For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்!

பொதுவாக 40 வயதாகிவிட்டால், ஒருசில உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் செய்யும் சில உடற்பயிற்சிகள் எந்த சிரமத்தையும் கொடுக்காதவாறு இருக்கலாம். ஆனால் நீண்ட காலமாக ஒரே பயிற்சிகளை செய்தால்

|

இன்று இளம் தலைமுறையினர் முதல் வயதானவர்கள் வரை ஃபிட்டாக இருப்பதற்கு அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பலர் ஜிம் சென்று அங்குள்ள உடற்பயிற்சி கருவிகளைக் கொண்டு உடற்பயிற்சிகளை செய்வார்கள். நீங்களும் அப்படி ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்பவரா? உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா? அப்படியானால், இக்கட்டுரை உங்களுக்கானது.

Are You 40 and Go To The Gym? These 5 Exercises Are Dangerous For You

பொதுவாக 40 வயதாகிவிட்டால், ஒருசில உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் செய்யும் சில உடற்பயிற்சிகள் எந்த சிரமத்தையும் கொடுக்காதவாறு இருக்கலாம். ஆனால் நீண்ட காலமாக ஒரே பயிற்சிகளை செய்தால், அது ஆரோக்கியத்திற்கு பேரழிவு தரும். வயதாகும் போது மனித உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்போது வாழ்க்கை முறையிலும், அன்றாட பழக்கவழக்கங்களிலும் அவசியம் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

MOST READ: உடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா?

உடற்பயிற்சி ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் ஒருசில உடற்பயிற்சிகளை குறிப்பிட்ட வயதிற்கு மேல் செய்தால், அது கடுமையான காயங்களை உண்டாக்கிவிடும். எனவே ஒவ்வொருவரும் தங்களின் வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள் என்னவென்று தெரிந்து செய்ய வேண்டும். இப்போது 40 வயதிற்கு மேல் கட்டாயம் செய்யக்கூடாத சில உடற்பயிற்சிகளைக் கண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரஞ்சஸ்

க்ரஞ்சஸ்

க்ரஞ்சஸ் மற்றும் மற்ற ஆப் உடற்பயிற்சிகள், உடலுக்கு நல்ல வடிவமைப்பைத் தருவதோடு, தேவையற்ற கொழுப்புக்களைக் குறைக்கும். ஆனால் குறிப்பிட்ட வயதிற்கு மேல் இப்பயிற்சியை செய்வது என்பது பாதுகாப்பானது அல்ல. நடுத்தர வயதில் நுழைபவர்கள், ஆப் வகை உடற்பயிற்சிகளை செய்தால், அது முதுகெலும்புப் பிரச்சனைகளைத் தூண்டும். பெரும்பாலானோர் க்ரஞ்சஸ் செய்த பின் முதுகெலும்பு முறிவால் அவஸ்தைப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, இது கழுத்திற்கும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். வேண்டுமானால், இந்த உடற்பயிற்சிக்கு பதிலாக ப்ளான்க்ஸ் செய்யலாம்.

MOST READ: உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

தீவிரமான கார்டியோ

தீவிரமான கார்டியோ

கார்டியோ ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் தீவிரமான கார்டியோ பயிற்சிகள் நல்லதல்ல. அதுவுமம் 40 வயதிற்கு மேல், தசைகள் பலவீனமாக இருக்கும் மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்தால், அது மிகுந்த சிரமத்தைத் தரும். உதாரணமாக, கார்டியோவில் முழங்கால்கள் மற்றும் ஜம்பிங் ஜாக்குகளை 40 வயதிற்கு மேல் செய்தால் தசைநார்களில் கிழிசலை ஏற்படுத்தும். ஆகவே 40 வயதிற்கு மேல் குறைவான கார்டியோ பயிற்சிகளை அல்லது குறைந்த அளவு தீவிரமான கார்டியோ பயிற்சிகளை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

MOST READ: இந்த டயட்டை ஃபாலோ பண்ணுனா, 2 வாரத்திலேயே தொப்பையைக் குறைச்சிடலாம்!

லெக் எக்ஸ்டென்சன்

லெக் எக்ஸ்டென்சன்

வயது அதிகரிக்கும் போது, லெக் எக்ஸ்டென்சன் முழங்காலில் தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கனமான பளுவைத் தூக்கும் போது, கணுக்கால் மற்றும் முழங்கால்கள் காயமடையக்கூடும். லெக் எக்ஸ்டென்சன் செய்யும் நடுத்தர வயது ஆண்கள் பலர் முழங்கால் மற்றும் கணுக்கால் வலி பற்றி புகார் கூறுகிறார்கள். எனவே எவ்வித ஆபத்தும் இல்லாமல் நன்மைகளைப் பெற நினைத்தால், டம்பெல் லன்ஜ்களை முயற்சி செய்யுங்கள்.

MOST READ: பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

ஸ்குவாட்ஸ்

ஸ்குவாட்ஸ்

40 வயதிற்கு மேல் செய்யக்கூடாத உடற்பயிற்சிகளின் பட்டியலில் ஸ்குவாட்ஸ் இருப்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம். ஏனெனில் ஜிம்மில் செய்யக்கூடிய பொதுவான உடற்பயிற்சிகளுள் ஒன்று தான் ஸ்குவாட்ஸ். இப்பயிற்சி மிகவும் எளிதானது மட்டுமின்றி, மிகுந்த நன்மையளிக்கக்கூடியதும் கூட. ஆனால் 40 வயதிற்கு மேல் ஸ்குவாட்ஸ் பயிற்சிகளை செய்தால், அது தசைகளில் சிரமத்தை ஏற்படுத்தி, காயங்களையும், கிழிசலையும் ஏற்படுத்தும்.

MOST READ: ஆண் செக்ஸ் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

டெட்லிப்ட்ஸ்

டெட்லிப்ட்ஸ்

ஜிம்மில் செய்யக்கூடிய தீவிரமான சில உடற்பயிற்சிகளுள் ஒன்று தான் டெட்லிப்ட். இந்த பயிற்சியை ஃபிட்னஸ் பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்ய வேண்டியது அவசியம். இந்த பயிற்சியை செய்வது சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் வயது அதிகரிக்க ஆரம்பித்தால், இப்பயிற்சிக்கு குட்-பை சொல்ல வேண்டும்.

இதனால் முதுகு மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. பாதங்களிலும் காயங்கள் ஏற்படும். இன்னும் தீவிரமாக இந்த பயிற்சியை செய்தால், அது முதுகெலும்பில் காயங்களை தீவிரமாக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are You 40 and Go To The Gym? These 5 Exercises Are Dangerous For You

If you are 40 and above and love exercising, this article is a must-read. Go through the list of exercises that you shouldn’t be doing.
Desktop Bottom Promotion