For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை சீக்கிரம் குறைக்கணுமா? அப்ப இத தினமும் குடிங்க...

By Maha Lakshmi
|

எடையைக் குறைப்பது என்பது சவாலான ஒன்று எனக் கூறலாம். ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க சரிவிகித டயட் மற்றும் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியம் என பெரும்பாலான உடல்நல நிபுணர்கள் கூறுவார்கள். ஆனால் உடல் எடையைக் குறைப்பதற்கு ஒருசில உணவுப் பொருட்களும் உதவியாக இருக்கும். அந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், எதிர்பார்த்த உடல் எடையைக் குறைக்கும் இலக்கை எளிதில் அடைய முடியும்.

அதில் உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புதமான உணவுப் பொருள் தான் ஓட்ஸ். இந்த ஓட்ஸ் வெளிநாட்டில் மிகவும் பிரபலமான ஓர் உணவுப் பொருள். ஆனால் சமீப காலமாக இந்தியாவிலும் இது பிரபலமாகிவிட்டது. சொல்லப்போனால், தற்போது பலரது காலை உணவாக இருப்பதும் இந்த ஓட்ஸ் தான். ஓட்ஸ் சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஏராளமான நன்மைகளை அளித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

how to make oatmeal water to stimulate weight loss

சிலருக்கு ஓட்ஸ் சாப்பிட பிடிக்காது. இன்னும் சிலருக்கு ஓட்ஸை எப்படி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தெரியாது. மற்றும் சிலரோ உடல் எடையைக் குறைப்பதற்கு ஓட்ஸை எவ்வளவு உட்கொள்வது சிறந்த வழியாக இருக்கும் என்று தெரியாமல் இருப்பர். நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சி மேற்கொண்டு வருபவராயின், ஓட்ஸை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பானம் போன்று தயாரித்து உட்கொள்ளுங்கள். மேலும் கீழே ஓட்ஸ் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலோரி குறைவு

கலோரி குறைவு

ஓட்ஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்களான நல்ல கொழுப்புக்கள், பி வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்றவை நிரம்பியுள்ளன. மேலும் இது வயிற்றை எளிதில் நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். அதோடு இதில் கலோரிகளும் மிகவும் குறைவு.

டயட்டரி நார்ச்சத்து ஏராளம்

டயட்டரி நார்ச்சத்து ஏராளம்

ஓட்ஸ் ஒரு நார்ச்சத்து அதிகம் நிரம்பிய உணவுப் பொருள். இது உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்முறையை ஊக்குவிக்கும். அதோடு ஓட்ஸ் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும்.

கல்லீரல் செயல்பாடு

கல்லீரல் செயல்பாடு

ஓட்ஸில் கல்லீரலில் லெசித்தின் உற்பத்தியை மேம்படுத்தும் அமினோ அமிலங்கள் அதிகம். இந்த பாஸ்போலிபிட் என்னும் கொழுப்பு அமிலம், கல்லீரலால் பயன்படுத்தப்பட்டு, கல்லீரலில் சேரும் கொழுப்புக்களை செரிமான மண்டலத்திற்கு அனுப்பி செரிக்க செய்யும். இதனால் கல்லீரல் கொழுப்பு அல்லது கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் தடுக்கப்பட்டு, கல்லீரல் செயல்பாடு சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவி புரியும்.

நீர்ப்பெருக்கி

நீர்ப்பெருக்கி

ஒருவரது உடல் பருமன் அதிகரிப்பதற்கு நீர்த்தேக்கமும் ஓர் காரணம். ஓட்ஸில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளதால், இதை உட்கொண்டால், அது சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, உடல் பருமனுக்கு காரணமான உடலில் உள்ள அதிகப்படியான நீரை சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.

ஓட்ஸ் பானம் தயாரிப்பது எப்படி?

ஓட்ஸ் பானம் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

* ஓட்ஸ் - 1 கப்

* தண்ணீர் - 3 கப்

* பட்டைத் தூள் - 1 ஸ்பூன்

* தேன் - சுவைக்கேற்ப

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* முதலில் ப்ளெண்டரில் ஓட்ஸ் மற்றும் 2 கப் நீரை ஊற்றி, பின் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அதில் மேலும் சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு வடிகட்டி பயன்படுத்தி, அந்த ஓட்ஸ் கலவையை வடிகட்டிக் கொள்ளவும்.

* இறுதியில் சுவைக்கு ஏற்ப, அந்த பானத்தில் தேனை சேர்த்துக் கொள்ளலாம். இப்போது ஓட்ஸ் பானம் குடிப்பதற்கு தயார்!

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஓட்ஸ் பானம் கொண்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதற்கான சிறந்த வழி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடிப்பது தான். வேண்டுமானால், இந்த ஓட்ஸ் பானத்தை மதியம் மற்றும் இரவு வேளையில் உணவு உண்ணும் போது, நீருக்கு பதிலாக இதைக் குடிக்கலாம்.

முக்கியமாக நீங்கள் தயாரிக்கும் ஓட்ஸ் பானத்தை ஃப்ரிட்ஜில் வைத்து பராமரித்து வந்தால், ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Make Oatmeal Water To Stimulate Weight Loss

Want to know how to make oatmeal water to stimulate weight loss? Read on to know more...
Story first published: Wednesday, September 5, 2018, 17:04 [IST]
Desktop Bottom Promotion