சாப்பிடாமலே வெயிட் போடுதா?... நீங்க செய்யற இந்த சின்ன தப்புதான் அதுக்கு காரணம்...

Posted By: Gnaana
Subscribe to Boldsky

பொதுவாக ஒருவருக்கு திடீரென உடல் எடை அதிகரித்தால், அவர் அதிக கலோரிமிக்க உணவுகளை சாப்பிடுகிறார் அல்லது, முறையான உடல் உழைப்பு இல்லாமல் இருக்கிறார், என்பது, எல்லோரின் கருத்தாக இருக்கும். இருந்தாலும், வழக்கமான உணவையே சாப்பிட்டு, முறையான உடற்பயிற்சிகள் செய்துவந்தாலும், சிலருக்கு, திடீரென உடல் எடை கூடிவிடுகிறது. இதற்கு என்ன காரணம்?

health

என்ன காரணமாக இருக்கும் என்பதை, சற்று தீவிரமாக முயற்சிசெய்து, அவர்களின் வாழ்க்கை முறையை, அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால், காரணங்கள் கிடைத்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான தூக்கமின்மை.

சரியான தூக்கமின்மை.

இரவில் தூக்கம் வரவில்லையென்றால், சிலர் சமையலறைக்கு சென்று பூனை போல, பாத்திரங்களை உருட்டி, எதையாவது எடுத்து, கொறித்துக் கொண்டிருப்பார்கள். இரவில் நெடுநேரம் தூங்காததால், உடலில் ஏற்படும் வேதி மாற்றங்களால், பசி ஏற்பட்டு, ஏதாவது சாப்பிட்டபின், பசி குறைகிறது. தூக்கம் வராத இரவுகளில், அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுவர, இதன் காரணமாக, உடல் எடை கூடி விடுகிறது.

மன அழுத்தம்.

மன அழுத்தம்.

மனச்சோர்வைத் தூண்டும் கார்டிசால் எனும் ஹார்மோன், உடலில் அதிகமாக சுரக்கும்போது, நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன்கள் பசியைத்தூண்டி, வெரைட்டியான உணவுகளின் பக்கம் நமது கவனம் திரும்பி, அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளால், உடல் எடை அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகள்.

மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகள்.

மனச்சோர்வால், முடங்கிப்போகும் மனிதர்களுக்கு, மன நல பாதிப்பிலிருந்து வெளியேற உதவும் நிவாரணியாக, மருத்துவர்களின் ஆலோசனைகளின் பேரில், எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால், உடல் எடை கூடுகிறது. இருந்தாலும், மீண்டும் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று, மருந்துகளை மாற்றிப் பயன்படுத்தலாம். மன அழுத்தம் நீக்கும் மருந்துகள், பாதிப்புகளை குணமாக்கும்போது, அவற்றால் ஏற்படும் மன நிலை மாறுதலால், சிலருக்கு பசியெடுத்து, நிறைய சாப்பிடத் தோன்றும், இதன் காரணமாகவும், உடல் எடை கூடுகிறது.

ஊக்க மருந்துகள்.

ஊக்க மருந்துகள்.

உடல் சோர்வு அல்லது உடல் ஆற்றலுக்கு தரப்படும் ஸ்டீராய்டு மருந்துகள், அவற்றின் வேதித் தன்மைகளால், உடல் எடையை அதிகரிக்க வைக்கின்றன. ஊக்க மருந்துகளின் அளவு மற்றும் எடுத்துக்கொள்ளும் காலஅளவைப் பொறுத்து, உடல் எடை மாற்றங்கள் ஏற்படலாம். ஊக்க மருந்துகள், உடல் கொழுப்பு உருவாக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, முகம், கழுத்தின் பின்புறம் மற்றும் அடிவயிற்றில், கொழுப்பு தேங்கிய தசைகளை, அதிகப்படுத்தி விடும்.

மருந்து மாத்திரைகள்

மருந்து மாத்திரைகள்

மனச்சிதைவு மற்றும் மனக்கோளாறு போன்ற மன நலம் சார்ந்த பாதிப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது, எடுத்துக்கொள்ளும் மருந்துகள், உடல் எடையை அதிகரித்து விடக்கூடும். அதேபோல, ஒற்றைத் தலைவலி, இரத்த சர்க்கரை பாதிப்பு, இரத்த அழுத்தக் குறைபாடு மற்றும் காக்கா வலிப்பு போன்ற உடல் நல பாதிப்புகளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளும், உடல் எடையை அதிகரித்துவிடக் கூடியவை. இதுபோன்ற நிலைகளில், மருத்துவர்களிடம் ஆலோசித்து, குறைவான பக்க விளைவுகள் உள்ள மருந்துகளை, எடுத்துக்கொள்ளலாம்.

சில பெண்கள், தாங்கள் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்வதால், உடல் எடை கூடிவிடுகிறது என்று சொன்னாலும், கருத்தடை மாத்திரைகளால்தான், உடல் எடை கூடுகிறது என்பது, இன்னும் மருத்துவ ரீதியாக, நிரூபிக்கப்படவில்லை.

ஹைப்போ தைராய்டு

ஹைப்போ தைராய்டு

தைராய்டு ஹார்மோன்களை குறைவாக சுரக்கும் சுரப்பிகளால், சளி பிடிப்பது போன்ற உணர்வு, உடல் சோர்வு போன்ற பாதிப்புகளுடன், உடல் எடையும் அதிகரிக்கும். தைராய்டு சுரப்புக்குறைவு, உடல் நலத்தைக் கடுமையாக பாதிக்கும்போது, தாமதமான உடல்வளர்ச்சி மாற்றத்தை ஏற்படுத்தி, உடல் எடையைக் கூட்டிவிடுகிறது.

சில பெண்களுக்கு, மெனோபாஸ் காலத்தில், உடல் எடை கூடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், வயதுகள் கூடினாலும், மாற்றமில்லாத உணவுகளால், தாமதமான உடல் வளர்ச்சிமாற்றத்தால், உடல் எடை கூடலாம். நாளடைவில் தினசரி உடற்பயிற்சியை செய்ய ஆர்வமில்லாவிட்டாலும், எடை கூடிவிடும். மெனோபாஸ் பருவத்தில், உடலில் கொழுப்பு தங்கும் இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு, குறிப்பாக, இடுப்பைச் சுற்றி, கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து, தொங்க ஆரம்பிக்கும்.

கஷிங் சிண்ட்ரோம்

கஷிங் சிண்ட்ரோம்

மன அழுத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் கார்டிசால் அதிகமாக சுரப்பதால், ஏற்படும் கஷிங் சிண்ட்ரோம் பாதிப்புகள், ஆஸ்துமா, உடல் மூட்டுவாதம் போன்ற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் கலந்துள்ள, ஊக்க மருந்துகளாலும் ஏற்படுகிறது.

அதிகமாக கார்டிசால் சுரப்பதால், உடல் எடை கூடி, முகம், கழுத்து, இடுப்பு மற்றும் கீழ் முதுகு போன்ற இடங்களில், மிகையான கொழுப்புகள், அதிகம் சேர்ந்துவிடுகிறது.

கருப்பை நீர்க்கட்டிகள்

கருப்பை நீர்க்கட்டிகள்

கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகளால் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு கோளாறுகளால், கருப்பை விரிவடைந்து, பெண்களின் குழந்தைப்பேற்றை பாதிக்கிறது. இதனால், உடலெங்கும் முடி வளர்வது, முகப்பரு, இன்சுலின் எதிர்ப்பு போன்ற பாதிப்புகளுடன், உடல் எடையும் கூடிவிடுகிறது. பெரும்பாலும், வயிற்றில் ஏற்படும் அதிக எடையுள்ள கொழுப்புகளால், இதய நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்தும் அதிகரிக்கிறது.

கருப்பை நீர்க்கட்டிகளை குணமாக்க, தண்ணீர்விட்டான் கிழங்கு, பெண்களுக்கு சிறந்த வரப்பிரசாதமாக அமையும்.

புகை பிடித்தலை நிறுத்துவது.

புகை பிடித்தலை நிறுத்துவது.

புகை பிடித்தலை நிறுத்துவதில் நன்மைகள் ஏராளமிருந்தாலும், நிறுத்தியவுடனே, ஐந்து கிலோ வரை உடல் எடை அதிகரித்துவிடுகிறது. உடலில் நிகோடின் குறைவதால், பசி ஏற்பட்டு, நிறைய சாப்பிடத் தூண்டுவதால், உடல் எடை கூடுகிறது, என்கிறார்கள் ஆய்வாளர்கள். இருப்பினும் இந்த பாதிப்பு, சில வாரங்களில், நீங்கிவிடுகிறது.

தாமதமாகும் உடல் வளர்ச்சிமாற்றங்கள்.

தாமதமாகும் உடல் வளர்ச்சிமாற்றங்கள்.

கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம், என்று ருசியான உணவுகளைத் தேடி, அவற்றை ஒருபிடி பிடிக்கும் சாப்பாட்டு ராமனாக இருந்தால், கண்டிப்பாக, உடல் எடை அதிகமாகிவிடும். அதோடுகூட, நினைத்தாலே நாவினிக்க வைக்கும் இனிப்புகள், நொறுக்குத்தீனிகள் மற்றும் குடிப்பழக்கம் போன்றவை, நிச்சயம் உங்களை, கும்பகர்ணன் போலாக்கிவிடும்.

உங்களுக்கு திடீரென உடல் எடை அதிகரித்தால்,

உங்களுக்கு திடீரென உடல் எடை அதிகரித்தால்,

எடுத்துக்கொள்ளும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி, நிறுத்தக்கூடாது. நோய்கள் தீரவும், நல்ல உடல் நலனுக்கும் மருந்துகள் அவசியமானவை.

மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடல் எடை கூடுவதை, மற்றவருடன் ஒப்பிடாதீர்கள், பக்கவிளைவுகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. பக்கவிளைவுகளின் தீர்வுக்கு, மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம். எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளால், உடலில் கெட்டநீர் சேர்ந்து அதனால், உடல் எடை அதிகரித்தால், கவலைப்பட வேண்டாம், அவை விரைவில் குணமாகி விடலாம், அல்லது மருத்துவரே, நிறுத்தச் சொல்லிவிடலாம். குறைவான சோடியமுள்ள உணவுகளை சாப்பிட, கெட்டநீர் வெளியேறிவிடும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

மருந்துகளால், அதிக உடல் எடையை உணர்ந்தால், மருத்துவர், குறைந்த பக்க விளைவுகளை உடைய மருந்துகளை, உங்களுக்கு சிபாரிசு செய்வார். தாமதமாகும் வளர்ச்சி மாற்றங்களால், உடல் எடை கூடினால், வளர்ச்சி மாற்றங்களை வேகமாக்க, உடல் உழைப்பை அதிகரிக்கலாம், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனாலும், நாட்பட்ட உடல்நலக் கோளாறுகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனைக்குப் பின், இதுபோன்ற செயல்களில் ஈடுபட, உடல் எடையைக் குறைக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Reasons You’re Gaining Weight

ore reasons should be there for weight gain. hormonal problems, less nutrients, iron and folic deficiency like more.
Story first published: Saturday, March 31, 2018, 17:30 [IST]