இளநீர் குடித்தால் உடல் எடை குறையும் என்பது உண்மையா? வாங்க பாக்கலாம்...

Posted By:
Subscribe to Boldsky

இளநீர் இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று கூறலாம். இதில் பல்வேறு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. இது ஒருவரது தாகத்தைத் தணிப்பதோடு, ஒருவருக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல், பசியைக் கட்டுப்படுத்தும். இளநீரை கோடைக்காலத்தில் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் உடல் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, உடலில் நீர்ச்சத்தின் அளவும் சீரான அளவில் பராமரிக்கப்படும்.

முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இளநீர் மிகச்சிறப்பான பானம். இதை தினமும் ஒன்று குடித்து வந்தால், அது உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும். மேலும் இளநீர் அனைவரும் விரும்பி குடிக்கும் வகையில் இருப்பதால், கஷ்டமின்றி உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கும் ஏற்றது. ஏனெனில் இளநீரில் நார்ச்சத்துக்கள் மிகவும் அதிகம் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. மேலும் இது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும்.

இளநீரில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. பொட்டாசியம் மிகச்சிறந்த ஒரு எலக்ட்ரோலைட். அதாவது இது உணவை ஆற்றலாக மாற்றக்கூடியது. மேலும் உடல் தசைகளை வலிமையாக்கவும் உதவும். ஒரு கப் இளநீரில் 2 கிராம் புரோட்டீன் உள்ளது. அதோடு இளநீரில் வைட்டமின் சி மற்றும் நொதிப் பொருட்களும் அதிகளவில் உள்ளது. சரி, இப்போது இளநீர் எப்படி ஒருவரது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரிகள் குறைவு

கலோரிகள் குறைவு

ஒரு கப் இளநீரில் 46 கலோரிகள் தான் உள்ளது. உடல் எடையைக் குறைக்க உதவும் மற்ற பானங்களுடன் ஒப்பிடுகையில், இளநீர் மிகச்சிறந்த தேர்வு. பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பானங்களில் சர்க்கரை மற்றும் ப்ளேவர்கள் அதிகம் இருக்கும். இது உடல் பருமனை அதிகரிக்கும். ஆனால் இளநீரில் நேச்சுரல் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. மேலும் கலோரிகளும் குறைவு என்பதால், இதைக் குடித்தால், உடல் வறட்சி அடையாமல் நீர்ச்சத்துடன் இருக்கும் மற்றும் உடல் எடையும் குறைய உதவியாக இருக்கும்.

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்

ஒருவரது உடலில் மெட்டபாலிச அளவு குறைவாக இருந்தால் தான் உடல் பருமனடையும். உடல் மெட்டபாலிசம் குறைவாக இருக்கும் போது, எவ்வளவு குறைவாக உணவை உட்கொண்டாலும், உடல் பருமன் அதிகரிக்கத் தான் செய்யும். ஆனால் இளநீரைக் குடித்தால், அது உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிக்க உதவி, உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தி, உணவுகளை ஆற்றலாக மாற்றி, பல்வேறு செயல்பாடுகளில் சிறப்பாக ஈடுபட உதவும்.

கொலஸ்ட்ரால் குறைவு

கொலஸ்ட்ரால் குறைவு

ஒருவரது இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்கள் அதிகளவு இருந்தால், அது இதயத்திற்கு செல்லும் தமனிகளில் தேங்க ஆரம்பித்து, அடைப்பை உண்டாக்கி, சீரான இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தி, பெரும் ஆபத்தை உண்டாக்கும். ஆய்வுகளில் இளநீர் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுவும் இளநீர் கெட்ட கொலஸ்ட்ராலை பித்த அமிலமாக மாற்றி வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தும்

இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தும்

இளநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களை (ROS) குறைக்க உதவும். ROS என்பது பல்வேறு நோய்கள், கோளாறுகளை உண்டாக்குபவைகளாகும். இளநீர் இந்த ROS-ஐ குறைக்க உதவி, இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தும். எப்போது ஒருவரது உடல் இன்சுலினுக்கு சென்சிட்டிவ்வாக உள்ளதோ, அப்போது உடல் எடை அதிகரிப்பது குறையும் மற்றும் சர்க்கரை நோயின் அபாயமும் குறையும்.

கொழுப்பில்லா தசைகளின் வளர்ச்சி

கொழுப்பில்லா தசைகளின் வளர்ச்சி

இளநீர் கொழுப்பில்லா தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். இதில் கலோரிகள் குறைவு மற்றும் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மற்றும் மெட்டபாலிச அளவை அதிகரிக்கும். இதன் விளைவாக உடலில் கொழுப்புக்களின் தேக்கம் குறையும். அதோடு இளநீரைக் குடித்தால், உடல் தசைகளில் ஏற்கனவே தேங்கியுள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றி பயன்படுத்தி, கொழுப்பு இல்லாத தசைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும்

தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும்

எப்போது ஒருவரது தைராய்டு சுரப்பியால் போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியவில்லையோ, அப்போது உடலின் மெட்டபாலிசம் குறைவாக இருக்கும். ஆனால் இளநீரைக் குடிக்கும் போது, தைராய்டு சுரப்பியின் செயல்பாடு சிறப்பாக நடைபெற்று, உடலின் மெட்டபாலிச அளவும் சிறப்பாக இருக்கும்.

உடல் நீர்ச்சத்துடன் இருக்கும்

உடல் நீர்ச்சத்துடன் இருக்கும்

ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த இளநீர், உடலை வறட்சியின்றி நீர்ச்சத்துடன் வைத்திருக்கும். இளநீரைக் குடித்த பின் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு எழுவதோடு, குறைந்தது 1 மணிநேரத்திற்கு பசி எடுக்காமலும் இருக்கும். இதன் விளைவாக கண்ட ஜங்க் உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை அதிகரிக்காமலும் இருக்கும்.

இளநீரை எப்போது குடிப்பது நல்லது?

இளநீரை எப்போது குடிப்பது நல்லது?

* உடற்பயிற்சிக்கு பின் குடிக்கலாம்.

* அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

* மதிய உணவு அல்லது மதிய உணவிற்கு பின் குடிக்கலாம்.

* பரபரப்பான தினத்தின் இறுதியில் குடிக்கலாம்.

பயனுள்ள குறிப்புகள்

பயனுள்ள குறிப்புகள்

* இளநீரை வெட்டியதும் குடிக்க வேண்டும்.

* ஒரு நாளைக்கு மேல் சேகரித்து வைத்துக் குடிக்கக்கூடாது.

* நற்பதமான பழச்சாறுகளுடன் இளநீரை சேர்த்துக் குடிப்பது இன்னும் நல்லது.

* இளநீருடன் சர்க்கரை அல்லது செயற்கை சுவையூட்டிகள் எதையும் சேர்க்கக்கூடாது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஒருநாளைக்கு 1-2-க்கு மேல் இளநீரைக் குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வகையில் இளநீரைக் குடித்தால், உடல் எடை குறைய வாய்ப்பே இல்லை. ஒரு கப் இளநீரில் 0.5 கிராம் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் என்பவை கெட்ட கொழுப்புக்களாகும். இவை உடல் பருமனை அதிகரிக்கும். இந்த கொழுப்புக்கள் இதய நோய் அல்லது பக்கவாதத்திற்கான அபாயத்தை அதிகரிக்கும். அதேப் போல் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் இளநீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Coconut Water Good For Weight Loss?

Coconut water for weight loss is a great way to stay healthy, it is extremely important to understand that you need to opt for green coconut water for best results. Read on to know more...
Story first published: Thursday, March 22, 2018, 14:00 [IST]