'பத்மாவத்' ரன்வீர் சிங்கின் ஃபிட்டான கட்டுடலின் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா?

Posted By:
Subscribe to Boldsky

பல எதிர்ப்புகளுக்குப் பின் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் மற்றும் சாஹித் கபூர் நடித்து வெளிவந்த பிரம்மாண்டமான ஓர் பாலிவுட் திரைப்படம் தான் 'பத்மாவத்'. இது தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ரன்வீர் சிங் முக்கிய வேடமான அலாவுதீன் கில்ஜியாக நடித்திருந்தார். வில்லதனமான போர்வீரனாக நடித்த ரன்வீர் சிங், அழகிய கட்டமைப்புடன் காணப்பட்டார்.

இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது கட்டுடல் தான் கம்பீரமான தோற்றத்தைக் கொடுத்தது. இத்தகைய கம்பீரமான கட்டுடலைப் பெறுவதற்கு ரன்வீர் சிங் மிகவும் பாடுபட்டிருப்பார் என்பது அனைவருக்குமே தெரியும். பல ஆண்களும் ரன்வீர் சிங் போன்று தங்களது உடலை வைத்துக் கொள்ளவும் நினைப்பார்கள். அதற்கு ரன்வீர் சிங் என்ன மாதிரியான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாகவும் இருப்பர்.

ரன்வீர் சிங்கின் இத்தகைய அழகிய கட்டுடலை பெற உதவியவர் தான் இவரது உடற்பயிற்சியாளர் முஸ்தஃபா அஹ்மத். இவர் தான் ரன்வீர் சிங் இப்படிப்பட்ட உடலைப் பெற எப்பேற்பட்ட உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென சொல்லிக் கொடுத்தவர். முக்கியமாக ரன்வீர் சிங் எப்போதும் புன்னகை முகத்துடன் தான் காட்சியளிப்பார். மேலும் எப்போதும் இவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்.

முகத்தில் எப்போதும் புன்னகை இருந்தால், அதுவே ஒருவரை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். இக்கட்டுரையில் 'பத்மாவத்' திரைப்படத்தில் கம்பீரமான தோற்றத்தைப் பெற ரன்வீர் சிங் மேற்கொண்ட டயட் மற்றும் ஃபிட்னஸ் ரகசியங்கள் உங்களுக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாடி-பில்டிங் டயட்

பாடி-பில்டிங் டயட்

ரன்வீர் சிங்கின் கட்டுடலின் ரகசியங்களுள் ஒன்று, இவர் ஒவ்வொரு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை தவறாமல் உணவு உண்பார். இவரது டயட்டில் புரோட்டீன் நிறைந்த ஆட்டிறைச்சி, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த சால்மன் மீன் போன்றவை அதிகம் இருக்கும். இவர் உணவில் உப்பு மற்றும் எண்ணெயை அதிகம் பயன்படுத்தமாட்டார். தசைகளின் வளர்ச்சிக்கு புரோட்டீன் ஷேக்குகளை டயட்டில் சேர்த்துக் கொள்வார்.

காலை உணவு முக்கியம்

காலை உணவு முக்கியம்

ஒரு நாளில் காலை உணவு மிகவும் முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்தவர் ரன்வீர் சிங். காலை உணவு உண்டால் தான், ஒரு நாளைக்குத் தேவையான எரிபொருள் உடலுக்கு கிடைக்கும் என ரன்வீர் சிங் கூறுகிறார். இவர் தனது நாளை கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த டயட் மூலம் தான் ஆரம்பிப்பாராம். இதில் சிக்கன், முட்டையின் வெள்ளைக்கரு, நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும்.

கார்டியோ பயிற்சி

கார்டியோ பயிற்சி

ரன்வீர் சிங் தினமும் கொழுப்புக்களை எரிப்பதற்கு காலையில் 1 மணிநேரமும், மாலையில் 1 மணிநேரமும் கார்டியோ பயிற்சியை செய்வாராம். இவர் தனது உடற்பயிற்சியை 10 நிமிடம் வார்ம்-அப்பைத் தொடர்ந்து, 20 நிமிட ஹை-இன்டென்சிட்டி இன்டர்வெல் ட்ரெயினிங் (HIIT) செய்வாராம். இந்த பயிற்சியில் உள்ள உடற்பயிற்சிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். அதில் டிப்ஸ், புஷ்-அப் மற்றும் புல்-அப் போன்றவையும் அடங்கும்.

ஸ்டாமினா தேவை

ஸ்டாமினா தேவை

இடைவெளி இல்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கு ஸ்டாமினா மிகவும் அவசியம். ரன்வீர் சிங் 25 நிமிடம் இடைவேளையின்றி கடுமையான உடற்பயிற்சியை செய்வார். இது அவ்வளவு எளிதல்ல. ஒருவர் இம்மாதிரியான பயிற்சியை ஜிம்மில் சேர்ந்த முதல் நாளிலேயே செய்ய முடியாது. மெதுவாக ஆரம்பித்து, பின் மெல்ல மெல்ல அதிகரித்து தான் செய்ய முடியும்.

சிக்ஸ் பேக் ஆப்ஸ் பயிற்சி

சிக்ஸ் பேக் ஆப்ஸ் பயிற்சி

ரன்வீர் சிங்கின் சிக்ஸ் பேக்கின் ரகசியம், அவரது கடுமையான உடற்பயிற்சி மட்டும் காரணமல்ல. அதை அவர் சரியாக பராமரிப்பதும் தான் காரணம். அதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே நம்மை நாம் மனதளவில் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க பழக வேண்டும். அதன் பின் ஜிம் சென்று உங்களுக்கான உடற்பயிற்சியாளர் கூறும் சரியான டயட் திட்டத்தைப் பின்பற்றி, உடற்பயிற்சிகளை செய்து வந்தால், சிக்ஸ் பேக் வைக்க முடியும்.

புரோட்டீன் நிறைந்த இரவு உணவு

புரோட்டீன் நிறைந்த இரவு உணவு

மாலை வேளையில் ஜிம் செல்பவர்களுக்கு ரன்வீர் சிங் கூறும் அறிவுரை என்றால், அது இரவு நேரத்தில் புரோட்டீன் நிறைந்த இரவு உணவை உண்ணுங்கள் என்பது. இவர் செயற்கை புரோட்டீன்களை விட, இயற்கை புரோட்டீன்களைத் தான் அதிகம் எடுப்பார். அதுவும் புரோட்டீன் நிறைந்த வேக வைத்த காய்கறிகள், பருப்பு வகைகள், சப்பாத்தி, சாலட் அல்லது முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவாராம். ஏனெனில் இவை எளிதில் செரிமானமாகிவிடும்.

தாமதம் கூடாது

தாமதம் கூடாது

ஒருவரது உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து நிறைந்த டயட் முக்கிய பங்கை வகிப்பதாக ரன்வீர் சிங் அறிவுறுத்துகிறார். எனவே எப்போதும் சரியான நேரத்தில் சரியான டயட்டை மேற்கொள்ளுங்கள். முக்கியமாக மதிய உணவு மற்றும் இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் உடல் பருமன், இதய நோய் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

வெளிப்புற விளையாட்டு

வெளிப்புற விளையாட்டு

ரன்வீர் சிங் ஜிம் செல்வதோடு, வெளிப்புற விளையாட்டுக்களிலும் அதிகம் ஈடுபடுவார். அதிலும் இவர் நீச்சல், சைக்கிளிங் மற்றும் இதர வெளிப்புற விளையாட்டுக்களில் அதிகம் ஈடுபடுவார். இது தான் இவரது அழகிய கட்டுடலின் காரணம். இதையே ரன்வீர் தன் ரசிகர்களுக்கும் பரிந்துரைக்கிறார்.

மதுவிற்கு 'நோ'

மதுவிற்கு 'நோ'

ரன்வீர் சிங் மது அருந்தமாட்டார். ஏனெனில் இது அவர் கஷ்டப்பட்டு கொண்டு வந்த அழகிய கட்டுடலைப் பாழாக்கும். மேலும் ஆல்கஹால் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்து, அடிக்கடி உடல்நல குறைவை உண்டாக்கி, ஜிம்மிற்கு முறையாக செல்ல முடியாமல் போய்விடும். எனவே சிக்ஸ் பேக் வேண்டுமானால், மதுவிற்கு முதலில் குட்-பை சொல்ல வேண்டும்.

இனிப்பு பலகாரங்கள்

இனிப்பு பலகாரங்கள்

ரன்வீர் சிங் தனது டயட் திட்டத்தில் இருந்து சர்க்கரையை முற்றிலும் நீக்கிவிட்டார். எப்போதும் சர்க்கரை சேர்க்காத பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களைத் தான் உண்பார். ஆனால் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தனக்கு பிடித்த இனிப்பு பலகாரங்களை உண்பார். ஆனால் மறுநாள் இருந்து மீண்டும் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ranveer Singh's Diet And Fitness Tips For A Perfect Chiselled Body

Ranveer Singh is the most famous celebrity in Bollywood and his steel body is to die for. Check out Ranveer Singhs diet and fitness tips for a perfect chiselled body.
Story first published: Tuesday, January 30, 2018, 16:42 [IST]
Subscribe Newsletter