடை இழப்பு பழமாகும். 1 கப் நறுக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரிகளை உட்கொள்வதன் மூலம், வைட்டமின் சி தினசரி அளவில் 163 சதவீதத்தை நீங்கள் பெறலாம். இதுதவிர இதில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைவாகவும் மற்றும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Can Help Women Lose More Weight

Check out the list of foods that can help women lose more weight
Desktop Bottom Promotion