உடல் எடையைக் குறைக்க உதவும் 8 மணிநேர டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

Posted By:
Subscribe to Boldsky

உடல் பருமனால் அவஸ்தைப்படுவோர் ஏராளம். இப்படி அதிக உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், அதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைப் பின்பற்றி இருப்பார்கள். சிலர் எவ்வளவோ கடுமையான டயட்டை எல்லாம் பின்பற்றி இருப்பார்கள். உடல் எடை குறையும் என்று ஒரு வழியை யார் கூறினாலும், சற்றும் யோசிக்காமல் அந்த வழியை முயற்சி செய்வார்கள். அதில் உடல் எடையை வேகமாக குறைய உதவும் ஓர் டயட் தான் 8 மணிநேர டயட்.

8 மணிநேர டயட் மிகவும் சிறப்பான மற்றும் உடல் எடையைக் குறைக்க ஏற்ற ஓர் அற்புதமான டயட்டும் கூட. இந்த டயட்டின் படி, 24 மணிநேரத்தில் 8 மணிநேரம் உணவு, ஸ்நாக்ஸ் என்று சாப்பிடலாம். ஆனால் அதற்கு பின் 16 மணிநேரம் எதையும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். என்ன வித்தியாசமான டயட்டாக உள்ளதா? ஆம், இப்படி 8 மணிநேரம் சாப்பிட்டு, 16 மணிநேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலுக்கு ஓய்வு கிடைக்கும், பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்வதற்கு போதிய நேரம் கிடைக்கும் மற்றும் கலோரிகளும் எரிக்கப்படும்.

The 8-Hour Diet – A Complete Guide

இந்த 8 மணிநேர டயட்டை ஒருவர் வாரத்திற்கு 3 நாட்கள் பின்பற்றினாலே போதும். 8 மணநேர டயட் 2 வழிகளில் உடல் எடையைக் குறைக்க உதவும். அதில் ஒன்று உடலில் கலோரிகளானழ க்ளைகோஜனாக சேகரிக்கப்படும். கல்லீரலில் உள்ள க்ளைகோஜன், ஒரு எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு உடலுக்கு ஆற்றலை வழங்கும். இப்படி சேகரிக்கப்பட்ட கலோரிகளானது எரிக்கப்படும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் எரிக்கத் தூண்டப்பட்டு, உடலுக்கு ஆற்றலைக் கிடைக்கச் செய்யும்.

மற்றொன்று, 8 மணிநேர டயட்டானது மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாட்டை தூண்டிவிடும். அதாவது உடலின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள ஆற்றலைத் தூண்டிவிடும். மேலும் இது ஆற்றல் வெளியீட்டை அதிகரிக்கிறது மற்றும் மோசமான உணவினால் ஏற்படும் தவறான சேதங்களின் அளவைக் குறைக்கிறது. அதாவது இந்த டயட் முதுமையைத் தள்ளிப் போடும், புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

இப்போது 8 மணி நேரத்திற்கான மாதிரி உணவுமுறை திட்டம் குறித்துக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை எழுந்ததும்

காலை எழுந்ததும்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் க்ரீன் டீ அல்லது காபி அல்லது ஏதாவது எலுமிச்சை ஜூஸ் போன்ற பானங்களுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து குடிக்கலாம். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க நினைத்தால், கற்றாழை ஜூஸ், இஞ்சி சாறு, நெல்லிக்காய் சாறு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றைக் குடிக்கலாம்.

காலை உணவு (10 am)

காலை உணவு (10 am)

காலை உணவாக இவற்றுள் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.

* கோதுமை ப்ளேக்ஸ் மற்றும் பால்

* வாழைப்பழ ஸ்மூத்தி அல்லது கேல் ஸ்மூத்தி

* வேக வைத்த முட்டை மற்றும் கோதுமை பிரட் டோஸ்ட்

காலை உணவிற்குப் பின்... (11.30 am)

காலை உணவிற்குப் பின்... (11.30 am)

காலை உணவை உட்கொண்ட பின்பு, சிறிது நேரம் கழித்து ஸ்நாக்ஸாக ஏதேனும் சாப்பிட நினைத்தால், இவற்றை சாப்பிடலாம்.

* வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி சாலட்

* 4 பாதாம்

மதிய உணவு (12.30 - 1 pm)

மதிய உணவு (12.30 - 1 pm)

* வேக வைத்த மீன் மற்றும் காய்கறிகள் + கொழுப்பு குறைவான தயிர்

* வெஜிடேபிள் ரோல் + கொழுப்பு குறைவான தயிர்

* சூரை மீன்/வெஜிடேபிள் சாண்ட்விச் + நற்பதமான பழச்சாறு

மதிய உணவிற்கு பின்... (2.30 pm)

மதிய உணவிற்கு பின்... (2.30 pm)

* 1 மிதமான அளவிலான டார்க் சாக்லேட் ப்ரௌனி

* 1 ஆரஞ்சு அல்லது ஆப்பிள்

மாலை ஸ்நாக்ஸ் (4.00 pm)

மாலை ஸ்நாக்ஸ் (4.00 pm)

* ஒரு சிறிய பௌல் உருளைக்கிழங்கு வ்ராஃபர்

* ஒரு சிறிய பௌல் பாப்கார்ன்

* ஒரு சிறிய பௌல் நாசோஸ் மற்றும் கொழுப்பு குறைவான மயோனைஸ்

இரவு உணவு (6.00 pm)

இரவு உணவு (6.00 pm)

* க்ரில்டு வெஜிடேபிள்/சிக்கன் கபாப் + பிரட் புட்டிங்

* ஆசியன் ஸ்டைல் சிக்கன் சூப்/ இந்தியன் ஸ்டைல் பருப்பு சூப் + ஃபுரூட் கஸ்டர்டு

* வெஜிடேபிள் சாலட் + வெள்ளரிக்காய் ஜூஸ்

* காராமணி சில்லி + 2-3 சப்பாத்தி + 1 டம்ளர் வெதுவெதுப்பான பால்

மாதிரி திட்டமே!

மாதிரி திட்டமே!

இந்த 8 மணிநேர டயட் திட்டம் ஒரு மாதிரி தான். இதுப்போன்று 8 மணிநேர டயட்டை ஒருவர் பின்பற்றி வந்தால், விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம். செரிமானம் சிறப்பாக நடைபெறுவதற்கு தினமும் தவறாமல் குறைந்தது ஒரு கப் தயிரை உட்கொள்ளுங்கள். இந்த உணவுகளை மட்டும் தான் சாப்பிட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது தான் இல்லை. கீழே எந்த மாதிரியான உணவை 8 மணிநேர டயட்டின் போது சாப்பிடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றில் பிடித்ததை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

எம்மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம்?

எம்மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம்?

* அனைத்து வகையான காய்கறிகள் அல்லது பழங்களையும் சாப்பிடலாம்.

* லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாவிட்டால், அனைத்து வகையான பால் பொருட்களையும் உட்கொள்ளலாம்.

* ஆலிவ் ஆயில், அரிசி தவிடு ஆயில், கனோலா ஆயில், வெண்ணெய், நெய், மயோனைஸ் மற்றும் மார்கரைன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* பீன்ஸ், சோயா, டோஃபு, பருப்பு வகைகள், முட்டைகள், மீன், சிக்கன் நெஞ்சுக்கறி, வான்கோழி, தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, புரோட்டீன் பார்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

தொடர்ச்சி...

தொடர்ச்சி...

* சாக்லேட் புட்டிங், பிரட் புட்டிங், வாழைப்பழ மஃபின்கள், கப் கேக்குகள், ஐஸ் க்ரீம், கஸ்டர்டு, சாக்லேட் போன்றவற்றை அளவாக சாப்பிடலாம்.

* அனைத்து வகையான மூலிகைகள் அல்லது மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

* நற்பதமான பழங்கள் அல்லது காய்கறி ஜூஸ்கள், இளநீர், உடலை சுத்தம் செய்ய உதவும் பானங்கள், க்ரீன் டீ, ப்ளாக் டீ மற்றும் காபி போன்றவற்றைக் குடிக்கலாம்.

எம்மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது?

எம்மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது?

* தேங்காய் எண்ணெய், வெண்ணெய் அல்லது மயோனைஸ் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

* ஆல்கஹால், காற்றூட்டப்பட்ட மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்கள், பாக்கெட் பழச்சாறுகள் போன்றவற்றை அறவேத் தொடக்கூடாது.

உடற்பயிற்சியின் அவசியம்

உடற்பயிற்சியின் அவசியம்

தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களானது ஆற்றலாக மாற்றப்பட்டு, உடலில் ஆற்றலின் அளவை அதிகரிக்கும். என்ன தான் நீங்கள் 8 மணிநேர டயட்டைப் பின்பற்றினாலும், வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், ஜம்பிங், ஏரோபிக்ஸ், நீச்சல், நடனம், மாடிப்படியில் ஏறி இறங்குவது, யோகா போன்ற எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலே, அது உடல் எடையைக் குறைக்க உதவும்.

8 மணிநேர டயட்டின் போது செய்ய வேண்டியவை!

8 மணிநேர டயட்டின் போது செய்ய வேண்டியவை!

* இரவு உணவு உட்கொண்ட 3 மணிநேரத்திற்குப் பின் தான் உறங்கு செல்ல வேண்டும்.

* தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

* கொழுப்பு நிறைந்த உணவுகளாக இருந்தால், அவற்றை அளவாக சாப்பிட வேண்டும்.

* பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

* போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும்.

8 மணிநேர டயட்டின் போது செய்யக்கூடாதவை!

8 மணிநேர டயட்டின் போது செய்யக்கூடாதவை!

* இரவு உணவிற்கு பின் ஸ்நாக்ஸ் எதுவும் சாப்பிடக்கூடாது.

* ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கக்கூடாது.

* கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.

* உணவு உட்கொண்ட 1 மணிநேரத்திலேயே எந்த ஒரு ஸ்நாக்ஸையும் சாப்பிடக்கூடாது.

* மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The 8-Hour Diet – A Complete Guide

Do you know about 8 hour diet? Here is a complete guide. Read on to know more...