For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சி தவறுகள் உங்களுக்கு சீக்கிரமே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் தெரியுமா

பெரும்பாலான இளைஞர்கள் ஜிம்மிற்கு செல்ல காரணம் எதிர்பாலினத்தினரை கவர்வதற்காகத்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜிம்மில் அவர்கள் செய்யும் சில தவறுகள் அவர்களுக்கு எதிர்வினையாக மாறிவிடுகிறது.

|

உடற்பயிற்சி என்பது நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் நமது உடலில் இருக்கும் தசைகள் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ நம் வாழ்க்கை அவ்வளவு உறுதியாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவருமே ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

Exercise Mistakes That Make You Look Older

பெரும்பாலான இளைஞர்கள் ஜிம்மிற்கு செல்ல காரணம் எதிர்பாலினத்தினரை கவர்வதற்காகத்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜிம்மில் அவர்கள் செய்யும் சில தவறுகள் அவர்களுக்கு எதிர்வினையாக மாறிவிடுகிறது. உண்மைதான் ஜிம்மில் செய்யும் சில தவறுகள் அவர்களுக்கு வயதான தோற்றத்தை வழங்கக்கூடும். இந்த பதிவில் ஜிம்மில் செய்யும் தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமாக உடற்பயிற்சி செய்வது

அதிகமாக உடற்பயிற்சி செய்வது

நீடித்த ஆழமான உடற்பயிற்சி உடலுக்கு நல்லதுதான் ஆனால் அதற்கேற்ற ஓய்வும் மிகவும் அவசியம். குறிப்பாக தசைகள் வளர்ச்சியடையும் நேரத்தில் ஓய்வு எடுக்கவேண்டும். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு சரியாக தூங்காமல் இருக்கும்போது அது இரத்தத்தில் கார்டிசோலின் அளவை அதிகரிக்கும். இது இன்சுலினின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இந்த சர்க்கரை நாளடைவில் கோலஜனுடன் சேர்ந்து சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை பாதிக்கும், மேலும் சுருக்கத்தையும் ஏற்படுத்தும். இதனை தடுக்க வாரத்தில் ஒருநாளாவது உடற்பயிற்சிக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

 தவறான நிலையில் செய்வது

தவறான நிலையில் செய்வது

உடற்பயிற்சி செய்யும்போதும் சரி, நடைப்பயிற்சி செய்யும்போதும் சரி, ஏன் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும்போதும் சரி சரியான நிலையில் அமர வேண்டியது அவசியமாகும். தவறான நிலையில் அமர்வது உங்களின் முதுகெலும்பின் அமைப்பை மாற்றும். இது முதுகில் கூன் விழுந்தது போன்ற தோற்றத்தை உண்டாக்கும். உங்கள் பயிற்சியாளரிடம் சரியான முறையை கற்றுக்கொண்ட பிறகு எந்த பயிற்சியாக இருந்தாலும் செய்யவும்.

சக்திவாய்ந்த பயிற்சிகளை தவிர்ப்பது

சக்திவாய்ந்த பயிற்சிகளை தவிர்ப்பது

உங்களுக்கு எவ்வளவு வயது ஆகிறதோ உங்களின் செயல்பாடுகள் அவ்வளவு குறையும். உங்கள் உடற்பயிற்சியில் சக்திவாய்ந்த பயிற்சிகளை சேர்த்து செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.அதிக எடை தூக்கவது, வேகமாக ஓடுவது போன்ற உடற்பயிற்சிகளை அடிக்கடி செய்து உங்கள் தசைகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருங்கள்.

MOST READ: இந்த பிரச்சினைகள் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..

கார்டியோவை மட்டுமே சார்ந்திருப்பது

கார்டியோவை மட்டுமே சார்ந்திருப்பது

கார்டியோ சிறந்த பயிற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வலிமை பயிற்சி மற்றும் கலோரிகளை எரிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு இது மிகவும் உபயோகமானதாகும். ஜிம்மிற்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் கார்டியோ செய்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். வெகுசிலரே எடை தூங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தசைகளை வலிமைப்படுத்தாமல் வெறும் கலோரிகளை மட்டும் குறைப்பது உங்களுக்கு வயதான தோற்றத்தைத்தான் ஏற்படுத்தும்.

பெல்விக் பயிற்சியை தவிர்ப்பது

பெல்விக் பயிற்சியை தவிர்ப்பது

பெல்விக் உடற்பயிற்சியை நீங்கள் அவ்வளவு முக்கியமானதாக நினைக்க மாட்டிர்கள், ஆனால் அது மிகவும் முக்கியமான ஒரு உடற்பயிற்சியாகும். இடுப்பு உடற்பயிற்சிகளை தவிர்ப்பது உங்களுக்கு மென்மையான வயிறை ஏற்படுத்தும்ம் மேலும் சிறுநீரக பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

High-Intensity Interval பயிற்சியை தவிர்ப்பது

High-Intensity Interval பயிற்சியை தவிர்ப்பது

High-Intensity Interval என்பது எடையை பாஸ் செய்வது போன்ற உடற்பயிற்சியாகும். இது உங்களுக்கு வயதாகும் அறிகுறிகளை விரட்டும் முக்கியமான ஒன்றாகும். இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும். வயதானவர்கள் கூட இந்த பயிற்சியை செய்தால் இளமையாக உணரலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது.

MOST READ: இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் ஆன்மா தனித்துவம் வாய்ந்த அரிதான ஆன்மாவாம் தெரியுமா?

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

உங்கள் உடற்பயிற்சி மட்டும் உங்களுக்கு இளமையான தோற்றத்தை வழங்காது. ஏனெனில் மனஅழுத்தம் என்பது உங்களுக்கு வயதான தோற்றத்தை வழங்ககூடிய ஒன்றாகும். அதிலும் இந்த காலத்தில் அனைவருமேமனஅழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அதனை குறைக்கும் வகையில் யோகா, தற்காப்பு கலைகள் போன்றவற்றை செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Exercise Mistakes That Make You Look Older

If you do these mistakes in gym it will make you look older
Story first published: Thursday, May 9, 2019, 17:10 [IST]
Desktop Bottom Promotion