For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்கணுமா? அப்ப உருளைக்கிழங்கு ஜூஸை குடிங்க...

|

பொதுவாக உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர், தங்களது உணவில் உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் அதிகம். எனவே உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும் என்று மக்கள் அஞ்சி சாப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில், உருளைக்கிழங்கு உடல் எடையைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும். அதிலும் உருளைக்கிழங்கு ஜூஸைக் குடித்தால், உடல் எடை விரைவில் குறையும்.

பெரும்பாலான மக்கள் அதிகம் கஷ்டப்படாமல், எளிதில் உடல் எடையைக் குறைப்பதற்கு எடை குறைப்பு மாத்திரைகள், டயட் மாத்திரைகள் போன்றவற்றை அடிக்கடி எடுக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான மாத்திரைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். எனவே உடல் எடையைக் குறைப்பதற்கு சிறப்பான ஆரோக்கியமான வழி என்றால் அது இயற்கையான வழிமுறையைத் தேர்ந்தெடுத்து பின்பற்றுவது தான்.

Raw Potato Juice for Weight Loss

உடல் எடையைக் குறைக்க என்ன தான் பல்வேறு இயற்கை வழிகள் இருந்தாலும், அதில் எடையையும் குறைத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகளை கவனமாக தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டியது அவசியம். அதில் ஒரு சிறப்பான வழி தான் உருளைக்கிழங்கு ஜூஸ் குடிப்பது. மேலும் உருளைக்கிழங்கு விலைக் குறைவானது மட்டுமின்றி, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது.

இப்போது உருளைக்கிழங்கு ஜூஸை எப்படி தயாரிப்பது என்றும், அதை எவ்வாறு பருக வேண்டும் என்பதையும், வேறு என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்றும் காண்போம். அதைப் படித்து முழுமையாக தெரிந்து கொண்டு, பின் மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் சோடியம் மிகவும் குறைவான அளவில் உள்ளது. எனவே உருளைக்கிழங்கு எப்போதுமே ஆரோக்கியமற்ற உணவுப் பொருள் அல்ல. மேலும் உருளைக்கிழங்கு வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். ஆகவே உருளைக்கிழங்கு ஒருவரை அளவுக்கு அதிகமாக கண்ட உணவு உண்பதைத் தடுக்கும்.

உருளைக்கிழங்கை ஜூஸ் தயாரித்து அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், ஸ்நாக்ஸ் நேரத்தில் கண்டதை சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் எழாது. சொல்லப்போனால் உருளைக்கிழங்கு ஜூஸ், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணும் அளவைக் குறைத்து, உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தையும் தடுக்கும். நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க உருளைக்கிழங்கு ஜூஸைக் குடிக்க முடிவு எடுத்திருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்கள் உங்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

உருளைக்கிழங்கு ஜூஸ் தயாரிக்கும் முறை:

உருளைக்கிழங்கு ஜூஸ் தயாரிக்கும் முறை:

முதலில் நல்ல நற்பதமான உருளைக்கிழங்குகளை எடுத்து நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஜூஸர் இருந்தால், அதை அப்படியே ஜூஸரில் போட்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ஜூஸர் இல்லாவிட்டால், உருளைக்கிழங்குகளைத் துருவி, அதைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 100 முதல் 150 மிலி உருளைக்கிழங்கு ஜூஸைக் குடிக்க வேண்டும். இதனால் எதிர்பார்த்த மாற்றத்தைக் காணலாம். எனவே அதற்கு ஏற்றவாறு தேவையான உருளைக்கிழங்குகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

MOST READ : தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு

வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!!

எப்போது பருக வேண்டும்?

எப்போது பருக வேண்டும்?

உருளைக்கிழங்கு ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். அதுவும் அதிகாலையில் எழுந்ததும் பருகுவது மிகவும் சிறந்தது. முக்கியமாக உருளைக்கிழங்கு ஜூஸைக் குடித்தால், குறைந்தது 1/2 மணிநேரமாவது இடைவெளி விட்டு காலை உணவை உண்ண வேண்டும்.

 நற்பதமான உருளைக்கிழங்கு ஜூஸ்

நற்பதமான உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கு ஜூஸைத் தயாரித்த உடனேயே பருக வேண்டும். எக்காரணம் கொண்டும், அதை ஃப்ரிட்ஜில் வைத்து பருகக் கூடாது. ஜூஸ் குடிக்கும் போது, அதை நற்பதமாக தயாரித்து உடனே பருகுங்கள். உங்களுக்கு உருளைக்கிழங்கு ஜூஸை அப்படியே குடிக்க பிடிக்காவிட்டால், அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். வேண்டுமானால், இந்த ஜூஸ் உடன் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உருளைக்கிழங்கு ஜூஸின் சுவை சற்று சுவையானதாக இருக்கும்.

எவ்வளவு காலம் குடிக்க வேண்டும்?

எவ்வளவு காலம் குடிக்க வேண்டும்?

உருளைக்கிழங்கு ஜூஸை தினமும் என்று குறைந்தது இரண்டு வாரம் குடிக்க வேண்டும். பின் ஒரு வாரம் இடைவெளி விட்டு, வேண்டுமானால் மீண்டும் இரண்டு வாரங்கள் குடிக்கலாம். இப்படி நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் வரை இந்த ஜூஸைக் குடிக்கலாம்.

குறிப்பு

குறிப்பு

உருளைக்கிழங்கு ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் போது, ஆரோக்கியமான உணவுகளைத் தான் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எடைக் குறைவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வீணாகிவிடும். எனவே எக்காரணம் கொண்டும் ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிட வேண்டாம்.

முக்கியமாக உருளைக்கிழங்கு ஜூஸ் குடிப்பதால், எடை குறைவதோடு, வேறு சில ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். கீழே உருளைக்கிழங்கு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

நன்மை #1

நன்மை #1

உருளைக்கிழங்கு ஜூஸில் காரத்தன்மை உள்ளதால், இது உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையைக் குறைக்க உதவும் மற்றும் இது பல்வேறு நோய்களான இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றையும் தடுக்கும்.

நன்மை #2

நன்மை #2

உருளைக்கிழங்கு ஜூஸ் கீல்வாதத்தை சரிசெய்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த ஜூஸைக் குடிக்கும் போது, அது உடலில் இருந்து அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றும்.

நன்மை #3

நன்மை #3

உருளைக்கிழங்கு ஜூஸ் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். ஒருவரது உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவு குறைந்தால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

MOST READ : நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்...!

நன்மை #4

நன்மை #4

உருளைக்கிழங்கு ஜூஸ் மிகச்சிறந்த உடலை சுத்தம் செய்யும் பானம். அதுவும் இந்த பானத்தைக் குடித்தால், அது கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். ஜப்பான் மற்றும் இதர நாடுகளில் உருளைக்கிழங்கு ஜூஸ் ஹெபடைடிஸ் பிரச்சனையை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நினைவில் கொள்ள வேண்டியவை:

நினைவில் கொள்ள வேண்டியவை:

உடல் எடையைக் குறைப்பதற்கு உருளைக்கிழங்கு ஜூஸ் டயட்டை மேற்கொள்வதாக இருந்தால், ஒருசில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். அதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிகப்படியான உப்பு போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதேப்போல் அதிகளவு உணவையும் உட்கொள்ளக் கூடாது. முக்கியமாக இந்த டயட்டின் போது அதிகளவு நீரைப் பருக வேண்டும். மேலும் தவறாமல் தினமும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Raw Potato Juice for Weight Loss

People often avoid potato when they want to lose weight. But in truth potato is good for weight loss. Raw potato juice can help you lose weight. Read on to know more...
Story first published: Thursday, October 4, 2018, 13:28 [IST]
Desktop Bottom Promotion