For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாள் ஒரு வேளை மட்டும் இப்படி சாப்பிட்டா, தொப்பை வேகமாக குறையும் தெரியுமா?

இங்கு OMAD என்னும் ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட் குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

|

உங்கள் உடல் எடையைக் குறைக்க பல வழிகளை முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லையா? அப்படியானால் OMAD டயட்டை பின்பற்றுங்கள். என்ன புரிய வில்லையா? OMAD என்பது ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட் ஆகும். இந்த டயட்டின் படி ஒருவர் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் எதுவும் சாப்பிடாமல், ஒரு மணிநேரம் மட்டும் எவ்வித தடையும் இல்லாமல் சாப்பிடலாம்.

The One Meal A Day Diet (OMAD Diet)

கலிபோர்னியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் விரதம் இருப்பதன் விளைவு குறித்து சோதனை செய்தார்கள். அதில் விரதம் இருந்ததில், மனிதர்களின் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறைந்திருப்பதோடு, குடல் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவும், ஆரோக்கியமும் அதிகரிப்பதோடு, உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே வாரத்திற்கு 2 முறை அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருந்தால், அதன் விளைவாக உடல் எடை குறைவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம் மேம்படும். இக்கட்டுரையில் ஒரு நாளை ஒரு வேளை உணவு டயட் மேற்கொள்ளும் போது என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது, செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என அனைத்து விஷயங்களும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நாளை ஒரு வேளை உணவு டயட்

ஒரு நாளை ஒரு வேளை உணவு டயட்

இந்த டயட்டின் பேரின் படி, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் இரண்டு அல்லது மூன்று ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும். இதனால் நாள் முழுவதும் எடுக்கும் கலோரிகளின் அளவுக் குறையும். இதன் விளைவாக உடல் எடை குறைவதோடு, செரிமானமும் மேம்படும். இதற்கு செய்ய வேண்டியது எல்லாம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை, அந்த ஒரு வேளை உணவின் போது உட்கொள்ள வேண்டியது தான்.

பெரும்பாலானோர் இரவு நேரத்தில் தான் சாப்பிடுவார்கள். ஆனால் உங்களுக்கு எந்த வேளையில் சாப்பிட்டால் சரியாக இருக்குமோ, அந்த வேளையில் சாப்பிடலாம். சில சமயங்களில், இந்த டயட்டினை முதன்முதலாக ஆரம்பிப்பவர்கள், க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ மற்றும் சில திட உணவுகளான முட்டை அல்லது ஆப்பிள் போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில் எந்த ஒரு டயட்டும் எடுத்த எடுப்பிலேயே உடலுடன் ஒத்துப் போகும் என்று கூற முடியாது.

OMAD டயட் எப்படி வேலை செய்கிறது?

OMAD டயட் எப்படி வேலை செய்கிறது?

ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட்டை மேற்கொள்ளும் போது, உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறையும் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள நேடும். ஒருவர் 23 மணிநேரம் சாப்பிடாமல் இருக்கும் போது, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களானது, எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு, உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கின்றன. இதன் விளைவாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைக்கப்பட்டுவிடும். அதோடு இந்த டயட்டை மேற்கொண்டால், மலச்சிக்கல் தடுக்கப்படும், செரிமானம் மேம்படும் மற்றும் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும்.

இப்போது OMAD டயட்டை மேற்கொள்ளும் போது சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்று காண்போம்.

OMAD டயட்டை மேற்கொள்ளும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!

OMAD டயட்டை மேற்கொள்ளும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்!

காய்கறிகள்

கேரட், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பீட்ரூட், முள்ளங்கி, ஊதா நிற முட்டைக்கோஸ், சைனீஸ் முட்டைக்கோஸ், லெட்யூஸ், குடைமிளகாய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தோல் நீக்கப்பட்ட உருளைக்கிழங்கு, பசலைக்கீரை மற்றும் கேல் கீரை போன்ற காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.

பழங்கள்

பழங்கள்

ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட், திராட்சை, வெள்ளரிக்காய், தக்காளி, பீச், ப்ளம்ஸ், எலுமிச்சை, சாத்துக்குடி, அன்னாசிப் பழம், மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, மலை நெல்லிக்காய் போன்ற பழ வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

புரோட்டீன்

புரோட்டீன்

புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதுவும் தோல் நீக்கப்பட்ட சிக்கன் நெஞ்சுக்கறி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன், காளான், பீன்ஸ், பயறு வகைகள், பருப்பு வகைகள், டோஃபு மற்றும் முட்டைகள் போன்ற உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

கொழுப்பு நிறைந்த பால், கொழுப்பு நிறைந்த தயிர், சீடார் சீஸ், ஃபேட்டா சீஸ், மோர், ரிக்கோட்டா சீஸ் மற்றும் காட்டேஜ் சீஸ் போன்ற பால் பொருட்களை சாப்பிடுவது நல்லது.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

கைக்குத்தல் அரிசி, கருப்பு அரிசி, திணை, பார்லி போன்ற தானிய வகைகள் ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட்டின் போது சேர்த்துக் கொள்வது, அந்த ஒரு வேளை உணவையும் ஆரோக்கியமானதாக வைத்திருக்கும்.

கொழுப்புக்கள் மற்றும் எண்ணெய்கள்

கொழுப்புக்கள் மற்றும் எண்ணெய்கள்

ஆலிவ் ஆயில், அரிசி தவிடு ஆயில், சூரியகாந்தி வெண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் வெண்ணெய் போன்றவற்றை இந்த டயட்டுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம், எடை குறைந்து, உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், வால்நட்ஸ், பேகன், பைன் நட்ஸ், பிஸ்தா, மகாடாமியா, சூரியகாந்தி விதைகள், பூசணிக்காய் விதைகள் மற்றும் மெலன் விதைகள் போன்றவைற்றையும் இந்த டயட்டுடன் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்

மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்

புதினா, தில், சோம்பு, ரோஸ்மேரி, தைம், கற்பூரவள்ளி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, சீரகம், மஞ்சள், மிளகுத் தூள், மிளகாய் தூள், வெள்ளை மிளகு, சில்லி ப்ளேக்ஸ், அன்னாசிப்பூ, ஏலக்காய், பூண்டு பவுடர் மற்றும் கிராம்பு போன்றவையும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

பானங்கள்

பானங்கள்

தண்ணீர், எலுமிச்சை ஜூஸ், இளநீர், நற்பதமான பழச்சாறுகள் போன்றவற்றை ஒரு நாள் ஒரு வேளை உணவு டயட்டுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

OMAD டயட்டை மேற்கொள்ளும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்!

OMAD டயட்டை மேற்கொள்ளும் போது சாப்பிடக்கூடாத உணவுகள்!

பழங்கள்

திராட்சை, பலாப்பழம், மாம்பழம் மற்றும் அன்னாசிப் பழம் போன்றவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு அதிகமாக உள்ளது. இந்த பழங்களை இந்த டயட் மேற்கொள்ளும் போது அதிகமாக சாப்பிடாமல், அளவாக சாப்பிடுவதே நல்லது.

புரோட்டீன்

புரோட்டீன்

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் பேகான் போன்றவற்றில் புரோட்டீன் அதிகம் இருக்கலாம். அதே சமயம் இவற்றில் கொழுப்புக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால், இவற்றை அதிகம் தேர்ந்தெடுக்காதீர்கள்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

கொழுப்பு குறைவான பால், கொழுப்பு குறைவான தயிர், ப்ளேவர்டு தயிர் மற்றும் க்ரீம் சீஸ் போன்ற பால் பொருட்களை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடாதீர்கள். முடிந்த அளவு இம்மாதிரியான பொருட்களைத் தவிர்த்திடுவதே நல்லது.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

வெள்ளை அரிசி சாதத்தை மிதமான அளவில் உட்கொள்வதே நல்லது. அப்படியே மிதமான அளவில் சாப்பிட்டாலும், குறைந்தது 5 வகையான காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவதே சிறந்தது.

முக்கியமாக இந்த டயட்டில் வெண்ணெய், வெஜிடேபிள் ஆயில், மயோனைஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். அதேப் போல் முந்திரியை அதிகம் சாப்பிடக்கூடாது. மேலும் சலாமி, சாசேஜ், ப்ரைஸ், பாட்டில் ஜாம் மற்றும் ஜெல்லிகளை சாப்பிடக்கூடாது.

பானங்கள்

பானங்கள்

டப்பாவில் அல்லது கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் காய்கறி சாறுகள், டயட் சோடா, சோடா மற்றும் ஆற்றல் பானங்களை அறவேத் தொடக்கூடாது. இவை உடலை வறட்சி அடையச் செய்வதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும்.

OMAD டயட்டின் போது உடற்பயிற்சி செய்யலாமா?

OMAD டயட்டின் போது உடற்பயிற்சி செய்யலாமா?

* இந்த டயட்டை முதன்முதலாக ஆரம்பிக்கும் போது, மிகவும் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலில் ஆற்றல் இருக்காது. இந்நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வேண்டுமானால், யோகா அல்லது ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

* இந்த டயட் ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டால், எடை குறையும் போது தசைகள் சுருங்கி, அசிங்கமாக காட்சியளிக்காமல் இருக்க, தசைகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

* இந்த டயட்டை நீங்கள் பின்பற்றினாலும் அல்லது பின்பற்றாவிட்டாலும், தினமும் தவறாமல் தியானத்தில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் வாக்கிங் அல்லது ரன்னிங் போன்ற சிறு பயிற்சிகளைக் கூட மேற்கொள்ளலாம்.

OMAD டயட்டினால் சந்திக்க நேரிடும் பிரச்சனைகள்!

OMAD டயட்டினால் சந்திக்க நேரிடும் பிரச்சனைகள்!

* இந்த டயட்டை மேற்கொள்வது என்பது எளிதானது அல்ல. ஆரம்பத்தில் இந்த டயட்டை மேற்கொள்ளும் போது கடுமையான பசியையும், மிகுதியான சோர்வையும் உணரக்கூடும்.

* உடல் பலவீனமாக இருப்பது போன்று உணரக்கூடும்.

* தலைச் சுற்றல் மற்றும் மந்தமான மனநிலையில் இருக்க நேரிடும்.

* எதிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியாமல் போகும்.

* இறுதி மாதவிடாயை நெருங்கும் பெண்களின் உடலில் மெட்டபாலிச குறையக்கூடும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு டயட்டிற்கும் ஒவ்வொரு மாதிரி செயல்படும். ஆகவே எந்த ஒரு டயட்டை மேற்கொள்ளும் முன்பும், சரியான ஊட்டச்சத்து அல்லது உடல்நல நிபுணரை அணுகி அவருடன் கலந்தாலோசித்து, பின்பே பின்பற்ற வேண்டும். முக்கியமாக, கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த டயட்டை மேற்கொள்ளக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The One Meal A Day Diet (OMAD Diet)

Do you know about the one meal a day diet? This article is a beginner’s guide to the one meal a day diet that explains how it can work for you, what to eat in the one hour window, foods to avoid, and the dos and don’ts. Read on...
Desktop Bottom Promotion