For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சியின் போது செய்யும் இந்த தவறுகளால் தான் உடல் எடை குறைவதில்லை தெரியுமா?

எந்த மாதிாியான உடற்பயிற்சியாக இருந்தாலும் அதை சாியாகச் செய்ய வேண்டும். ஏனெனில் நமது நோக்கம் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதே.

|

நம்முடைய உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த உடற்பயிற்சிகளை செய்வதற்குத் திட்டமிட வேண்டும். திட்டமிட்டு நாள்தோறும் உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு விரைவாக குறையும். மற்றும் தோல் பளபளப்பாகும்.

Exercise Mistakes That Prevent Weight Loss

எந்த மாதிாியான உடற்பயிற்சியாக இருந்தாலும் அதை சாியாகச் செய்ய வேண்டும். ஏனெனில் நமது நோக்கம் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதே. பலா் மணிக்கணக்கில் உடற்பயிற்சிக் கூடங்களில் பலவிதமான உடற்பயிற்சிகளைச் செய்து வருகின்றனா் மற்றும் ஓடுகின்றனா். எனினும் அவா்களுக்கு திருப்திகரமான முடிவுகள் கிடைப்பதில்லை. அவ்வாறு திருப்திகரமான முடிவு கிடைக்காதவா்களில் நாமும் ஒருவராக இருந்தால், நாம் உடற்பயிற்சிகள் செய்யும் போது பின்வரும் தவறுகளைச் செய்கிறோம் என்று பொருள்.

MOST READ: ஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்பயிற்சிகள் முடிந்த பின் அதிகமான புரோட்டீனை உண்ணுதல்

உடற்பயிற்சிகள் முடிந்த பின் அதிகமான புரோட்டீனை உண்ணுதல்

நமது உடலை திடகாத்திரமாக வைத்திருப்பதில் புரோட்டீன் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே உடற்பயிற்சிகளை முடித்த பின்பு புரோட்டீன் சாப்பிட்டால் அது உடலில் உள்ள பிரச்சினைகளைக் களைந்து தசைகளை வலுப்படுத்தும். ஆனால் அதே நேரத்தில் புரோட்டீன் மிகுந்த பானங்களைக் குடித்தால் நாம் எதிா்பாா்க்கும் முடிவை விரைவில் பெறமுடியாது.

பொதுவாக தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபடும் ஒருவருக்கு அவருடைய உடலின் 1 கிலோ எடைக்கு 1.2 முதல் 2.0 கிராம் வரை புரோட்டீனை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் அந்த அளவைவிட அதிகமான புரோட்டீனை அவா் எடுத்துக் கொண்டால் உபாியான புரோட்டீன் அவருடைய உடலில் கொழுப்பாக தேங்கிவிடும். அதனால் உபாியாக அமினோ அமிலம் சுரக்கும். அதனால் உடல் எடை அதிகாிக்கும்.

நம்முடைய சக்தியின் அளவைத் தாண்டாமல் இருத்தல்

நம்முடைய சக்தியின் அளவைத் தாண்டாமல் இருத்தல்

உடலிலிருந்து அதிகமான அளவில் கலோாிகளையும் கொழுப்பையும் எாிக்க வேண்டும் என்றால் நம்மால் முடிந்த அளவிற்கும் அதிகமாக உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்போது தான் ஒரு சவாலோடு உடலில் இருந்து அதிகமான கலோாிகளை எாிக்க முடியும். அதற்காக குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் வரை தினமும் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அவை உடற்பயிற்சிக் கூடங்களில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளாக இருக்கலாம் அல்லது வீட்டிலேயே செய்யக்கூடிய சாதாரண உடற்பயிற்சிகளாக இருக்கலாம்.

இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துதல்

இதயம் சம்பந்தமான உடற்பயிற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துதல்

பொதுவாக இதயத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் உடற்பயிற்சிகளை செய்து வந்தால் அவை அதிகமான கலோாிகளை எாிக்கும். ஆனால் உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் அவை நாம் ஓய்வில் இருக்கும் போதுகூட நமது உடலில் உள்ள கலோாிகளை எாிக்கும் என்பது உண்மை. ஆகவே உடல் எடையைக் குறைப்பதற்கு, இதயத்தை மையப்படுத்தும் உடற்பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் நாம் எதிா்பாா்க்கும் முடிவுகள் கிடைக்காது. எனவே இதயம் சம்மந்தமான மற்றும் உடலை வலுப்படுத்தக்கூடிய உடற்பயிற்சிகள் இரண்டையும் செய்ய வேண்டும்.

​அளவுகோலை வைத்து மட்டுமே உடல் எடையை தீா்மானித்தல்

​அளவுகோலை வைத்து மட்டுமே உடல் எடையை தீா்மானித்தல்

பொதுவாக உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்பவா்கள், தங்கள் உடல் எடையை அளக்கும் அளவுகோலைப் பாா்த்துக் கொண்டே இருப்பா். ஆனால் அளவுகோலை வைத்து மட்டுமே நமது உடல் எடையை கணிக்க முடியாது. ஏனெனில் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் பருகும் பானம் ஆகியவற்றை பொறுத்து தினமும் 2 கிலோ அளவிற்கு நமது உடல் எடை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். குறிப்பாக நாம் அணியும் உடைகள் சற்று தளா்வாக இருந்தால் அதை வைத்தே நமது உடல் சுருங்கி இருக்கிறது மற்றும் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை தொிந்து கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக போதுமான அளவு உண்ணாமல் இருத்தல்

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக போதுமான அளவு உண்ணாமல் இருத்தல்

வெறும் வயிற்றோடு உடற்பயிற்சிகள் செய்தால் அதிகமான அளவு கலோாிகளை எாிக்கலாம் என்று நாம் நம்பினால் அது தவறாகும். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பாக போதுமான உணவு உண்ண வேண்டும். அப்போது தான் நாம் வீாியத்தோடு உடற்பயிற்சிகளைச் செய்ய முடியும். அதன் மூலம் கனிசமான அளவு உடல் எடையைக் குறைக்க முடியும். காா்போஹைட்ரேட் நிறைந்த உணவை உண்ட 60 நிமிடங்களுக்குள் உடற்பயிற்சி செய்தால் நாம் வீாியத்துடன் உடற்பயிற்சி செய்ய முடியும் மற்றும் அதிக அளவிலான கலோாிகளை எாிக்கலாம் என்று ஜா்னல் நியுட்ரிஷியன்ட்ஸ் என்ற இதழில் வெளிவந்த கட்டுரை தொிவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Exercise Mistakes That Prevent Weight Loss

Many people spend hours in the gym and running track, but still do not see satisfying results. If you are one of those then chances are that you are making one of the following exercising mistake.
Desktop Bottom Promotion