ஒரே வாரத்துல 8 கிலோவரை எடையைக் குறைக்கும் தர்பூசணி டயட்... எப்படி சாப்பிடணும்?

Posted By: Sam Asir
Subscribe to Boldsky

'என்ன செய்தாலும் எடை குறையவே இல்லை' என்று அநேகர் சலித்துக் கொள்கிறார்கள். 'சிக்'கென்று ஸ்லிம்மாக தோற்றமளிப்பதற்காக ஏதேதோ முயற்சிகள் செய்கிறார்கள். தர்பூசணி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? தர்பூசணி உடல் எடையை எப்படி குறைக்கிறது என்பதை பற்றி விளக்கமாக பேசுகிறது இந்தக் கட்டுரை.

health

தினசரி தர்பூசணி சாப்பிட்டு வந்தால் உடல் பருமன், இருதய நோய் மற்றும் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் வரும் ஆபத்து குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி டயட்

தர்பூசணி டயட்

உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும் பண்பு இயற்கையாகவே தர்பூசணிக்கு உண்டு; அதேசமயம், தர்பூசணி சாப்பிடுவதால் பசியால் வாடி விடவும் மாட்டோம். வைட்டமின்கள், உடலுக்குத் தேவையான தாது சத்துகள் மற்றும் நன்மை பயக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகளை அதிக அளவில் கொண்டுள்ள தர்பூசணியில் குறைந்த கலோரியும் மிக அதிகமான நீர்ச்சத்தும் அடங்கியுள்ளதால், உடல் எடையை குறைப்பதில் நல்ல பலனை தருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பேணுவதற்கு சமச்சீர் உணவை நாடுபவர்களுக்கு தர்பூசணி ஏற்றதாகும். குறிப்பாக கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான நீரை அளித்து, புத்துணர்வை தர்பூசணி தரும். உடல் எடையை குறைத்தே தீர வேண்டும் என்று வைராக்கியமாக இருப்பவர்கள், தினமும் காலை மற்றும் இரவு உணவாக தர்பூசணியை சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுத்தன்மை, அசுத்தங்கள் மற்றும் அதிகப்படியான உப்பு நீங்கும் .

எவ்வளவு சாப்பிடலாம்?

எவ்வளவு சாப்பிடலாம்?

நீங்கள் 60 கிலோ எடை இருந்தால், தினமும் 6 கிலோ எடை அளவுக்கு தர்பூசணி சாப்பிடலாம். அதாவது, நீங்கள் சாப்பிடும் தர்பூசணியின் எடைக்கும், உங்கள் எடைக்கும் உள்ள விகிதம் 1:10 என்ற அளவில் அமைய வேண்டும். 150 கிலோ கலோரி ஆற்றலை அளிக்கக்கூடிய அளவு தர்பூசணியை, ஒரு நாளில் 8 முறை சாப்பிட வேண்டும். 100 கிராம் தர்பூசணியில் 7 கிராம் சர்க்கரையும் 32 கலோரி ஆற்றலும் உள்ளது. தர்பூசணியில் 97% நீர் இருப்பதால், தர்பூசணி டயட் எடுக்கும் நாட்களில் அதிகமான நீர் அருந்துவதை தவிர்க்கலாம். தர்பூசணி டயட்டை 5 நாட்கள் அல்லது அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அதைவிட அதிகமாக சாப்பிடுவது எதிர்மறை விளைவுகளை உருவாக்கக்கூடும். இந்த டயட்டை எடுத்துக் கொள்ளும் நாட்களில் கடின உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். இதன்மூலம் அதிகபட்சமாக ஒரே வாரத்தில் 8 கிலோ வரை உடல்எடையைக் குறைக்க முடியுமாம்.

தர்பூசணி சாலட்

தர்பூசணி சாலட்

எடை குறைப்பு முயற்சியில் குறிப்பிட்ட காலத்திற்குள் நல்ல பலனை தருவதால் உணவியல் நிபுணர்களும் தர்பூசணி சாப்பிடுவதை பரிந்துரைக்கிறார்கள். கொஞ்ச காலம் மனவுறுதியுடன் தர்பூசணி டயட்டை கடைபிடித்தால், உடல் எடையை குறைக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.உடல் எடை குறைய ஆளி விதை என்னும் ஃப்ளாக்ஸ், சியா விதைகளோடு தர்பூசணி சாலட் செய்து சாப்பிடலாம் அல்லது தர்பூசணி ஜூஸ் அருந்தலாம்.

ஏனைய பயன்கள்

ஏனைய பயன்கள்

இரத்த குழாய்களை தளர்த்துவதற்கு உதவும் நைட்ரஸ் ஆக்ஸைடை உருவாக்குவதற்குத் தேவையான ஆர்ஜினைன் என்ற அமினோ அமிலத்தை அதிகரிக்க தர்பூசணி உதவுகிறது. ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்கச் செய்யும் குணமும் தர்பூசணிக்கு உண்டு. உடலிலிருந்து திரவம் பிரிவதை எளிதாக்கி, உடலிலிருந்து கழிவினை வெளியேற்றுகிறது. இதில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் இது ஏற்ற உணவாகும்.

 யார் சாப்பிடக்கூடாது?

யார் சாப்பிடக்கூடாது?

கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு இல்லாதவர்கள் தர்பூசணி டயட்டை தைரியமாக சாப்பிடலாம். கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இந்த டயட்டை தவிர்க்கவும். ஏனெனில் கர்ப்பிணிகள் கர்பு்ப காலத்தில் தங்களுடைய எடையை சரியாக நிர்வகித்து வரவேண்டும். அவர்களிடமிருந்து தான் ஆற்றல் குழந்தைக்குக் கடத்தப்படுகிறது. அதனால் தேவையில்லாத ரிஸ்க்கை பிரசவத்துக்குப் பின் பார்த்துக் கொள்ளலாமே தவிர, கர்ப்ப காலத்தில் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: health tips diet டயட்
English summary

The Watermelon Diet For Weight Loss

The watermelon diet is a very effective way of losing weight and naturally detoxifying the body, without going hungry.