For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதும் வேண்டாம்... இந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க... எடை சும்மா விறுவிறுனு குறையும்

எடையை குறைத்து சிக்கென்ற தோற்றம் பெறுவதற்கு குடிக்க வேண்டிய பானங்கள் பற்றி இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம். அது பற்றிய விவரமான தொகுப்பு தான் இந்த கட்டுரை.

|

போதுமான நீர் அருந்தும் பழக்கம் அநேகருக்கு இருப்பதில்லை. உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் பருகுவது அவசியம். பழங்கள் ஊற வைக்கப்பட்ட நீரை (பழநீர்) அருந்துவதால், உடலுக்கு தண்ணீர் மட்டுமன்றி பழங்களிலுள்ள ஊட்டச் சத்துகளும் கிடைக்கின்றன.

Fruit Infused

உடலுக்கு தண்ணீர் மட்டுமன்றி பழங்களிலுள்ள ஊட்டச் சத்துகளும் கிடைக்கின்றன. நச்சுகளை அகற்றும் நன்னீர்' என்று இதை கூறலாம். நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்களை அகற்றக்கூடிய பல்வேறு சத்துகளை பழநீர் கொண்டிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழநீர் என்றால் என்ன?

பழநீர் என்றால் என்ன?

'பழத்தின் உண்மையான சுவை கொண்டது' போன்ற கவர்ச்சி வாசகங்களோடு விளம்பரப்படுத்தப்படும் செயற்கை குளிர்பானம் என்று இதை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. இது முற்றிலும் வேறானது.

பழங்களை குளிர்ந்த தண்ணீருக்குள் போட்டு, பிழிவதால் பழம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் பயன் முழுமையாக உடலுக்குக் கிடைக்கிறது. இது அருந்துவதற்கு சுவையாக இருப்பதோடு உடலுக்கும் சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. பழம் மட்டும் இங்கு முக்கியமல்ல; மூலிகைகள் மற்றும் காய்கறிகளையும் பயன்படுத்தி 'ஊற வைத்த தண்ணீர்' தயாரித்து அருந்தி பயன்பெறலாம்.

MOST READ: உங்க ஃபேவரட் ஹீரோயினோட வெயிட் குறைக்கிற சீக்ரட் தெரிஞ்சிக்கணுமா? இத படிங்க...

பழநீர் தரும் நன்மைகள்

பழநீர் தரும் நன்மைகள்

'நச்சுகளை அகற்றும் நன்னீர்' என்று இதை கூறலாம். நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்களை அகற்றக்கூடிய பல்வேறு சத்துகளை பழநீர் கொண்டிருக்கும்.

நீங்கள் விரும்புமளவுக்கு உடல் எடை குறைந்த பின்னரும்கூட பழநீரைப் பருகி வரலாம். எடையை கூட்டக்கூடிய கலோரி என்னும் ஆற்றல் இந்நீரில் கிடையாது. ஆனால், உடல் எடையை கண்காணித்து வரவேண்டும்.

இதை அருந்திய பின்னர் வயிறு நீண்ட நேரத்திற்கு திருப்தியாக இருக்கும். ஆகவே, நொறுக்குத் தீனிகளை மனம் நாடாது.

நீரிழிவு பிரச்சினை

நீரிழிவு பிரச்சினை

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய், ஜலதோஷம் மற்றும் ஃபுளூ, இதய நோய்கள் மற்றும் மூட்டு வலி ஆகியவை வராது.

பழம் ஊற வைத்த பழநீரை அருந்துவதால் கொலோஜன் என்னும் புரதச்சத்து உடலில் அதிகம் உற்பத்தியாகும். இந்த நீரில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்டுகள் அடங்கியிருப்பதால் முதுமை அண்டாது; இளமையான தோற்றம் நிலைத்திருக்கும்.

MOST READ: குருபகவானின் அத்தனை ஆசிகளையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?

ஜீரண சக்தி

ஜீரண சக்தி

உடலின் வளர்சிதை மாற்றம் தூண்டப்படும்; செரிமானம் அதிகரிக்கும்

நாவின் சுவை அரும்புகளை இந்த சுவையான பழநீர் திருப்தியாக்கும்

உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்கும்; நீர்ச்சத்து இழப்பு என்ற பாதிப்பு நேராது. உடலிலுள்ள அதிகப்படியான நச்சுப்பொருள்கள் அகற்றப்படும்

தேவையான ஆக்ஸிஜன் என்னும் உயிர்வாயு மற்றும் ஊட்டச்சத்துகள் உடலின் பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்

பழநீர் தயாரிப்பது எப்படி?

பழநீர் தயாரிப்பது எப்படி?

உங்களுக்கு விருப்பமான பழங்களை எடுத்து நறுக்கிக் கொள்ளுங்கள். அவற்றை ஜாடியின் அடியில் போட்டு, கொஞ்சம் சாறு வெளியேறும்படி இலேசாக நசுக்கவும்.

ஜாடியின் கழுத்துப் பாகம் வரைக்கும் பனிக்கட்டிகளை (ஐஸ்) போட்டு நிரப்பவும். பிறகு மேல் பாகம் வரைக்கும் நிரம்பும்படி நீர் ஊற்றவும். ஜாடியை மூடி வைக்கவும்

குடிப்பதற்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் முன்னதாக மூடியை எடுத்து விடவும். இப்போது பழம் ஊற வைத்த 'பழநீர்' தயார். அருந்தி மகிழலாம்.

MOST READ: உடற்பயிற்சியே வேண்டாம்... இங்க போனா உடனே சிக்ஸ்பேக் வைத்து தருவாங்களாம்...

எந்தெந்த பழங்களை சேர்க்கலாம்?

எந்தெந்த பழங்களை சேர்க்கலாம்?

எலுமிச்சை, இஞ்சி மற்றும் ஆரஞ்சு

திராட்சை மற்றும் வெள்ளரிக்காய்

இலவங்கப்பட்டை மற்றும் ஆப்பிள்

வெள்ளரிக்காய், நார்த்தங்காய் மற்றும் ஸ்ட்ராபெர்ரி

அன்னாசி மற்றும் கொத்துமல்லி

வெள்ளரிக்காய் மற்றும் கிவி பழம்

கொத்துமல்லி மற்றும் தர்பூசணி

புளூபெர்ரி மற்றும் ஆரஞ்சு

கொத்துமல்லி மற்றும் எலுமிச்சை

துளசி, எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி

ராஸ்பெர்ரி, ரோஸ்மேரி மற்றும் எலுமிச்சை

கொடுக்கப்பட்டிருக்கும் வகைப்பாட்டின்படி பழங்கள் மற்றும் மூலிகைகளை பயன்படுத்தி பழநீர் தயாரித்து அருந்தி பயன்பெறுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Ingredient Of Weight Loss Diet Fruit Infused

We all have tried a hundred recipes for a great weight loss diet by now, but nothing results in a quick weight loss. What if we tell you that there is a secret ingredient for weight loss that you must include in your everyday diet?
Story first published: Friday, May 10, 2019, 12:17 [IST]
Desktop Bottom Promotion