For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளை ஒன்னா சாப்பிடுவதால் தான் தொப்பை பானை மாதிரி வருது தெரியுமா?

எந்த உணவுகளை ஒன்றாக உட்கொண்டால், அவை எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்பதை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அந்த தவறை நீங்களும் செய்து வந்தால், உடனே அதை நிறுத்துங்கள்.

|

நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தும், உங்களின் உடல் எடை குறையவில்லையா? என்ன தான் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலும், உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? உடனே மனதை தளரவிடாமல், அதற்கான காரணத்தைக் கண்டறிய முயலுங்கள். ஒருவர் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தும், உடல் எடை குறையாமல் இருந்தால், அதற்கு உணவுகளை தவறான உணவுகளுடன் இணைத்து சாப்பிடுவதும் ஓர் காரணம். என்ன தான் இரண்டும் ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும், ஒன்றையொன்று பூர்த்தி செய்யவில்லை என்றால், அவை செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுத்த, தொப்பை மற்றும் ஒட்டுமொத்த எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். ஆனால் இதுக் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை.

Food Combinations That May Be Making You Gain Weight In Tamil

எனவே தமிழ் போல்ட் ஸ்கை எந்த உணவுகளை ஒன்றாக உட்கொண்டால், அவை எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்பதை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அந்த தவறை நீங்களும் செய்து வந்தால், உடனே அதை நிறுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்நாக்ஸ்களுடன் டீ

ஸ்நாக்ஸ்களுடன் டீ

நம் அனைவரது தினசரி வழக்கங்களில் டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதும் ஒன்றாக இருக்கும். ஆனால் இது நமது எடை இழப்பு முயற்சிக்கு தடையாக இருக்குமா என்று நீங்கள் யோசித்ததுண்டா? நிச்சயம் இருக்கும். டீயில் டானின்கள் மற்றும் காஃப்பைன் இரண்டும் உள்ளது. இவற்றை உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, இரும்புச்சத்தை உறிஞ்சுவதில் தடையை ஏற்படுத்தி, வயிற்று உப்புசம் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

பானங்களுடன் பழம்

பானங்களுடன் பழம்

பெரும்பாலான மக்கள் காலை உணவிற்கு பின் பசிக்கும் போது பழங்களை சாப்பிடுவார்கள். மேலும் பழங்களை சாப்பிட சிறந்த நேரமும் இது தான் என்று உடல்நல நிபுணர்களும் கூறுகிறார்கள். ஆனால் இதே வேளையில் தான் பலரும் காபி, டீ-யை குடிக்கிறார்கள். பழங்களை காபி, டீ அல்லது இளநீருடன் உட்கொண்டால், அது செரிமான மண்டலத்தை குழப்பிவிடும். எனவே இவை இரண்டையும் அடுத்தடுத்து உடனே சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

சப்பாத்தி மற்றும் சாதம்

சப்பாத்தி மற்றும் சாதம்

சப்பாத்தி மற்றும் சாதம் ஆகிய இரண்டுமே இந்தியாவின் பிரதான உணவுகளாகும். ஆனால் சப்பாத்தி மற்றும் சாதத்தை ஒரே வேளையில் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் இவை இரண்டுமே அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்டது. எனவே இவை இரண்டையும் ஒரே வேளையில் ஒன்றாக சாப்பிடக்கூடாது.

ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட புரோட்டீன் உணவுகள்

ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட புரோட்டீன் உணவுகள்

அளவுக்கு அதிகமான புரோட்டீனை ஜீரணிப்பது கடினமாக இருக்கும். எனவே புரோட்டீன் அதிகம் கொண்ட இரண்டு உணவுகளை ஒன்றாக சாப்பிட்டால், அது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். ஆகவே தால் மற்றும் தயிர், பன்னீர் மற்றும் தால், சோயாபீன் மற்றம் தால், சிக்கன் மற்றும் தால் போன்ற புரோட்டீன் உணவுச் சேர்க்கைகளைத் தவிர்த்திடுங்கள்.

உணவுக்கு பின் இனிப்பு

உணவுக்கு பின் இனிப்பு

ஏற்கனவே வயிறு நிறைய உணவு உண்டு நிறைந்திருக்கும். இந்நிலையில் இனிப்புக்களையும் சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். எனவே வயிறு நிறைய உணவு உண்ட பின் உடனே இனிப்புக்களை சாப்பிடாமல், சிறிது நேரம் இடைவெளி கொடுங்கள்.

பால் மற்றும் உப்பு

பால் மற்றும் உப்பு

பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால் என்ன நடக்கும்? அது திரிந்துவிடும் அல்லவா. அப்படியானால் பால் சார்ந்த பானங்களை உட்கொண்டதும், உப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடலில் என்ன நடக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். எனவே இந்த உணவுச் சேர்க்கைகளையும் தவிர்த்திடுங்கள்.

தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு

தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு

இந்த உணவுச் சேர்க்கை நிச்சயம் அதிர்ச்சியைத் தரும். நாம் பெரும்பாலும் உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்கு தக்காளியையும் பயன்படுத்துவோம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, தக்காளியை மாவுச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டால், அது தொப்பையை அதிகரிக்கும். எனவே நீங்கள் தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க போராடி வந்தால், இதைத் தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Food Combinations That May Be Making You Gain Weight In Tamil

Here we listed some food combinations that may be making you gain weight. Read on to know more...
Story first published: Thursday, July 28, 2022, 11:29 [IST]
Desktop Bottom Promotion