Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
ஒரே மாதத்தில் பலூன் போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இத காலையில குடிங்க...
தொப்பையைக் குறைக்க ஒருசில பானங்களும் உதவும். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 பானங்கள் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க பெரிதும் உதவி புரியும். இப்போது அந்த பானங்களை எப்படி தயாரிப்பது என்பதை விரிவாக காண்போம்.
இன்று பெரும்பாலானோரின் முக்கிய கவலையாக இருப்பது தொப்பை அல்லது உடல் பருமன். இந்த தொப்பை ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக தொப்பையானது வயது அதிகரிக்கும் போது ஏற்படத் தொடங்கும். இதற்கு காரணம் உடலின் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதாகும். தொப்பை உள்ளவர்கள் உடனே தொப்பையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உயிரைப் பறிக்கும் பல கொடிய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

தொப்பை வருவதற்கு போதுமான உடலுழைப்பு இல்லாததும் ஓர் முக்கிய காரணமாகும். தொப்பை வரக்கூடாது என்று நினைத்தால், தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படுகிறது. இதன் விளைவாக தொப்பை வருவதை தடுக்கமுடியும். இது தவிர தொப்பையைக் குறைக்க ஒருசில பானங்களும் உதவும். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 பானங்கள் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க பெரிதும் உதவி புரியும். இப்போது அந்த பானங்களை எப்படி தயாரிப்பது என்பதை விரிவாக காண்போம்.

1. எலுமிச்சை இஞ்சி பானம்
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 லிட்டர்
* எலுமிச்சை - 2
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தேன் - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

பானம் தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் 2 எலுமிச்சைகளை எடுத்து, அதன் சாற்றினை பிழிந்து தனியாக வைத்து விட்டு, அவற்றின் தோலை நறுக்கி, கொதிக்கும் நீரில் போட வேண்டும்.
* பின்பு அதில் துருவிய இஞ்சி, மிளகுத் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, குளிர்ந்ததும் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஒரு பெரிய டம்ளரில் ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும், காபி, டீ-க்கு பதிலாக குடிக்க வேண்டும்.

2. சீரக-பட்டை பானம்
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 லிட்டர்
* சீரகம் - 3 டீஸ்பூன்
* பட்டை - 3 இன்ச்
* தேன் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் 3 டீஸ்பூன் சீரகம் மற்றும் 3 இன்ச் பட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வேண்டும்.
* பின்பு அதை வடிகட்டி, ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், தொப்பை சீக்கிரம் குறையும்.

3. சியா எலுமிச்சை பானம்
தேவையான பொருட்கள்:
* சியா விதைகள் - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* தேன் - 1
* எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை:
* முதலில் 2 டீஸ்பூன் சியா விதைகளை 1 கப் நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஊற வைத்த சியா விதைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இப்போது சுவையான சியா எலுமிச்சை பானம் தயார். இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், தொப்பை குறையும்.

குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 பானங்களுமே தொப்பையை குறைக் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் பானங்களில் உள்ள பொருட்கள் அனைத்தும் கொழுப்புக்களை கரைக்கும் பண்புகளைக் கொண்டவை. அதோடு இந்த பானங்கள் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை திறம்பட வெளியேற்றும். இது தவிர, காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த பானங்களைக் குடிக்கும் போது, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
